பிஎப் பணம் 'இப்போது' செலுத்த வேண்டாம்.. நிறுவனங்களுக்கு ரூ. 12,000 கோடி நிதியுதவி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா பாதிப்பின் காரணமாக இந்தியா முழுவதும் பல கோடி நிறுவனங்கள் வர்த்தகம் மற்றும் வருவாய் இழந்து கடுமையான நிதிநெருக்கடியை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு, ஊழியர்களின் பெயரில் மாதம் மாதம் செலுத்தப்படும் பிஎ பணம் செலுத்தக் கால நீட்டிப்பு செய்துள்ளது. இந்த நீட்டிப்பு மூலம் பல ஆயிரம் நிறுவனங்கள் இயங்க சுமார் 12,000 கோடி ரூபாய் அளவிலான நிதி உடனடியாகக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மத்திய அரசின் இந்த அறிவிப்பால் ஊழியர்களுக்கு எவ்விதமான பாதிப்பும் இல்லை.

கால நீட்டிப்பு

கால நீட்டிப்பு

மத்திய அரசு தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் பிஎப் கணக்கில் செலுத்தப்படும் பணத்தை 30 நாள் அவகாசம் பெற்றும் செலுத்தலாம் என அறிவித்துள்ளது. இதன் மூலம் நிறுவனங்களுக்குக் கூடுதலான நிதி, வர்த்தகத்திற்குக் கிடைக்கும் என ஈபிஎப்ஓ அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிதியைக் கொண்டு நிறுவனங்கள் தங்களின் வர்த்தகக் கடனை முறையாகச் செலுத்த முடியும். இதனை நினைவில் வைத்துத் தான் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

24 சதவீத தொகை

24 சதவீத தொகை

நிறுவனங்கள் ஊழியர்களின் அடிப்படை சம்பளம் மற்றும் HRAவில் 24 சதவீத தொகையைத் தான் பிஎப் கணக்கில் செலுத்தும். இதில் 12 சதவீதம் ஊழியர்கள் பங்கீடாகவும், 12 சதவீதம் நிறுவன பங்கீடாகவும் இருக்கும்.

மார்ச் மாதத்திற்கான தொகையை ஏப்ரல் 15ஆம் தேதி நிறுவனங்கள் செலுத்த வேண்டிய நிலையில் தற்போது 30 நாள் கூடுதல் அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது.

 12,000 கோடி ரூபாய்
 

12,000 கோடி ரூபாய்

ஒவ்வொரு மாதம் ஈபிஎப்ஓ அமைப்பிற்கு ஊழியர்கள் கணக்கிற்குச் சுமார் 12,000 முதல் 12,500 கோடி ரூபாய் அளவிலான நிதி வருகிறது. இந்த நிதி அடுத்த 30 நாட்களுக்கு நிறுவனங்கள் கையில் தான் இருக்கப்போகிறது. இதனால் நிறுவனங்கள் இந்த நிதியைக் கொண்டு சரிவர இயங்க உதவும் என்பது தான் இந்த அறிவிப்பின் அடிப்படை நோக்கம்.

இதையும் தாண்டி, இந்தத் தளர்வுகளின் மூலம் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்குச் சம்பளத்தை முழுமையாகக் கொடுக்க முடியும் என்பதும் இதில் அடங்குகிறது.

30 நாள் நீட்டிப்பு

30 நாள் நீட்டிப்பு

மத்திய அரசு அறிவித்துள்ள இந்த 30 நாள் நீட்டிப்பு அடுத்த மாதம் வரையில் நீட்டிக்கப்பட உள்ள நிலையில் நிறுவனங்களுக்குக் குறைந்த கால நிதியாகச் சுமார் 24,000 கோடி ரூபாய்க் கிடைக்கிறது. இது கண்டிப்பாக நிறுவனங்கள் தங்களது நிதி நெருக்கடியில் இருந்து மீண்டு வர நிச்சயம் உதவும் என ஈபிஎப்ஓ அமைப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Centre eases PF submission deadline, giving firms ₹12,000 cr boost

The Centre on Wednesday pushed back the deadline for depositing monthly statutory provident fund deductions of millions of workers that will allow thousands of establishments to have an immediate liquidity benefit of around ₹12,000 crore.
Story first published: Thursday, April 16, 2020, 7:14 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X