70 வருடம் சேர்த்த சொத்துக்களை மத்திய அரசு விற்கிறது.. ப.சிதம்பரம் அதிரடி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மோடி தலைமையிலான மத்திய அரசு வெளியிட்ட தேசிய பணமாக்கல் திட்டம் குறித்து அரசியல் தலைவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தற்போது காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், இந்தியாவின் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் இத்திட்டத்தைக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

 

டெஸ்லா-வுக்கு அடித்த ஜாக்பாட்.. இறங்கி வரும் மத்திய அரசு..!

ப.சிதம்பரம்

ப.சிதம்பரம்

மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம், 70 வருடங்களாக உருவாக்கிய சொத்துக்களைக் குறிப்பிட்ட சிலரின் கைகளுக்கு அளித்து அடமானம் வைக்கப்படுகிறது. இந்தத் திட்டம் குறித்த ஆபத்துக்களை மக்கள் தெரிந்துகொண்டு, கடுமையாக எதிர்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

asset stripping திட்டமா

asset stripping திட்டமா

பொருளாதாரத்தில் asset stripping என்ற கான்செப்ட் உள்ளது, இது தான் தற்போது இந்தியாவில் மத்திய அரசு செய்கிறது. இந்தத் திட்டம் குறித்து எவ்விதமான கலந்துரையாடல் செய்யப்படவில்லை, நாடாளுமன்றத்தில் எவ்விதமான விவாதம் நடக்கவில்லை, இதுகுறித்து விவாதத்தையும் அரசு அனுமதிக்கவில்லை. கேள்விகள் எழுப்பப்பட்டாலும் பிரதமர் மோடியோ அல்லது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்-ஓ பதில் அளிக்கமாட்டார்கள் எனவும் ப.சிதம்பரம் பேசியுள்ளார்.

தேசிய பணமாக்கல் திட்டம்
 

தேசிய பணமாக்கல் திட்டம்

கடந்த மாதம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் நித்தி அயோக் அமைப்பின் தலைவரும் இணைந்து தேசிய பணமாக்கல் திட்டத்தை வெளியிட்டனர். இத்திட்டத்தின் மூலம் அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் சொத்துக்கள் அதாவது சாலை, ரயில்வே, மின்சார உற்பத்தி தளம் மற்றும் விநியோக சொத்துக்கள், விமான நிலையம் ஆகியவற்றைத் தற்காலிகமாக விற்பனை செய்து அதன் மூலம் 6 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதியை திரட்ட உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

 காங்கிரஸ் அரசு

காங்கிரஸ் அரசு

காங்கிரஸ் அரசும் அரசு சொத்துக்களை விற்பனை செய்துள்ளது, ஆனால் அது அனைத்தும் Non Core சொத்துகள், அதிக நஷ்டத்தில் இயங்கும் சொத்துகள், சந்தையில் ஆதிக்கம் அதன் குறைவாக இருக்கும் சொத்துக்களைத் தான் விற்பனை செய்துள்ளோம் என ப.சிதம்பரம் பேசினார்.

கொங்கன் ரயில்வே

கொங்கன் ரயில்வே

ஆனால் மோடி அரசு அனைத்து முக்கியமான சொத்துக்களை விற்பனை செய்கிறது. தற்போது வெளியிட்டுள்ள தேசிய பணமாக்கல் திட்டத்தில் கொங்கன் ரயில்வே, டெல்லி - மும்பை சரக்கு போக்குவரத்துத் தளத்தை விற்பனை செய்கிறது.

வருவாய் ஈட்டித்தரும் சொத்துக்கள்

வருவாய் ஈட்டித்தரும் சொத்துக்கள்

தற்போது அரசு விற்பனை செய்யப்படும் சொத்துக்கள் அனைத்தும் அரசுக்கு வருவாய் ஈட்டித்தரும் சொத்துக்கள். தேசிய பணமாக்கல் திட்டத்தில் விற்பனை செய்யப்படும் சொத்துக்கள் அரசுக்கு எவ்வளவு வருமானம் ஈட்டி தருகிறது என்பதை ஏன் வெளியிடவில்லை எனவும் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

6 லட்சம் கோடி ரூபாய்

6 லட்சம் கோடி ரூபாய்

தற்போது வெளியிட்டுள்ள திட்டத்தின் படி எந்தத் துறையில் எவ்வளவு மதிப்பிலான சொத்துகளை அடுத்த 4 வருடத்தில் பணமாக்க மத்திய அரசு தேர்வு செய்துள்ளது என்பதை இப்போது பார்ப்போம்.

சாலை - 1,60,200 கோடி ரூபாய்

ரயில்வே - 1,52,496 கோடி ரூபாய்

மின்சாரப் பரிமாற்றம் - 45,200 கோடி ரூபாய்

மின்சார உற்பத்தி - 39,832 கோடி ரூபாய்

இயற்கை எரிவாயு பைப்லைன் - 24,462 கோடி ரூபாய்

பிராடெக்ட் பைப்லைன் - 22,504 கோடி ரூபாய்

டெலிகாம் - 35,100 கோடி ரூபாய்

கிடங்கு - 28,900 கோடி ரூபாய்

சுரங்கம் - 28,747 கோடி ரூபாய்

விமானப் போக்குவரத்து - 20,782 கோடி ரூபாய்

துறைமுகம் - 12,828 கோடி ரூபாய்

ஸ்டேடியம் - 11,450 கோடி ரூபாய்

நகர ரியல் எஸ்டேட் - 15,000 கோடி ரூபாய்

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Centre selling govt assets that built over the last 70 years: P Chidambaram

Centre selling govt assets that built over the last 70 years: P Chidambaram
Story first published: Friday, September 3, 2021, 17:48 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X