பான் எண் மட்டும் அல்ல.. விரைவில் வாக்காளர் அடையாள அட்டையும் ஆதார் உடனுடன் இணைக்க வேண்டி வரலாம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி : தேர்தல் நடைமுறை சீர்திருத்தத்தின் முக்கிய முடிவாக வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்கும் பணியை மத்திய அரசு கையில் எடுத்துள்ளது.

 

மேலும் வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான சட்டப்பூர்வ அதிகாரத்தை, தேர்தல் ஆணையத்திற்கே வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதற்கான தீர்மானத்தை தயார் செய்யும் பணியில் மத்திய சட்டத் துறை அமைச்சகம் இறங்கியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

முக்கிய திருத்தம் கொண்டு வர முடிவு

முக்கிய திருத்தம் கொண்டு வர முடிவு

மேலும் சட்டத்துறை அமைச்சகம் தீர்மானத்தை தயார் செய்த பிறகு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்படும் என்றும் கூறப்படுகிறது. இது தேர்தல் நடைமுறை சீர்திருத்தத்தில் மிக முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது. மேலும் இவற்றில் உள்ள சிக்கலை தவிர்க்க ஆதார் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

போலி அட்டைகளை நீக்க முடியும்

போலி அட்டைகளை நீக்க முடியும்

இவ்வாறு ஆதார் எண்ணுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைப்பதால், போலியான வாக்காளர் அட்டைகளை அடையாளம் காண முடியும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த திருத்தம் உள்நாட்டில் புலம் பெயர்ந்து வாழும் தொழிலாளர்கள் அனைவரும் தாங்கள் வசிக்கும் இடத்தியிலேயே வாக்களிக்க இந்த சீர்திருத்தம் வழிவகை செய்யும் என்றும் கூறப்படுகிறது.

இணைப்பு கட்டாயமா?
 

இணைப்பு கட்டாயமா?

வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் இணைப்பு கட்டாயம் அல்ல என்று கடந்த 2018ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்து இருந்தது. இந்த தடையை உடைக்கும் விதமாக சட்டத் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று மத்திய சட்டத் துறை அமைச்சகத்தை தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது. இது ஆதார் பான் இணைப்பை போலவே விரைவில் கட்டாயமாக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் ஆணையம் பரிசீலனை

தேர்தல் ஆணையம் பரிசீலனை

இவ்வாறு ஆதார் எண் - வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு மூலம், பாதுகாப்பாக மின்னணு முறையில் ஓட்டளிப்பது சாதகமாக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இது தவிர உள்நாட்டு தொழிலாளர்கள், வேலைக்காக வெளிநாடு சென்றவர்கள், தங்களது ஓட்டை பதிவு செய்வதற்கு உதவும். அவர்களின் அடையாளம் உறுதி செய்த உடன், தொழில்நுட்ப வசதிகளுடன் ஓட்டளிப்பது குறித்த வாய்ப்புகளை தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது

இணைக்கும் பணி கைவிடல்

இணைக்கும் பணி கைவிடல்

கடந்த 2015ம் ஆண்டு தேசிய வாக்காளர் பட்டியல் சீர்திருத்த திட்டத்தின்படி, வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை அரசு துவக்கியது. ஆனால் 32 கோடி ஆதார் எண்களை இணைத்த நிலையில், ஆதார் பயன்பாட்டிற்கு எதிராக உச்சநீதிமன்றம் விதித்த கெடுபிடிகள் காரணமாக, பின்னர் அந்த பணியை கைவிட்டது.

அமைச்சரவை ஒப்புதல் கொடுக்குமா?

அமைச்சரவை ஒப்புதல் கொடுக்குமா?

ஆனால் கடந்த ஆண்டு ஆதார் சட்டத்தில் திருத்தம் செய்து, ஆதார் எண்களை சேகரிக்கலாம் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் எண் இணைப்பது தொடர்பாக சட்டத்துறை அமைச்சகத்திற்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியது. இதனை கொள்கை அளவில் ஏற்று கொண்ட சட்டத்துறை அமைச்சகம், அமைச்சரவை ஒப்புதலுக்கு குறிப்பு அனுப்ப தற்போது நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஆக எப்படியேனும் விரைவில் இதுவும் அமலுக்கு கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது போலி வாக்காளர் அட்டைகளை களைய உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Centre government plans to link aadhaar with voter id

Central government tells Election commission it will amend laws to aadhaar with voter Ids to enable remote voting
Story first published: Wednesday, February 19, 2020, 19:15 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X