மத்திய பட்ஜெட் 2023: வீட்டு கடனில் முக்கிய அறிவிப்பு.. நடுத்தர மக்களுக்கு 'இது' கிடைக்க வாய்ப்பு அதிகம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2023-24 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய நிதி அமைச்சக அலுவலகத்திற்கு வருகை தந்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

 

பாஜக அரசின் 2024-ம் ஆண்டு தேர்தலுக்கு முந்தைய முழுமையான இறுதி பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

மத்திய பட்ஜெட் தாக்கலை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் படத்துக்குப் பூஜை செய்த மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் கிஷன்ராவ் கராத். இதைத் தொடர்ந்து நிதி அமைச்சகத்தில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் கிஷன்ராவ் கராத் நிதி அமைச்சக அலுவலகத்திற்கு வந்தார்.

இன்றைய பட்ஜெட் கூட்டத்தில் ஹோம் லோன் பிரிவில் பல முக்கியமான சலுகை வெளியிட வாய்ப்பு உள்ளது.

ஹெல்த் இன்சூரன்ஸ்-க்கு சலுகை.. பட்ஜெட் 2023 மாத சம்பளக்காரர்களுக்கான முக்கிய அறிவுப்பு இதுதான்..! ஹெல்த் இன்சூரன்ஸ்-க்கு சலுகை.. பட்ஜெட் 2023 மாத சம்பளக்காரர்களுக்கான முக்கிய அறிவுப்பு இதுதான்..!

வீட்டு கடன்

வீட்டு கடன்

இந்தப் பட்ஜெட் அறிக்கையில் வீட்டு கடன் வாங்கியவர்கள் செலுத்தும் ஈஎம்ஐ தொகையில் முக்கியமான வரிச் சலுகை அளிக்கப்பட உள்ளது. குறிப்பாக வாங்கிய கடனுக்குச் செலுத்தப்படும் வட்டி தொகைக்கு இந்தப் பட்ஜெட் அறிக்கையில் கூடுதல் சலுகை அளிக்கப்பட வாய்ப்புகள் அதிகம். இதன் மூலம் நடுத்தர மக்களுக்குக் கூடுதலான சலுகை கிடைக்க வாய்ப்பு உள்ளது.

வரிப் பணம்

வரிப் பணம்

அதாவது ஹோம் லோன்-க்குச் செலுத்தப்படும் வட்டி விகித தொகைக்கு அளிக்கப்படும் வரி சலுகையை அதிகரிக்கப்பட உள்ளது. இதன் மூலம் மக்கள் தங்கள் வரிப் பணத்தில் கூடுதல் தொகையைச் சேமிக்க முடியும்.

அனைவருக்கும் சொந்த வீடு
 

அனைவருக்கும் சொந்த வீடு

மோடி தலைமையிலான அரசு அனைவருக்கும் சொந்த வீடு அளிக்க வேண்டும் என்பதற்காகப் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் மானியம் அளிக்கப்படுகிறது.

 வரிக் குறைப்பு

வரிக் குறைப்பு

இதேபோல் மலிவு விலை வீடுகளுக்கு ஜிஎஸ்டி வரி 8 சதவீதத்தில் 1 சதவீதமாகக் குறைக்கப்பட்டு உள்ளது. பிற வீடுகளுக்கு 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக 2019 ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் குறைத்தது.

மலிவு விலை வீடுகள்

மலிவு விலை வீடுகள்

ஆனால் நகரங்களில் மலிவு விலை வீடுகள் என்ற அளவீட்டில் நகரங்களில் 45 லட்சம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது,

50 - 55 லட்சம் ரூபாய்

50 - 55 லட்சம் ரூபாய்

இதை அதிகரிக்க வேண்டும் எனப் பல தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதன் அளவீட்டை 45 லட்சம் ரூபாயில் இருந்து 50 - 55 லட்சம் ரூபாயாக உயர்த்தினால் வரிச் சலுகை அனுபவிப்பதோடு 2023 ஆம் ஆண்டில் ரியல் எஸ்டேட் துறையில் டிமாண்ட் சரியும் எனக் கூறப்படும் வேளையில் இதைச் சரி செய்து தொடர்ந்து வளர்ச்சி பாதையில் வைக்க முடியும்.

