இக்கட்டான சூழலில் பட்ஜெட் 2020.. 14 காலாண்டு ஜிடிபி ஒரு பார்வை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா தேர்தல் என்றால், இந்தியாவில் நிதித் திருவிழா தான் இந்த பட்ஜெட். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே தாக்கல் செய்யப்படும் இந்த பட்ஜெட்டால், பலரின் தலையெழுத்தே மாறும் சக்தி உண்டு இதற்கு.

இன்னும் சில தினங்களில், தாக்கல் செய்யப்பட இருக்கும் பட்ஜெட் ஏன் அவ்வளவு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்று கேட்டால் ஒரு முக்கிய பதில் இந்தியாவின் பொருளாதார மந்த நிலை.

இக்கட்டான சூழலில் பட்ஜெட் 2020.. 14 காலாண்டு ஜிடிபி ஒரு பார்வை..!

 

இந்திய பொருளாதார மந்த நிலையைச் சொல்ல வேண்டும் என்றால் அதற்கு இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி ஒன்று போதும்.

Budget 2020: பலத்த அடி வாங்கிய ஆட்டோமொபைல் துறை.. பட்ஜெட்டில் எதிர்பார்ப்புகள் என்னென்ன..!

கடந்த 2016 - 17 நிதி ஆண்டின் முதல் காலாண்டில் (ஜூன் 2016 காலாண்டில்) இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 9.2 % வளர்ச்சி கண்டது. அதற்கு அடுத்தடுத்த காலாண்டில் மெல்ல சரியத் தொடங்கியது. செப்டம்பர் 2016 காலாண்டில் 8.7 %,

டிசம்பர் 2016 காலாண்டில் 7.4 %,

மார்ச் 2017 காலாண்டில் 6.9 % என ஜிடிபி மெல்ல சரிந்தது.

அதற்கு அடுத்த நிதி ஆண்டான 2017 - 18 நிதி ஆண்டில்

ஜூன் 2017 காலாண்டில் 6.0 %

செப்டம்பர் 2017 காலாண்டில் 6.8 %,

டிசம்பர் 2017 காலாண்டில் 7.7 %,

மார்ச் 2018 காலாண்டில் 8.1 % என மீண்டும் ஒரு வழியாக ஏற்றம் கண்டது.

ஆனால் அதற்குப் பின் தொடர்ந்து சரிவு தான். கடந்த 2018 - 19 நிதி ஆண்டில்

ஜூன் 2018 காலாண்டில் 8.0 %

செப்டம்பர் 2018 காலாண்டில் 7.0 %,

டிசம்பர் 2018 காலாண்டில் 6.6 %,

மார்ச் 2019 காலாண்டில் 5.8 % என சரிந்து கொண்டே வந்தது.

இந்த சரிவு தற்போதைய 2019 - 20 நிதி ஆண்டில் இன்னும் அதிகரித்து விட்டது. கடந்த ஜூன் 2019 காலாண்டில் 5.0 % மற்றும் செப்டம்பர் 2019 காலாண்டில் ஜிடிபி வெறும் 4.5 சதவிகிதம் மட்டுமே வளர்ச்சி கண்டு இருக்கிறது.

ஆக கடந்த ஜூன் 2016 காலாண்டில் 9.2 % ஜிடிபி வளர்ச்சியில் இருந்து, கடந்த செப்டம்பர் 2019 காலாண்டில் 4.5 %-க்கு சரிந்து இருக்கிறது ஜிடிபி வளர்ச்சி. பாதிக்கு பாதி கூட வளர்ச்சி காணவில்லை.

இந்த இக்கட்டான சூழலில் தான் நம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தன் 2020 - 21 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை, வரும் சனிக்கிழமை பிப்ரவரி 01, 2020 அன்று தாக்கல் செய்ய இருக்கிறார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Budget 2020: last 14 quarterly GDP comparison

Finance Minister nirmala sitharaman is going to announce her budget on Feb 01, 2020 amidst a drastic GDP fall. The last 14 quarter GDP growth comparison.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X