மக்களை கடனாளியாக்கும் ஈகாமர்ஸ் நிறுவனங்கள்.. பிரபலமாகும் BNPL திட்டம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை ஈர்க்கவும், அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற வேண்டும் என்பதற்காக அதிகளவிலான தள்ளுபடி அளிக்கப்படுவது மட்டும் அல்லாமல் தற்போது வாடிக்கையாளர்களுக்கு அதிகளவிலான தொகைக்குக் கடன் மூலம் பொருட்களையும், சேவைகளையும் விற்பனை செய்யத் துவங்கியுள்ளது ஈகாமர்ஸ் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனங்கள்.

 

இந்நிலையில் இந்தியாவில் அடுத்தச் சில வாரத்தில் பண்டிகை கால விற்பனை துவங்க உள்ள காரணத்தை அனைத்து முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனங்களும் BNPL திட்டத்தை மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் விரிவாக்கம் செய்து வருகிறது. BNPL திட்டம் என்றால் என்ன..?

BNPL - Buy Now Pay Later

ஈகாமர்ஸ் நிறுவனங்கள்

ஈகாமர்ஸ் நிறுவனங்கள்

நாட்டின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட், அமேசான், பேடிஎம் மற்றும் ஆன்லைன் கல்வி சேவை நிறுவனமான பைஜூஸ் உட்படப் பல நிறுவனங்கள் இந்தப் பண்டிகை காலத்தில் அதிகளவிலான வாடிக்கையாளர்களும், வர்த்தகத்தையும் Buy-Now-Pay-Later (BNPL) திட்டத்தின் மூலம் பெற வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

பண்டிகை கால வர்த்தகம்

பண்டிகை கால வர்த்தகம்

முதல் கொரோனா அலை முடிந்த பண்டிகை காலகட்டத்தில் இந்திய ஈகாமர்ஸ் நிறுவனங்கள் வரலாறு காணாத வர்த்தகத்தைப் பெற்று மிகப்பெரிய வளர்ச்சியைப் பதிவு செய்த நிலையில், இந்த வருடம் வர்த்தக அளவீட்டை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக Buy-Now-Pay-Later (BNPL) திட்டத்தை மிகப்பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய வேண்டும் என முடிவு செய்துள்ளது ஈகாமர்ஸ் நிறுவனங்கள்.

ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள்
 

ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள்

இந்தக் கொரோனா காலத்தில் மக்களுக்கு ஷாப்பிங் செய்யப் பாதுகாப்பான வழி ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் மட்டுமே, ஆனால் பல கோடி மக்கள் கிரெடிட் கார்ட் இல்லாமல் இருக்கும் காரணத்தால் கடனில் பொருட்களை வாங்க முடியாமல் உள்ளனர். இதன் இடைவெளியை நீக்க வந்த திட்டம் தான் இந்த Buy-Now-Pay-Later (BNPL) திட்டம்.

ஆன்லைன் நிதியியல் சேவை நிறுவனங்கள்

ஆன்லைன் நிதியியல் சேவை நிறுவனங்கள்

இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களைக் கிரெடிட் கார்டு இல்லாமலே கடன் அடிப்படையில் வாங்க ஈகாமர்ஸ் மற்றும் ஆன்லைன் சேவை நிறுவனங்கள் அனுமதி அளிக்கிறது. பெரும்பாலான பொருட்களுக்கு வட்டியில்லாக் கடன் அளிக்கப்படும் காரணத்தால் மக்களுக்கும் மிகவும் விருப்பமான திட்டமாக மாறியுள்ளது.

நிதி ஆபத்து

நிதி ஆபத்து

பொருட்களுக்கான நிதியை ஈகாமர்ஸ் நிறுவனங்கள் தங்களின் நிதியியல் சேவை நிறுவனத்திடம் இருந்து பெறுகிறது. இந்த வர்த்தகத்தில் இருக்கும் ஆபத்துக்களை ஜெஸ்ட் மணி, சிம்பிளி, லேசிபே, பைன் லேப்ஸ், கேப்பிடல் ப்ளோட் போன் டிஜிட்டல் நிதியியல் சேவை நிறுவனங்கள் ஏற்று வருகிறது.

