இராணுவ உபகரணங்களை லீஸ்-க்கு எடுக்க தூண்டும் நிதி நெருக்கடி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்று நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியிலும் இந்திய மக்கள் சற்று நிம்மதியாக இருக்கிறார்கள் அதற்கு காரணம், எல்லையில் நமக்காக போராடும் லட்சக்கணக்கான வீரர்கள் தான்.

 

கண்ணுக்கு தெரியாத கொரோனா மற்றும் எதிராலிகளுடன் போராடும் அவர்கள், பல நெருக்கடியான சூழலில் மக்களுக்கு பாதுகாப்பாக தங்களது பணியை செய்து வருகின்றனர்.

ஆனால் இப்படிப்பட்ட இராணுவத்துக்கு பிரதமர் மோடி தலைமையிலான அரசும், மிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றது. இராணுவத்திற்கு தேவையான தளவாடங்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய முனைப்பு காட்டி வருகின்றது. பல நாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்து, ராணுவத்தின் பலத்தினை இன்னும் அதிகரித்து வருகின்றது.

குத்தகைக்கு எடுக்க திட்டமா?

குத்தகைக்கு எடுக்க திட்டமா?

இப்படியிருக்கும் நிலையில் நிலவி நிதி நெருக்கடியான நிலை காரணமாகவும், உற்பத்தி தாமதம் காரணமாகவும் இராணுவ உபகரணங்கள் மற்றும் ட்ரோன்கள் குத்தகைக்கு எடுக்க முயற்சி செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் எதுவும் வெளியாகவில்லை.

இராணுவ உபகரணங்கள்

இராணுவ உபகரணங்கள்

குறிப்பாக வான்வழியில் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் விமானங்கள் மற்றும் பயிற்சி விமானங்கள், டிரோன்கள், லைட் ஹெலிகாப்டர்கள், கண்ணிவெடிகள் வரையிலும், அவசர தேவைகளுக்கு மத்தியில் குத்தகைக்கு எடுக்க முனைந்து வருவதாகவும் டைம்ஸ் ஆப் இந்தியா செய்திகள் கூறுகின்றது. இது நிலவி வரும் நிதி நெருக்கடிக்கு மத்தியில் இந்த செயல்பாடு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

குத்தகைக்கு ட்ரோன்கள்
 

குத்தகைக்கு ட்ரோன்கள்

உதாரணத்திற்கு இராணுவம் தற்போது இஸ்ரோலுடன் நான்கு ஆளில்லா வான் வழி (Heron Mark-II medium-altitude long endurance UAVs) விமானங்களை குத்தகைக்கு பேசி வருவதாகவும் தெரிவித்துள்ளது. எனினும் இதே நேரத்தில் கடற்படையின் டிரோன்களை மேம்படுத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க நிறுவனத்திடம் இருந்து ட்ரோன்

அமெரிக்க நிறுவனத்திடம் இருந்து ட்ரோன்

கடந்த நவம்பரில் ஒரு அமெரிக்க நிறுவனத்திடமிருந்து இரண்டு MQ-9B Sea Guardian drones, நீண்ட தூர கண்கானிப்பு பணிக்காக குத்தகைக்கு எடுத்துள்ளது. இது சீனாவுடனான மோதல்களுக்கு மத்தியில், இந்தியா- அமெரிக்கா இடையேயான நெருக்கம் அதிகரித்து வருகிறது. இதன் அடையாளமாக, இந்தியப்பெருங்கடல் பிராந்தியத்தில் கண்காணிப்புக்காக அமெரிக்க நிறுவனத்திடமிருந்து இந்தியா இரண்டு ட்ரோன்களை குத்தகைக்கு எடுத்தது.

அமெரிக்கா உதவி

அமெரிக்கா உதவி

மேலும், இந்த ட்ரோன்களை இயக்குவதற்கான உதவிகளை டிரோன்களை குத்தகைக்கு வழங்கிய அமெரிக்க நிறுவனத்தைச் சேர்ந்த குழு வழங்கும் எனத் தெரிவித்த அந்த வட்டாரம், இந்த ட்ரோன்கள் ஒரு வருட காலத்திற்கு குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

மேக் இன் இந்தியா திட்டம்

மேக் இன் இந்தியா திட்டம்

அதோடு கடல்சார் படையானது சமீபத்தில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு, 24 இரட்டை எஞ்சின் பொருத்தப்பட்ட லைட் ஹெலிகாப்டர்களையும், பராமரிப்பு சேவையுடன் சேர்த்து ஐந்து ஆண்டுகளுக்கு குத்தகை விடுமாறு கூறியதும் குறிப்பிடத்தக்கது. இது 21,000 கோடி ரூபாய் மதிப்பிலான மேக் இன் இந்தியா திட்டமானது தாமதமாகியுள்ள நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: india army இந்தியா
English summary

Cash crunch forces military to take equipment on lease: check details

Cash crunch forces military to take equipment on lease: check details
Story first published: Wednesday, May 12, 2021, 23:25 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X