இந்திய வங்கிகளில் தொடர்ந்து அதிகரித்து வரும் வாராக் கடன் சுமையைக் குறைக்கவும், வாராக் கடனுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட பிரத்தியேக அமைப்பு தான் NARCL.
இந்த அமைப்பு வங்கிகளிடம் இருந்து வாராக் கடன்களைப் பெற்று விரைவில் தீர்வு காணும், இதனால் பொதுத்துறை வங்கிகளில் பெரிய சுமை குறைக்கும்.
தங்கம் வாங்க இது தான் சரியான நேரம்.. நிபுணர்களின் பளிச் கணிப்பு..!

ரூ.50000 கோடி வாராக் கடன்
நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் அதாவது மார்ச் 31 ஆம் தேதிக்குள் மத்திய நிதியமைச்சகம் திட்டமிடல் உடன் உருவாக்கப்பட்ட தேசிய சொத்து மறுசீரமைப்பு நிறுவனமான NARCL அமைப்பிற்கு 50000 கோடி ரூபாய் மதிப்பிலான 15 வாராக் கடன் கணக்குகளை மாற்றப்பட உள்ளது.

NARCL அமைப்பு
இதைத் தொடர்ந்து மத்திய நிதியமைச்சகத்தின் திட்டமிடலின் படி முதற்கட்டமாக 38 கணக்குகள் அடங்கிய 83,000 கோடி ரூபாய் அளவிலான வாராக் கடன்களை NARCL அமைப்பிற்கு மாற்றப்படும் என ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தலைவர் தினேஷ் காரா தெரிவித்துள்ளார்.

வாராக் கடன்
கடந்த வருடம் 2 லட்சம் கோடி ரூபாய் அளவிலான கடனை NARCL அமைப்பிற்கு மாற்றப்படத் திட்டமிட்ட நிலையில் தற்போது முதற்கட்டமாக 83,000 கோடி ரூபாய் அளவிலான கடனை மட்டுமே பெற முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த வாராக் கடன்களுக்குத் தீர்வு காணப்பட்ட பின்பு அடுத்த கட்ட பணிகளையும், புதிய கடன்களைப் பெற உள்ளது இந்த அமைப்பு.

தினேஷ் காரா
மேலும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தலைவர் தினேஷ் காரா கூறுகையில், ஏற்கனவே NARCL அமைப்பிற்கு மாற்ற வேண்டும் எனத் திட்டமிட்ட சில கடன்களுக்குக் கடந்த வரும் தீர்வு காணப்பட்ட நிலையில் மாற்றப்படும் வாராக் கடன் அளவீடு குறைந்துள்ளது. மேலும் அடுத்த நிதியாண்டில் கூடுதலான கடனை மாற்றத் திட்டமிட்டு உள்ளதாகக் கூறியுள்ளார்.