அரசு மேஜிக் செய்யப் போகிறதா..நாமினல் ஜிடிபி 10%.. எப்படி முடியும்..ட்விட்டரில் குவியும் கேள்விகள்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Budget 2020: Finance MInister Nirmala Sitharaman Full Speech Details

டெல்லி: நடப்பு நிதியாண்டில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் ஜிடிபி விகிதம் கடந்த செப்டம்பர் காலாண்டில் ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது.

 

இந்த நிலையில் அடுத்த நிதியாண்டில் இந்தியாவின் நாமினல் ஜிடிபி விகிதம் 10% ஆக இருக்கும் என்று மத்திய அரசு கணித்துள்ளதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.

ஓரு புறம் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வரும் பொருளாதாரமும் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வரும் நிலையில் அடுத்த நிதியாண்டில் ஜிடிபி விகிதம் 5.5% மட்டுமே இருக்கும் என இந்தியா ரேட்டிங்ஸ் கணித்துள்ளது. சரி அதென்ன நாமினல் ஜிடிபி, என்னென்ன ஜிடிபி விகிதம் உள்ளது வருங்கள் பார்க்கலாம்.

முதலீட்டாளர்களைக் கவராத பட்ஜெட்.. சர்ரென வீழ்ந்தது பங்குச் சந்தை.. ரூபாய் மதிப்பும் வீழ்ச்சி!

பெயரளவிலான ஜிடிபி

பெயரளவிலான ஜிடிபி

இந்த நிலையில் மத்திய அரசானது நாமினல் ஜிடிபி என்ற பெயரளவிலான ஜிடிபி விகிதம் 10% ஆக இருக்கும் என்றும் கணித்துள்ளது. இது நடப்பு சந்தை விலையை பொறுத்து கணிக்கப்படும் ஒரு ஜிடிபி விகிதமாகும். தற்போது நாட்டில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலையினால், இந்த இலக்கை அடைய முடியுமா என்பது சந்தேகம் தான். ஏனெனில் நாட்டின் உற்பத்தி துறை, தொழில் துறை மற்றும் ஆட்டோமொபைல் துறை என ஒவ்வொரு துறையிலும் வீழ்ச்சிகள் அதிகரித்து வருகின்றன.

அதிகரித்து வரும் நடப்பு கணக்கு பற்றாக்குறை

அதிகரித்து வரும் நடப்பு கணக்கு பற்றாக்குறை

ஒரு புறம் மந்த நிலை நீடித்து வரும் நிலையில் மறுபுறம் பணவீக்கமும் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக உணவு பணவீக்கம் ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது. இந்த நிலையில் நடப்பு கணக்கு பற்றாக்குறையும் விஸ்வரூபம் எடுத்து ஆடி வருகிறது. அதிலும் அரசின் இலக்கினையும் தாண்டி வெற்றிகரமாக நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரித்து வருகின்றது.

நிதியமைச்சரின் கணிப்பு சாத்தியமானதா?
 

நிதியமைச்சரின் கணிப்பு சாத்தியமானதா?

இந்தியாவின் பணவீக்கம் அதிகரித்து வரும் இந்த நிலையில் நிதியமைச்சரின் இந்த கணிப்பு சரியானது தானா? இதை அடைய முடியுமா? எப்படி அடைய முடியும். இந்த பட்ஜெட் அதற்கு வழிவகுக்குமா? இந்த பட்ஜெட் பொருளதாரத்தினை மேம்படுத்த வழிவகுக்குமா? அரசு ஏதேனும் மேஜிக் செய்ய காத்திருக்கிறதா? என பலரும் தங்களது கருத்துகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

 இந்த நாமினல் ஜிடிபி விகிதம் மாறக்கூடியது

இந்த நாமினல் ஜிடிபி விகிதம் மாறக்கூடியது

எனினும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவும் பெயரளவு வளர்ச்சி விகிதத்திற்கு சமமானது அல்ல என்றும் பலர் சுட்டிக்காட்டியுள்ளனர். ஏனெனில் இது தற்போது விலைகளை பயன்படுத்தி கணக்கிடப்படுவது தான் இந்த நாமினல் ஜிடிபி. இந்த பெயரளவிலான ஜிடிபி விகிதமானது மாறக்கூடியது என்றும் நிபுணர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

budget 2020: Govt estimate of nominal GDP growth 10% for 2021

FM nirmala sitharaman said govt estimated nominal GDP 10% in next 2021.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X