Buy-Now-Pay-Later (BNPL) திட்டம்

Buy-Now-Pay-Later (BNPL) திட்டம்

Buy-Now-Pay-Later (BNPL) திட்டம் மூலம் ஈகாமர்ஸ் நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்களுக்கும், வர்த்தகமும் கிடைப்பது மட்டும் அல்லாமல் இந்த ஆன்லைன் நிதியியல் சேவை நிறுவனம் வர்த்தகத்தைப் பெறுகிறது. பெரும்பாலும் ஈகாமர்ஸ் நிறுவனங்கள் நாணயமான வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த Buy-Now-Pay-Later (BNPL) திட்டத்தை அளிக்கும் காரணத்தால் நிதியியல் நிறுவனங்களுக்கும் தங்கள் கடனாக அளிக்கும் பணத்தைத் திரும்பப் பெறுகின்றனர்.

பிரம்மாண்ட வளர்ச்சி

பிரம்மாண்ட வளர்ச்சி

இந்தியாவில் Buy-Now-Pay-Later (BNPL) திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட சில மாதங்கள் மட்டுமே ஆன நிலையில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளதாகச் சந்தை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். 2019ல் சில மில்லியன் டாலர் அளவிலான வர்த்தகத்தைக் கொண்டு இருந்த BNPL திட்டம், கடந்த 18 மாதத்தில் 1.5 பில்லியன் டாலர் முதல் 2 பில்லியன் டாலர் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளது.

கூட்டணி நிறுவனங்கள்

கூட்டணி நிறுவனங்கள்

இந்த BNPL திட்டத்தைச் செயல்படுத்தக் கட்டாயம் ஈகாமர்ஸ் மற்றும் டிஜிட்டல் சேவை நிறுவனங்கள் ஒரு நிதியியல் சேவை நிறுவனத்துடன் கூட்டணி வைக்க வேண்டும். இதன் படி பிளிப்பார்ட் தனது கிளை நிறுவனமான பிளிப்கார்ட் அட்வான்ஸ் உடனும், அமேசான் நிறுவனம் கேபிடல் ப்ளோட் உடனும், பேடிஎம் நிறுவனம் ஆதித்யா பிர்லா பைனான்ஸ் உடனும், பைஜூல் லேசிபே உடனும், Unacademy கேபிடல் ப்ளோட் உடனும் கூட்டணி வைத்துள்ளது.

BNPL திட்டத்தின் ஆதிக்கம்

BNPL திட்டத்தின் ஆதிக்கம்

BNPL திட்டத்தின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பல முன்னணி தனியார் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களும் இத்தகைய திட்டத்தை அறிமுகம் செய்து புதிய வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. குறிப்பாக ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி ஆகியவை இப்பிரிவு வர்த்தகத்தில் தீவிரம் காட்டி வருகிறது. இந்தியாவில் ஸ்டார்ட்அப், என்பிஎப்சி, வங்கி எனச் சுமார் 33 நிறுவனங்கள் BNPL திட்ட சேவையை அளித்து வருகிறது.

கடன் சுமையில் சிக்கிக்கொள்ளும் நிலை

கடன் சுமையில் சிக்கிக்கொள்ளும் நிலை

இந்த Buy-Now-Pay-Later திட்டம் பலருக்கும் நல்ல வாய்ப்பாக இருந்தாலும் மக்களைக் கடன் சுமையில் தள்ளும் ஒரு கருவியாக உள்ளது. கொரோனா தொற்று மூலம் வேலைவாய்ப்பு இழப்பு, வருமானம் இழப்பு எனப் பிரச்சனைகள் இருக்கும் நிலையில் இத்தகைய திட்டத்தின் கீழ் பொருட்களை வாங்குவோர் கட்டாயம் கடன் சுமையில் தான் சிக்கிக்கொள்வார்கள். இத்திட்டத்தைப் பற்றி உங்கள் கருத்து என்ன..?

மக்களாகிய உங்கள் கருத்து என்ன..?!

மக்களாகிய உங்கள் கருத்து என்ன..?!

இது கிட்டதட்ட அனைவரும் வங்கிகள் கிரெடிட் கார்டு கொடுப்பது போலத் தான். அனைத்தும் சரியாக இருக்கும் பட்சத்தில் எவ்விதமான பிரச்சனையும் இல்லை, நிதி நிறுவனங்கள் வட்டியை வசூலித்தாலோ, வாடிக்கையாளர்கள் பணத்தைச் செலுத்தவில்லை என்றாலோ இரு தரப்புக்கும் பிரச்சனை தான்.

6 வருட காலத்தில் அசாதரணமான வளர்ச்சி.. எஸ்பி வேலுமணி தொடர்புடைய நிறுவனங்கள் 11,363% வரை வளர்ச்சி..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Buy Now Pay Later getting bigger for the festive season: Is this healthy for online shoppers

Buy Now Pay Later getting bigger for the festive season: Is this healthy for online shoppers
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X