பட்ஜெட் 2022.. வரி சலுகை கிடைக்குமா.. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்பார்ப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் நாளுக்கு நாள் ஓமிக்ரான் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மீண்டும் கட்டுப்பாடுகளும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

 

இதற்கிடையில் பட்ஜெட் 2022க்கான காலமும் நெருங்கிக் கொண்டுள்ளது. பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்க இருக்கும் நிலையில், அச்சத்தினை ஏற்படுத்தும் வகையில் நாடாளுமன்றத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 400 பேருக்கு கொரோனாவின் தாக்கம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தளவு கொரோனா பரவத் தொடங்கி விட்டது.

இந்தியாவில் தற்போது மூன்றாவது அலையானது வேகமாக பரவி வரும் நிலையில், கடந்த சில நாட்களாக லட்சக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

Bitcoin: 5 மாத சரிவில் இருந்து மீண்டது.. திரும்பவும் 42,000 டாலர்..!

பட்ஜெட் தாக்கல்

பட்ஜெட் தாக்கல்

இதற்கிடையில் தான் வரவிருக்கும் பிப்ரவரி 1 அன்று தனது பட்ஜெட்டை தாக்கல் செய்யவிருக்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இது அவர் தாக்கல் செய்யும் 4வது பட்ஜெட் ஆகும். கடந்த ஆண்டிலேயே கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நடப்பு ஆண்டிலும் ஓமிக்ரான் தாக்கம் பரவத் தொடங்கியுள்ளது.

வரிச் சலுகை கிடைக்குமா?

வரிச் சலுகை கிடைக்குமா?

இதன் காரணமாக கட்டுப்பாடுகள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதற்கிடையில் கடந்த ஆண்டினை போலவே இந்த ஆண்டிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும் ஏதேனும் சலுகை இருக்குமா? என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகின்றது. குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வரிச் சலுகை ஏதும் இருக்குமா? என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.

கே வளர்ச்சி
 

கே வளர்ச்சி

உலக சுகாதார அமைப்பானது சுனாமி போல வேகத்தில் பரவி வரும் ஓமிக்ரான் என கூறியுள்ளது. அதனைபோலவே இந்தியாவில் தினசரி பாதிப்பும் கூடிக் கொண்டே செல்கிறது. ஒரு வேளை பாதிப்பு அதிகரித்துக் கொண்டே சென்றால், மீண்டும் ரெசசன் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் நிபுணர்கள் பொருளாதாரம் K வடிவ வளர்ச்சி காணலாம் என கணித்துள்ளனர்.

வட்டி அதிகரிக்கலாம்

வட்டி அதிகரிக்கலாம்

இதற்கிடையில் மிகப்பெரிய லார்ஜ் கேப் நிறுவனங்களும், டெக் நிறுவனங்களும், ஸ்மால் கேப் நிறுவனங்கள், இண்டஸ்ட்ரீஸ்களை வேகமாக வளர்ச்சி காணத் தொடங்கியுள்ளன. அமெரிக்காவில் அரசானது கடந்த ஆண்டு நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக பற்பல சலுகைகளை அறிவித்தது. இது ஒரு புறம் நிறுவனங்கள் வளர்ச்சி காண காரணமாக அமைந்தாலும், அதிக பணவீக்கத்திற்கும் வழிவகுத்துள்ளது. இதற்கிடையில் தான் அமெரிக்காவின் ஃபெடரல் வங்கியானது வட்டி விகிதத்தினை முன்னதாகவே அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாமனியர்கள் எதிர்பார்ப்பு

சாமனியர்கள் எதிர்பார்ப்பு

அமெரிக்கா இப்படி செய்யும் பட்சத்தில் இந்தியாவும் அதனை செய்யலாம். இதனால் இங்கும் வட்டி விகிதம் அதிகரிக்கலாம். இது பணப்புழக்கத்தினை குறைக்கலாம். இதற்கிடையில் தொற்று நோய், வேலை இழப்பு மற்றும் வருமானம் சரிவு உள்ளிட்ட பலவும் சாமனிய மக்களை மீண்டும் பாதிக்க தொடங்கியுள்ளது. இதற்கிடையில் தான் சாமனிய மக்களுக்கு இந்த பட்ஜெட்டில் அறிவிப்புகள் இருக்குமா? என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பும் நிலவி வருகின்றது.

வரி சலுகை எப்படி?

வரி சலுகை எப்படி?

ஏப்படியிருப்பினும் கொரோனா காலத்தில் பாதிப்பு மோசமாக இருந்தால், அரசு, நிறுவனங்கள், முதலாளிகள், நண்பர்கள் என பலரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவி வருகின்றனர். குறிப்பாக நிதி உதவியினை அளித்து வருகின்றனர். இது கடந்த ஆண்டினை போல தற்போது இல்லை என்றாலும், இனி வரும் மாதங்களில் அப்படி ஒரு நிலை வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இவ்வாறு உதவி பெறுபவர்களுக்கு வரி சலுகை கிடைக்க வேண்டும். இது மக்களின் எதிர்பார்ப்பு. மேலும் மருத்துவ செலவுகளுக்கும் அரசு சலுகை அளிக்க வேண்டும்.

80டியின் கீழ் வரி விலக்கு

80டியின் கீழ் வரி விலக்கு

தற்போது வருமான வரி பிரிவு 80 டியின் கீழ் வரிச் சலுகையானது 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கிடைக்கிறது. இதனை அனைத்து தரப்பினருக்கும் கிடைக்கும் விதமாக விரிவு படுத்த வேண்டும். மேலும் பெற்றோருக்கு செலுத்தப்படும் மருத்துவ இன்சூரன்ஸ் பிரீமியத்தில், மூத்த குடிமக்களாக இருந்தால் 50,000 ரூபாய் வரையில் சலுகை கிடைக்கிறது. இதே மற்றவர்களுக்கு 25,000 ரூபாய் வரையில் தான் சலுகை கிடைக்கும். ஆக இது விரிவாக்கம் செய்யப்பட வேண்டும்.. இந்த வரிச்சலுகையானது குரூப் ஹெல்த் பாலிசியில் கிடையாது. இந்த கொரோனா காலத்தில் அனைத்து தரப்பினருக்கும் இந்த சலுகை கிடைக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Budget 2022 Expectations: FM Nirmala sitharaman could provide tax relief to covid patients & their families

Budget 2022 Expectations: FM Nirmala sitharaman could provide tax relief to covid patients & their /families/பட்ஜெட் 2022.. வரி சலுகை கிடைக்குமா.. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்பார்ப்பு..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X