ஒரே நாளில் ராஜினாமா செய்த Pornhub சிஇஓ மற்றும் சிஓஓ... அறிக்கை காரணமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் மிகப்பெரிய ஆபாச இணைய தளமான Pornhub நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் தலைமை இயக்க அதிகாரி ஆகிய இருவரும் ஒரே நாளில் திடீரென ராஜினாமா செய்துள்ளனர்.

 

இது குறித்து அவர்கள் தங்களுடைய ராஜினாமா கடிதத்தில் சொந்த விருப்பத்தின் அடிப்படையில் ராஜினாமா செய்ததாக கூறி இருந்தாலும் அவர்களது ராஜினாமாவுக்கு பின் ஒரே ஒரு அறிக்கை தான் காரணம் என்று கூறப்படுகிறது.

ஒரு அறிக்கை வெளியான ஒருசில மணி நேரங்களில் தான் Pornhub நிறுவனத்தின் சிஇஓ மற்றும் சிஓஓ ராஜினாமா செய்துள்ளதாக தெரிகிறது.

எலான் மஸ்க் எடுத்த முடிவுக்கு அதிருப்தி: இந்தியாவின் முக்கிய அதிகாரி ராஜினாமா!

Pornhub

Pornhub

உலகம் முழுவதும் வயது வந்தோருக்கான இணைய தளமாக இருந்து வருவது Pornhub இணையதளம். இந்த இணையதளத்தின் தாய் நிறுவனமாக MindGeek என்ற நிறுவனத்தின் சிஇஓ ஃபெரஸ் அன்டன் மற்றும் சிஓஓ டேவிட் டாசில்லோ ஆகிய இருவரும் திடீரென தங்களது பதவியை ராஜினமா செய்து விட்டனர்.

ராஜினாமா

ராஜினாமா

ஒரே நாளில் ஒரு நிறுவனத்தின் சிஇஓ மற்றும் சிஓஓ ஆகிய இரண்டு பெரிய பதவியாளர்கள் ராஜினாமா செய்திருப்பது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது. இந்த நிலையில் இருவரது ராஜினாமாவுக்கு என்ன காரணம் என்று வெளியான தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நியூ யார்க்கர்
 

நியூ யார்க்கர்

நியூ யார்க்கர் என்ற நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டதாகவும் அந்த அறிக்கை வெளியான ஒரு சில நிமிடங்களில் Pornhub நிறுவனத்தின் சிஇஓ மற்றும் சிஓஓ தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆபாச படங்கள்

ஆபாச படங்கள்

சுமார் 8000 வார்த்தைகள் கொண்ட அந்த அறிக்கையில் Pornhub இணையதளத்தில் குழந்தைகளின் ஆபாச படங்களை ஒளிபரப்புவதாகவும் குழந்தைகள் அனுமதி இன்றி ஆபாச படங்கள் படமாக்கபடுவதாகவும் வெளியிடப்பட்டு இருந்தது. இந்த அறிக்கை வெளியான ஒரு சில மணி நேரத்தில் தான் சிஇஓ மற்றும் சி.ஓஓ தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர்.

விதிமுறை மீறல் இல்லை

விதிமுறை மீறல் இல்லை

இந்த நிலையில் Pornhub நிறுவனத்தின் தாய் நிறுவனமான MindGeek நிறுவனம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியபோது, 'எங்களது இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் ஒவ்வொரு வீடியோவும் வழிகாட்டு விதிமுறைகளின்படி தான் வெளியிடப்படுகிறது என்றும் இந்த வீடியோவில் இருக்கும் யாரும் குழந்தைகள் அல்லது மைனர்கள் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

விளக்க அறிக்கை

விளக்க அறிக்கை

மேலும் வீடியோவில் காட்டப்படும் நபர் தங்களது முழு சம்மதத்தை தெரிவித்த பின்னரே வீடியோ எடுக்கப்படுவதாகவும், நியூ யார்க்கர் வெளியிட்டுள்ள அறிக்கை தங்களது நிறுவனத்தின் செயல்பாட்டுக்கு முற்றிலும் முரணாக இருக்கிறது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய சிஇஓ

புதிய சிஇஓ

இந்த நிலையில் Pornhub நிறுவனத்தின் புதிய சிஇஓ மற்றும் சிஇஓவுக்கான தேடல் நடந்து வருவதாகவும் இன்னும் ஓரிரு நாட்களில் புதிய சிஇஓ மற்றும் சிஇஓ பதவி ஏற்பார் என்றும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

CEO and COO of Pornhub company resign!

CEO and COO of Pornhub company resign! | ஒரே நாளில் ராஜினாமா செய்த Pornhub சிஇஓ மற்றும் சிஓஓ... அறிக்கை காரணமா?
Story first published: Friday, June 24, 2022, 16:19 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X