இந்த பொருட்களுக்கு எல்லாம் ஜிஎஸ்டி வரி உயர்வு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் மறைமுக வரியை மொத்தமாக மாற்றிச் சரக்கு மற்றும் சேவை வரி என அழைக்கப்படும் ஜிஎஸ்டி வரி அமலாக்கம் செய்யப்பட்டு 4 வருடங்கள் ஆன நிலையிலும், இன்னமும் மத்திய நிதியமைச்சகம் மற்றும் ஜிஎஸ்டி கவுன்சில் இணைந்து முறையாகவும், உறுதியாகவும் வரியை விதிக்க முடியாத நிலையில் தான் உள்ளது.

 

ஒவ்வொரு ஜிஎஸ்டி கூட்டத்திலும் வரி விதிப்பில் தொடர்ந்து மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய மறைமுக வரி மற்றும் சுங்கத் துறை வெள்ளிக்கிழமை புதிய வரி மாற்றங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வங்கி வட்டியை விட அதிகம்.. 8% வரையில் வருமானம் கொடுக்கும் தொடர் வைப்பு நிதி திட்டங்கள்.. !

தற்போது வெளியாகியுள்ள புதிய அறிவிப்பில் சோலார் மாடியூல், பழச்சாறு கார்பனேடெட் குளிர்பானம், மருந்து பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை உயர்த்தியுள்ளது.

புதுப்பிக்கத்தக்க எனர்ஜி

புதுப்பிக்கத்தக்க எனர்ஜி

இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எனர்ஜி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என அரசு அமைப்புகள் முதல் தனியார் அமைப்புகள் வரையில், தனிநபர் உட்பட அனைத்து தரப்பிலும் திட்டமிட்டு அதற்கான பணிகளைச் செய்து வரும் நிலையில் இப்பிரிவு கருவிகளின் விலை அதிகரிக்கும் வரையில் வரி உயர்த்தப்பட்டு உள்ளது.

12 சதவீதமாக வரி உயர்வு

12 சதவீதமாக வரி உயர்வு

நேற்று வெளியான அறிவிப்பில் புதுப்பிக்கத்தக்க எனர்ஜி கருவிகளான சோலார் பேனல், சோலார் மாடியூல், பயோ கேஸ் பிளான்ட், சோலார் பவர் ஜெனரேட்டார், காற்றாலை, சோலார் விளக்கு, அலை மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் கருவிகள், பிளன்ட்கள், கருவிகள் ஆகியவற்றுக்குத் தற்போது 5 சதவீத வரி இருக்கும் போது இதை 12 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது.

கான்டிராக்ட்
 

கான்டிராக்ட்

இதைத் தொடர்ந்து தற்போது நடைமுறையில் இருக்கும் திட்டத்தின் கான்டிராக்ட்-ல் 70 சதவீத மதிப்பைச் சரக்கு விநியோகமாகக் கருதப்பட்டு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. ஆனால் நேற்று வெளியான அறிவிப்பின் படி இதன் அளவு 12 சதவீதமாக உயர்த்தப்பட உள்ளது.

கார்பனேடெட் குளிர்பானம்

கார்பனேடெட் குளிர்பானம்

மேலும் பழச்சாறுகளின் கார்பனேடெட் குளிர்பானம் அல்லது கார்பனேடெட் குளிர்பானத்தில் கலக்கப்பட்ட பழச்சாறுக்கு இனி 28 சதவீத ஜிஎஸ்டி வரி மற்றும் 12 சதவீத செஸ் விதிக்கப்பட உள்ளது. அதாவது கார்பனேடெட் டிரிக்ஸ்-க்கு கூடுதல் வரி விதிக்கப்படுகிறது. இதன் மூலம் உள்நாட்டுப் பழச்சாறு குளிர்பானங்கள் தயாரிப்போருக்கு லாபம் மற்றும் வர்த்தகம் அதிகமாக வாய்ப்பு உள்ளது.

உலோகம் மற்றும் மருந்து

உலோகம் மற்றும் மருந்து

மேலும் காப்பர் மற்றும் இதர உலோகங்களின் கான்சென்டிரேட்டர்களுக்குத் தற்போது இருக்கும் 5 சதவீத ஜிஎஸ்டி வரி அளவு 18 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது. மேலும் டிசம்பர் 31 வரையில் கொரோனா தொற்றைக் குணப்படுத்து அனைத்து மருந்துகளுக்கும் வரி குறைக்கப்பட்டு உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Center ordered GST hike on Renewable energy devices including solar panels, solar lamp and others

Center ordered GST hike on Renewable energy devices including solar panels, solar lamps
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X