இனி யாரும் தப்பிக்க முடியாது.. அனைத்து ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: ரயில்வே துறை அடுத்த மார்ச் 2022ம் ஆண்டுக்குள் அனைத்து ரயில் நிலையங்களிலும், அனைத்து ரயில் பெட்டிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என்றும் ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் இதற்கான டெண்டர்களை இந்திய ரயில்வே கொண்டுள்ளதாகவும் ரயில்வே வாரியத் தலைவர் விகே யாதவ் கடந்த திங்கட்கிழமையன்று தெரிவித்துள்ளார்.

இனி யாரும் தப்பிக்க முடியாது.. அனைத்து ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமரா..!

 

இது குறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய யாதவ், இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் நாடு முழுவதிலும் உள்ள 503 ரயில் நிலையங்களில் இதுவரை சிசிடிவிக்களை பொருத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் நாடு முழுவதிலும் உள்ள ரயில் நிலையங்களில் அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கேமாராக்களை பொருத்துவதற்காக நிர்பயா திட்டத்தின் கீழ் 500 கோடி ரூபாயை ரயில்வே துறை பெற்றுள்ளது என்றும் யாதவ் கூறியுள்ளார். மேலும் 6,100க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் 58.600 பெட்டிகளில் சிசிடிவி கேமாராக்களை பொருத்த ரயில்வே நிர்வாகம் 2000 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளதாகவும் யாதவ் தெரிவித்துள்ளார்.

வருட கடைசியிலும் வீழ்ச்சிதானா.. சற்றே ஆறுதல் கொடுக்கும் இந்திய ரூபாய்..!

குற்றவாளிகளை அடையாளம் காண ரயில்வே துறைக்கு இந்த செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படும் என்றும் யாதவ் தெரிவித்துள்ளார். மேலும் தனியுரிமை பிரச்சனைகள் மற்றும் பயணிகளின் கண்கானிப்பு குறித்து விளக்கம் அளித்த யாதவ், ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள் பொதுவான இடங்களில் பொருத்தப்படும் என்றும் யாதவ் கூறியுள்ளார்,. எனினும் இது பயணிகளின் தனியுரிமைகளில் சமரசம் செய்யாது என்றும் தெரிவித்துள்ளார்.

ரயில்வேயின் சரியான நேரத்தை பற்றி பேசிய யாதவ், 690 சதவிகித என்ஜின்கள், ரியல் டைம் தகவல் அமைப்புடன் நிறுவப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் அடுத்த ஆண்டுக்குள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து முடிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் தானியங்கி விளக்கப்படம் தயாரித்தல் மற்றும் பயணிகள் ரயில் தகவல்களுக்காக, இஸ்ரோவுடன் இணைந்து ஆர்டிஐஎஸ் வேகமாக கண்கானிக்கப்பட்டு வருகிறது. இன்று வரை நாங்கள் ஆர்டிஐஎஸ் அமைப்பை 2,700க்கும் மேற்பட்ட மின்சார என்ஜின்கள் மற்றும் 3,800 டீசல் என்ஜின்களில் நிறுவியுள்ளோம் என்றும் யாதவ் தெரிவித்துள்ளார்.

ரயில்வே உற்பத்தி பிரிவுகள் தனியார் மயமாக்கும் கேள்விக்கு பதிலளித்த யாதவ், அப்படி ஒரு திட்டம் எதுவும் இல்லை என்றும் தெளிபடுத்தியுள்ளார். நாங்கள் ரயில்வேயை தனியார்மயமாக்க போவதில்லை. ஆனால் நாங்கள் நிறுவனமயமாக்கல் குறித்து விவாதங்களை நடத்தி வருகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

CCTV camera soon at all Indian railways station said railway board chairman

CCTV camera at all Indian railways stations said railway board chairman by March 2022. By the December this year installed CCTVs at 503 railway station across the country, said VK yadav.
Story first published: Tuesday, December 31, 2019, 12:23 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X