இந்தியாவில் எந்தக் காலமும், எவ்வளவு விலை உயர்ந்தாலும் மவுசு குறையாத ஒரு பொருள் என்றால் இது கட்டாயம் தங்கம் தான். ஆனால் தங்கம் எந்த அளவிற்கு மக்கள் வாங்குகிறார்களோ அந்த அளவிற்கு நாட்டின் பொருளாதாரம் மற்றும் நிதி பற்றாக்குறை அளவுகள் பாதிக்கப்படும் என்பது நிதர்சனமான உண்மை.
இந்தியாவில் பெட்ரோல், டீசல் பயன்பாட்டை எந்த அளவிற்குக் குறைக்கத் திட்டமிடுகிறோமோ, அதே அளவிற்குத் தங்கத்தை வாங்குவதையும் மத்திய அரசு கட்டுப்படுத்தியாக வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.
இப்போ தங்கத்தை வாங்குவதற்குத் தடையோ, கட்டுப்பாடோ விதிக்கப்படுமா என்று நீங்கள் கேட்பது புரிகிறது, இந்தியாவில் இதெல்லாம் சாத்தியமா என்ன.. கட்டாயம் இல்லை. இதைச் சமாளிக்க மத்திய அரசு 2022-23ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட உள்ளதாகத் தெரிகிறது.
பட்ஜெட் 2022-ல் குட் நியூஸ்: வருமான வரி சலுகையில் உயர்வு.. யாருக்கெல்லாம் நன்மை..!

பட்ஜெட் 2022
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் அறிக்கையில் மத்திய அரசு வங்கி சேமிப்பு கணக்கு போலத் தங்கம் சேமிப்புக் கணக்கை அறிமுகம் செய்யத் திட்டமிட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தங்கம் சேமிப்பு கணக்கு
அதாவது மக்கள் தங்கத்தை வாங்குவதில் எவ்விதமான தடையும் கட்டுப்பாட்டையும் விதிக்காமல் தங்கத்தைத் தங்கமாக வாங்காமல் தடுக்கும் வகையில் இக்கணக்கு இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் தொடர்ந்து நடப்பு கணக்குப் பற்றாக்குறை அதிகரித்து வரும் நிலையில் இதுபோன்ற தங்கம் சேமிப்பு கணக்கு பெரிய அளவில் உதவும்.

வங்கி கணக்கு போல
இந்தப் பட்ஜெட் அறிக்கையில் அறிவிக்கப்படும் என நம்பப்படும் தங்கம் சேமிப்புக் கணக்கை வங்கிகளில் வாடிக்கையாளர்கள் திறக்க முடியும். இந்தச் சிறப்புத் தங்கம் சேமிப்புக் கணக்கில் தொடர்ந்து பணத்தை டெபாசிட் செய்ய முடியும்.

சவரன் கோல்டு பாண்ட்
வைப்புச் செய்யப்பட்ட பணம் எந்த நேரத்திலும் தற்போதைய தங்க விலையில் திரும்பப் பெறலாம், இதன் மூலம் தங்கத்தைத் தங்கமாக வாங்கும் அளவுகள் பெரிய அளவில் பெரியளவில் நம்பப்படுகிறது. மேலும் இந்தக் கணக்கில் இருக்கும் டெபாசிட் தொகைக்குச் சவரன் கோல்டு பாண்ட் போல வருடத்திற்கு 2.5 சதவீதம் வட்டியும் கிடைக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

800-850 டன் தங்கம்
இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் சுமார் 800-850 டன் அளவிலான தங்கத்தை வெளிநாட்டில் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் தங்கம் இல்லாத காரணத்தால் வெளிநாட்டு இறக்குமதியைத் தான் அதிகம் நம்பியிருக்க வேண்டிய நிலை உள்ளது.

நடப்பு கணக்குப் பற்றாக்குறை
தங்கம் இறக்குமதி செய்ய டாலர் இருப்பை அதிகளவில் செலவு செய்ய வேண்டிய கட்டாயம் இருப்பது மட்டும் அல்லாமல் நடப்பு கணக்குப் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. இதையெல்லாம் சமாளிக்கவே தங்கம் சேமிப்பு கணக்கு போன்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்வதாகக் கூறப்படுகிறது.