ஜவுளித் துறைக்கு ரூ.10,683 கோடி மதிப்பிலான புதிய திட்டம்.. 7.5 லட்சம் பேருக்கு புதிய வாய்ப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மத்திய அரசு தொழிற்துறையினரை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு விதமான அறிவிப்புகளை கொடுத்து வருகின்றது.

 

அந்த வகையில் தற்போது ஜவுளித்துறையினரை ஊக்குவிக்கும் விதமாக 10,000 கோடி ரூபாய்க்கு மேலாக திட்டத்தினை அறிவித்துள்ளது.

இந்த திட்டத்தில் என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளன. மற்ற முக்கிய விவரங்கள் என்னென்ன வாருங்கள் பார்க்கலாம்.

அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. முதல்வர் ஸ்டாலின் செம அறிவிப்பு..!

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

ஜவுளித் துறையில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியினை ஊக்குவிக்கும் விதமாகவும், 10,683 கோடி ரூபாய் மதிப்பிலான உற்பத்தி சார்ந்த மானிய திட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக 7.5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மறைமுக வாய்ப்புகள்

மறைமுக வாய்ப்புகள்

மேலும் அரசின் இந்த திட்டம் மூலம் பல லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் ஜவுளித் துறையினரை ஊக்குவிக்கும் விதமாக, இத்திட்டத்தின் ஒரு பகுதியினை அடுத்து ஐந்து ஆண்டுகளுக்கு இந்த தொகை பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உற்பத்தி திட்டம்
 

உற்பத்தி திட்டம்

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஜவுளி, எம்.எம்.எஃப் ஆடைகள் (man-made fibre), எம்.எம்.எஃப் துணிகள், தொழில் நுட்ப ஜவுளி பொருட்கள் உள்ளிட்ட 10 பொருட்களுக்கு இந்த திட்டத்தில் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த PLI திட்டத்தின் மூலம் அதிக மதிப்புள்ள எம்.எம்.எஃப் ஆடைகள் (man-made fibre) துணிகள் மற்றும் தொழில் நுட்ப ஜவுளிகள் என உற்பத்தி செய்யப்படவுள்ளன.

எவ்வளவு முsதலீடு

எவ்வளவு முsதலீடு

அடுத்த 5 ஆண்டுகளில் உற்பத்தி சாந்த மானிய திட்டத்தினால் 19,000 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளோடு, 3 லட்சம் கோடி ரூபாய் டர்ன் ஓவர் ஆகலாம் என அரசு மதிப்பிட்டுள்ளது.

உண்மையில் இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாட்டில் தொழில் துறையை மேம்படுத்த, இதுபோன்ற ஊக்குவிப்பு திட்டங்கள் நல்ல விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

பட்ஜெட்டிலேயே அறிவிப்பு

பட்ஜெட்டிலேயே அறிவிப்பு

மத்திய அரசு நடப்பு நிதியாண்டின் பட்ஜெட் அறிக்கையில், 13 துறைகளுக்கு 1.97 லட்சம் கோடி மதிப்பில் திட்டங்களை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மானிய திட்டமும் அறிவிக்கப்பட்டு வருகின்றது. அரசின் இந்த PLI திட்டம் காரணமாக நாட்டின் குறைந்தபட்ச உற்பத்தி மதிப்பானது, 37.5 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

டயர் 3, டயர் 4 நகரங்களில் முதலீடு

டயர் 3, டயர் 4 நகரங்களில் முதலீடு

மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு டயர் 3, டயர் 4 நகரங்களில் முதலீடு செய்ய முன்னுரிமை கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜவுளித் துறையில் பெரும்பாலான பெண்கள் பணிபுரிந்து வரும் நிலையில், அரசு இந்த திட்டத்தின் மூலம் பெண்களையும் ஊக்குவிக்கும். இதன் மூலம் பொருளாதாரத்தில் பெண்களின் பங்கினை அதிகரிக்கும்.

எந்தெந்த மாநிலங்களுக்கு பயன்

எந்தெந்த மாநிலங்களுக்கு பயன்

குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, பஞ்சாப், ஓடிசா போன்ற மாநிலங்களுக்கு இந்த திட்டம் உதவிகரமானதாக இருக்கும் என மத்திய அரசு தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது. இதன் மூலம் இந்தியா சர்வதேச அளவில் இந்தியா தனது நிலையை உயர்த்த வழிவகுக்கும். குறிப்பாக பாரம்பரிய தொழிலாளாக ஜவுளித் தொழிலை உலகமெங்கும் எடுத்து செல்ல பயனுள்ளதாக இருக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Cabinet approves new Rs.10,683 cr PLI scheme for textile sector

PLI scheme latest updates.. Cabinet approves new Rs.10,683 cr PLI scheme for textile sector
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X