சிமெண்ட் விற்பனை சூடுபிடித்தது.. 6 நாளில் 33% உயர்வில் இந்தியா சிமெண்ட்ஸ்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் வர்த்தக வளர்ச்சிக்காகவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும் மத்திய அரசு பல்வேறு கட்டுமான மற்றும் உள்கட்டமைப்புகள் திட்டத்தை வகுத்து வந்தாலும், பெரிய அளவிலான திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை எனக் கருத்து நிலவிய நிலையில், கொரோனா-வின் தாக்கம் ஏற்பட்டது.

 

கொரோனா தாக்கத்தால் நாடு முழுவதும் ஊரடங்கு விதிக்கப்பட்ட நிலையில் நாட்டில் ஆங்காங்கே செயற்பட்டு வந்த கட்டுமான திட்டங்களும் முடங்கிவிடச் சிமெண்ட் உற்பத்தியும், வர்த்தகமும் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டது.

ஆனால் தற்போது சிமெண்ட் தேவை அதிகரித்து, விற்பனை அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது

லாக்டவுனில் மேட்ரிமோனி நிறுவனங்களுக்கு ஏகபோக வர்த்தகம்..!

லாக்டவுன் 4.0

லாக்டவுன் 4.0

இந்நிலையில் நடைமுறையில் இருக்கும் 4வது முறையாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டுப் பல்வேறு தளர்வுகள் கொடுக்கப்பட்ட நிலையில் கிராமம் மற்றும் டவுன் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கட்டுமான திட்டங்கள் அனைத்தும் தற்போது மீண்டும் துவங்கியுள்ளது.

இதனால் சிமெண்ட் விற்பனை நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிகரித்துள்ளதாகத் தெரிகிறது.

மே மாதம்

மே மாதம்

இந்தியாவில் மே மாதத்தின் முதல் 2 வாரத்தில் நாட்டில் சில இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்ட வீடுகள் மட்டும் அல்லாமல் சாலை மற்றும் நெடுஞ்சாலை பணிகளும் துவங்கப்பட்டு உள்ளது.

இதனால் இந்தியாவில் தற்போது கட்டுமான பொருட்கள் மற்றும் சிமெண்ட் சேவை அதிகரித்து, மார்ச் மாத வர்த்தகத் தொய்வுக்குப் பின் அடுத்தச் சில வாரங்களில் முழுமையாக மீண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பங்குச்சந்தை
 

பங்குச்சந்தை

இதன் எதிரொலியாக இந்தியா சிமெண்ட்ஸ், அல்ட்ரா டெக், அம்புஜம் சிமெண்ட்ஸ், ஸ்ரீ சிமெண்ட்ஸ், ஏசிசி, ராம்கோ சிமெண்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் மும்பை பங்குச்சந்தையில் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்று பங்கு மதிப்பு வளர்ச்சியை அடைந்துள்ளது.

லாக்டவுன் காலத்திலேயே அதிகளவிலான விற்பனை ஏற்பட்டுள்ள நிலையில் லாக்டவுனுக்குப் பின் அதிகளவிலான வர்த்தகம் ஆகும் என நம்பப்படுகிறத, இதன் காரணமாகத் தான் தற்போது சிமெண்ட் நிறுவன பங்குகள் அதிகளவிலான வளர்ச்சியைச் சந்தித்து வருகிறது.

ராதாகிஷன் தமனி

ராதாகிஷன் தமனி

இந்தக் கணக்கில் தான் டிமார்ட் நிறுவன தலைவரும், பங்குச்சந்தை முதலீட்டாளருமான ராதாகிஷன் தமனி மற்றும் அவரது சகோதரர் குடும்பங்கள் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 19.89 சதவீத பங்குகளைக் கைப்பற்றியுள்ளனர்.

இதன் எதிரொலியாக வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் இந்தியா சிமெண்ட்ஸ் பங்கு விலை 6 சதவீதம் உயர்ந்து 134.40 என்ற 2 வருட உச்ச வளர்ச்சியை அடைந்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் கடந்த 6 நாட்களில் மட்டும் சுமார் 33 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது இந்தியா சிமெண்ட்ஸ் பங்குகள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Cement demand increased by higher rural consumption: India Cements soars 33% in 6 days

Shares of India Cements hit a 2-year high of Rs 134.40, up 6 per cent on firday. In the past six trading days, it has rallied 33 per cent, as compared to a 1.4 per cent decline in the S&P BSE Sensex. On May 14, 2020, India Cements announced that Radhakishan S Damani, promoter of D-Mart supermarkets' chain, along with Gopikishan S Damani, has increased the stake in the company to 19.89 per cent
Story first published: Saturday, May 23, 2020, 16:09 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X