கட்டுமான பொருட்கள்

கட்டுமான பொருட்கள்

இதற்கு முக்கியமான காரணம் கட்டுமான பொருட்களின் விலைவாசி பெரிய அளவில் அதிகரித்து இருக்கும் வேளையில் 45 லட்சம் ரூபாய் என்பது நகரங்களில் ஒரு வீட்டை வாங்குவது என்பது சாத்தியம் இல்லாத ஒன்றாக உள்ளது.

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

இந்தியாவில் ரியல் எஸ்டேட் துறையைத் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் வைத்திருப்பது மூலம் பெரும் மக்கள் தொகைக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்ய முடியும். இதனால் 2023 ஆம் ஆண்டுத் துவக்கத்தில் இந்திய ரியல் எஸ்டேட் துறை குறித்து வந்த எதிர்மறையான அறிவிப்பின் தாக்கக்தை குறைக்க வேண்டும்.

மத்திய அரசு

மத்திய அரசு

இதனால் மத்திய அரசு கட்டாயம் ரியல் எஸ்டேட் டிமாண்ட் குறையாமல் பார்த்துக்கொள்ளும் என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை. இதனால் முக்கியமான அறிவிப்பு வெளியிட அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது.

டிஜிட்டல் பட்ஜெட்

டிஜிட்டல் பட்ஜெட்

பிப்ரவரி 1 ஆம் தேதி 2023-24 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் டிஜிட்டல் முறையில் அதாவது Paperless பட்ஜெட் ஆகத் தாக்கல் செய்யப்படும் என நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாகக் கொரோனா தொற்றுக் காரணமாக Paperless பட்ஜெட் ஆகத் தாக்கல் செய்யப்பட்டது, இந்த ஆண்டும் தொடரப்படுகிறது.

Union Budget மொபைல் ஆப்

Union Budget மொபைல் ஆப்

இதைத் தொடர்ந்து நாட்டின் அனைத்து மக்களுக்கும் பட்ஜெட் அறிக்கை முழுமையாகச் சென்றடைய வேண்டும் என்பதற்காக, மத்திய அரசின் Union Budget மொபைல் ஆப்-ல் பட்ஜெட் முடிந்த கையோடு பதிவேற்றம் செய்யப்படும்.

பட்ஜெட் தயாரிப்புக் குழு

பட்ஜெட் தயாரிப்புக் குழு

இந்த நிலையில் பட்ஜெட் தயாரிப்புக் குழுவில் யாரெல்லாம் இருந்தவர்களின் பட்டியல் டிவி சோமநாதன் இவர் மத்திய நிதி மற்றும் செலவின துறை செயலாளர், சஞ்சய் மல்ஹோத்ரா இவர் மத்திய வருவாய்த்துறை செயலாளர் ஆவார், அனந்த நாகேஸ்வரன் இவர் மத்திய அரசின் லைமை பொருளாதார ஆலோசகர் ஆவார், துஹின் காந்தா பாண்டே இவர் மத்திய முதலீட்டுத் மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை (DIPAM) துறையின் செயலாளர் ஆவார், அஜய் சேத் இவர் பொருளாதார விவகாரங்கள் துறையின் செயலாளர் ஆவார், விவேக் ஜோஷி இவர் நிதி சேவைகள் துறையின் செயலாளர் ஆவார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Union Budget 2023 Home loan: big announcement in real estate and home loan by FM Nirmala Sitharaman

Budget 2023 Home loan: big announcement in real estate and home loan by FM Nirmala Sitharaman
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X