போர்டு-மஹிந்திரா கூட்டணிக்கு ஒப்புதல்.. ஆனந்த் மஹிந்திரா செம குஷி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் 4வது பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமான திகழும் போர்டு மோட்டார்ஸ் இந்தியாவை விட்டு மொத்தமாக வெளியேற முடிவு செய்த நிலையில் ஆனந்த் மஹிந்திரா தலைமை வகிக்கும் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா போர்டு நிறுவனத்திற்குக் கைகொடுத்தது.

 

இந்நிலையில் இரு நிறுவனங்களும் இணைந்து ஒரு புதிய கூட்டணி உருவாக்கி அதில் போர்டு நிறுவனத்தின் வர்த்தகம், தொழிற்சாலை, உற்பத்தி தளம் ஆகிய அனைத்தையும் இணைத்து மஹிந்திராவும் அதனைப் பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

இப்புதிய கூட்டணி நிறுவனத்தை உருவாக்கவும், வர்த்தகம் மற்றும் உற்பத்தி தளத்தை இரு நிறுவனங்களும் பயன்படுத்திக்கொள்ள ஒப்புதல் பெற வேண்டி இருந்த நிலையில், தற்போது இக்கூட்டணி நிறுவனத்திற்கு CCI அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் போர்டு மற்றும் மஹிந்திரா நிறுவனம் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

புதிய வர்த்தகத்தில் உபர்.. தப்பித்தது ஓலா..!

போர்டு மோட்டார்ஸ்

போர்டு மோட்டார்ஸ்

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் வர்த்தகம் செய்யும் போர்டு மோட்டார்ஸ் இந்தியாவிலும் வர்த்தகம் செய்து வருகிறது. போர்டு மோட்டார்ஸ் அதிக அளவிலான மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்யாவிட்டாலும் இந்நிறுவனத்தின் சில முக்கியமான கார்களின் விற்பனை குறையாமல் இருப்பது போர்டு-இன் வலிமை என்ற சொல்ல வேண்டும், அதிலும் முக்கியமாக ford endeavour கார்.

இந்திய வர்த்தகம்

இந்திய வர்த்தகம்

இந்தியாவில் வர்த்தகம் பெரிய அளவில் குறைந்த நிலையிலும், அமெரிக்க நிர்வாகம் தொடர்ந்து செலவுகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையைச் செய்தும் வரும் நிலையில் போர்டு மோட்டார்ஸ் இந்திய வர்த்தகத்தை விட்டு வெளியேற முடிவு செய்தது. இந்தியாவில் இருக்கும் சில சதவீத வர்த்தகத்தைக் கைவிட மனமில்லாத போர்டு மோட்டார்ஸ், வர்த்தகத்தை முழுமையாக வேறு நிறுவனத்திற்குக் கைமாற்ற முடிவு செய்தது போர்டு மோட்டார்ஸ்.

பங்கீடு
 

பங்கீடு

போர்டு மோட்டார்ஸ் தனது இந்திய வர்த்தகம் மற்றும் உற்பத்தி என அனைத்து விதமான பணியில் இருந்தும் தனது தலையீட்டை விலகும் காரணத்தால் இது வளரும் பல ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்குச் சாதகமான வாய்ப்பு. இந்த வாய்ப்பை தவறவிடாமல் ஆனந்த் மஹிந்திரா கைப்பற்றினார். தற்போது உருவாக்கப்படும் புதிய கூட்டணி நிறுவனத்தில் மஹிந்திரா 51 சதவீத பங்குகளும், போர்டு 49 சதவீத பங்குகளையும் பெற உள்ளது.

தொழிற்சாலை

தொழிற்சாலை

இந்தியாவில் போர்டு மோட்டார்ஸ் நிறுவனத்திற்குச் சென்னையிலும், குஜராத் மாநிலத்தின் சனந்த் பகுதியிலும் தலா ஒரு தொழிற்சாலை உள்ளது. இப்புதிய வர்த்தகப் பங்கீட்டில் சனந் தொழிற்சாலை இல்லாமல் அதைப் போர்டு நிறுவனமே நேரடியாகக் கண்காணிக்க முடிவு செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம் போர்டு அடுத்தச் சில வருடத்தில் 11 பில்லியன் டாலர் பணத்தைச் சேமிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

CCI gives nod to Ford and Mahindra joint venture

The competition watchdog on Monday gave its approval to the formation of a joint venture between Ford Motor and Mahindra and Mahindra and the subsequent transfer of the automotive business of Ford India to the new venture.
Story first published: Wednesday, February 12, 2020, 8:24 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X