ரயில்வே கட்டணம் உயருமா..? பட்ஜெட் 2022ல் ரயில்வே துறைக்கு என்ன கிடைக்கும்..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் கார், பைக், பேருந்து, விமானம் என எவ்வளவு போக்குவரத்துச் சேவைகள் வந்தாலும், ரயில் சேவை மக்களுக்கு மிகவும் முக்கியமானதாகவும், அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது. இந்நிலையில் மத்திய அரசு தனியாக அறிவிக்கப்படும் ரயில்வே பட்ஜெட் அறிக்கை பொதுப் பட்ஜெட் உடன் சேர்த்தது வரலாற்று நிகழ்வாகும்.

 

ரயில்வே பட்ஜெட் அறிக்கையைப் பொதுப் பட்ஜெட் அறிக்கையுடன் சேர்க்கப்பட்டாலும், இத்துறை அளிக்கப்படும் முக்கியத்துவம் ஒருபோதும் குறைந்தது இல்லை.

இந்த 3 விஷயங்களை நிர்மலா சீதாராமன் கட்டாயம் செய்ய வேண்டும்..!

இந்த வகையில் 2022-23 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் ரயில்வே துறைக்குக் காத்திருக்கும் அறிவிப்புகள் என்ன..?

முக்கியமான கேள்வி

முக்கியமான கேள்வி

சாமானிய மக்கள் அனைவருக்கும் இருக்கும் முக்கியமான கேள்வி, மத்திய அரசு ஏற்கனவே அதிகப்படியான கடன் சுமையிலும், நிதி நெருக்கடியிலும் இருக்கும் வேளையில் வருமானத்திற்காக ரயில்வே கட்டணத்தை உயர்த்துமா என்பது தான். கொரோனா காலத்தில் கூடப் பல சில ரயில்வே கட்டணங்கள் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கட்டணம் உயராது

கட்டணம் உயராது

ஆனால் தற்போது இருக்கும் சூழ்நிலையில் இந்தியாவில் வர்த்தகம், பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றை மேம்படுத்து ஏதுவான போக்குவரத்துத் தளத்தை மக்களுக்கு உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்பதால் இந்தப் பட்ஜெட் அறிக்கையில் கட்டாயம் ரயில்வே கட்டணம் உயர்த்தப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்திய ரயில்வே துறை ரயில் கட்டணம் அல்லாத வருமானத்தை அதிகரிக்கத் திட்டமிடும்.

புல்லட் ரயில்
 

புல்லட் ரயில்

மேலும் இந்தப் பட்ஜெட்டில் மத்திய அரசு டெல்லி முதல் வாரனாசி வரையிலான புல்லட் ரயில் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும் அறிவிப்புக் கட்டாயம் இடம்பெறும். மேலும் இந்தியா முழுவதும் ரயில்வே தேவை தளத்தை மேம்படுத்தும் நேஷனல் ரயில் பிளான் 2022 கீழ் ஹைய் ஸ்பீடு ரெயில் காரிடார் உருவாக்கும் திட்டம் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

புதிய திட்டம்

புதிய திட்டம்

ரயில் பயணங்களை வேகமாகவும், பயணிகளுக்கு வசதியாகவும் மாற்றும் நோக்கத்துடன் வெளிநாடுகளைப் போலவே ஹைப்பர்லூப் தொழில்நுட்பம், எடை குறைவான அலுமினிய ரயில் பெட்டி, ஆர்டிகுலேட்டட்/டில்டிங் போகி மற்றும் ஹைட்ரஜன் எரிபொருள் அடிப்படையிலான ரயில்கள் ஆகியவற்றுக்கான திட்டத்தை மத்திய அரசு அறிவிக்க வாய்ப்பு உள்ளது.

ரயில்வே பட்ஜெட் மதிப்பு

ரயில்வே பட்ஜெட் மதிப்பு

2021-22 ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் 2.15 லட்சம் கோடி ரூபாயாக இருந்த நிலையில், பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் 2022-23ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் ரயில்வே பட்ஜெட் மதிப்பு 2.5 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Budget 2022: Is Railway passenger fare will be hike, What Indian Railways may get from budget

Budget 2022: Is Railway passenger fare will be hike, What Indian Railways may get from budget ரயில்வே கட்டணம் உயருமா..? பட்ஜெட் 2022ல் ரயில்வே துறைக்கு என்ன கிடைக்கும்..?!
Story first published: Friday, January 28, 2022, 20:51 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X