ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் மற்றும் தெலுகு தேசம் கட்சியின் தலைவராக இருக்கும் என் சந்திரபாபு நாயுடு-க்கு அதிக இண்ட்ரோ தேவை இல்லை.
கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஒவ்வொரு வருடமும் தன் சொத்துக் கணக்குகளை வெளியிடுவதை, ஒரு வழக்கமாக வைத்திருக்கிறார் சந்திரபாபு.
அதுவும் மார்ச் 31 வரையான விவரங்களை தொகுத்து, செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் வெளியிடுவார்.

கொஞ்சம் லேட் தான்
இந்த முறை, கடந்த மார்ச் 31, 2019 வரையான கணக்கு வழக்குகளை கடந்த வியாழக்கிழமை தான் வெளியிட்டு இருக்கிறார். சுமார் நான்கு மாத காலம் தாமதமாக தன் சொத்துக் கணக்குகளை வெளியிட்டு இருக்கிறார் என்றாலும் கவனிக்க சில சுவாரஸ்ய தகவல்கள் இருக்கின்றன. இந்த முறை பொது மக்களுக்கு ஷாக் கொடுக்கும் விதத்தில் என்ன சொல்லி இருக்கிறார் என்பதைத் தான் இந்த கட்டுரையில் பார்க்க இருக்கிறோம்.

சந்திரபாபு நாயுடு
சுமாராக 42 வருடம் அரசியலில் பல முக்கிய பதவிகளை வகித்த, முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடுவின் மொத்த சொத்து மதிப்பு கடந்த மார்ச் 31, 2019 கணக்குப் படி 9 கோடி ரூபாய் தானாம். ஹைதராபாத் ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் இவருக்கு சொந்தமாக இருக்கும் சுமார் 8.01 கோடி ரூபாய் மதிப்பிலான வீட்டையும் கணக்கில் எடுத்துக் கொண்ட பின்னும் சொத்து மதிப்பு இவ்வளவு தான் இருக்கிறதாம்.

கடன் வேறு
இது போக, சந்திரபாபு, தன் சொந்த கிராமமான நரவாரிபள்ளி, சித்தூர் மாவட்டத்தில், 23.8 லட்சம் ரூபாய் மதிப்புக்கு ஒரு வீடு வைத்திருக்கிறாராம். ஒரு 1983 மாடல் அம்பாசிடர் கார் வைத்திருக்கிறார். அது போக 74 லட்சம் ரூபாயை வங்கிக் கணக்குகளைல் வைத்திருக்கிறாராம்.

முதலமைச்சருக்கே கடனா?
முன்னாள் முதல்வராக இருந்தாலும் சந்திரபாபு-க்கு 5.13 கோடி ரூபாய் கடன் இருக்கிறதாம். இந்த 5 கோடி ரூபாயில் வீட்டுக் கடனும் அடக்கமாம். ஆக (9.0 - 5.13 = 3.87) மொத்த சொத்தில் கடன் எல்லாம் போக 3.87 கோடி தான் சந்திரபாபுவின் நிகர சொத்து மதிப்பாம்.

எல்லாம் மனைவி பெயரில்
சந்திரபாபுவின் மனைவி நர புவனேஸ்வரியின் பெயரில் 50.62 கோடி ரூபாய்க்கு சொத்து பத்துக்கள் இருக்கிறதாம். இவர் பெயரில் தமிழகத்தில், தெலுங்கானாவில் கூட சொத்து பத்துக்கள் இருக்கிறதாம். அது போக ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனத்தின் பங்குகள், தங்கம், வெள்ளி என எல்லாம் இதில் அடக்கம். புவனேஸ்வரி பெயரில் 11.04 கோடி ரூபாய் கடன் இருக்கிறதாம் ஆக நிகர சொத்து மதிப்பு 39.58 கோடி ரூபாயாம்.

மகன் பெயரில்
சந்திரபாபு-வின் மகன் மற்றும் தெலுகு தேசம் கட்சியின் பொதுச் செயலாளர் நர லோகேஷ், பெயரில் மொத்தம் 24.7 கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் இருக்கிறதாம். அப்பாவின் ஜூப்லி ஹில்ஸ் பங்களாவில் ஒரு பங்கு மகனுக்கும் இருக்கிறதாம். அதோடு ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனத்தின் பங்குகள், ரங்கா ரெட்டி மாவட்டத்தில் விவசாய நிலம், ஒரு பண்னை வீடு என எல்லாம் இதில் அடக்கம்.

சொகுசு கார்கள்
அப்பாவைப் போல இல்லாமல், மகன் லோகேஷ், இரண்டு குண்டு துளைக்காத கார்களை வைத்திருக்கிறார். 1. டொயோட்டா ஃபார்ட்யூனர் மற்றும் 2. ஃபோர்ட் ஃபியஸ்டா. இவர் பெயரில் இருக்கும் கடன் 5.7 கோடியாம். ஆக நிகர சொத்து மதிப்பு 19 கோடி ரூபாயாம்.

மருமகள் பெயரில்
சந்திரபாபுவின் மகன் லோகேஷுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது ஒரு குட்டிப் பேரனும் இருக்கிறான். சந்திரபாபுக்கு மருமகளாகக் கிடைத்தது தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் மகள் பிராம்னி. இப்போது அவர் பெயரில் சுமாராக 15.68 கோடி ரூபாய் சொத்து இருக்கிறதாம். சென்னை மற்றும் ரங்கா ரெட்டி பகுதிகளில் சொத்து பத்துக்கள், ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவனத்தின் பங்குகள் போன்றவைகள் இதில் அடக்கம். இவருக்கு கடனாக 4.17 கோடி ரூபாய் இருகிறதாம். எனவே நிகர சொத்து மதிப்பு 11.5 கோடி ரூபாய்.

ஹைலைட் இவர் தான்
ஏற்கனவே சொன்னது போல லோகேஷ் - பிராம்னி தம்பதிக்கு பிறந்த குழந்தை தான் நர தேவான்ஷ். இந்த குட்டி பையனுக்கு 5 வயது இருக்கலாம். இந்த குட்டி பையன் பெயரில் 19.4 கோடி ரூபாய் சொத்து இருக்கிறதாம். ஜீப்லி ஹில்ஸ் பகுதியில் இருக்கும் நிலம், வங்கி ஃபிக்ஸட் டெபாசிட், ஹெரிடேஜ் ஃபுட்ஸ் நிறுவன பங்குகள் எல்லாம் இதில் அடக்கமாம்.

என்னய்யா இது
ஒப்பிட்டுப் பார்த்தால், ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபுவின் பெயரில் இருக்கும் 3.8 கோடி ரூபாய் நிகர சொத்தை விட, அவர் பேரன் தேவான்ஷ் பெயரில் 5 மடங்கு அதிகமாக 19.4 கோடி ரூபாய் சொத்து இருக்கிறது. அவ்வளவு ஏன்..? சந்திரபாபுவின் மகன் லோகேஷ் பெயரில் இருக்கும் சொத்துக்களை விட பேரன் பெயரில் தான் நிகர சொத்து மதிப்பு அதிகமாக இருக்கிறது என்றா பார்த்துக் கொள்ளுங்களேன்.

மொத்தம் எவ்வளவு
சந்திரபாபு நாயுடு - 3.87 கோடி ரூபாய்
நர புவனேஸ்வரி - 39.58 கோடி ரூபாய்
நர லோகேஷ் - 19.0 கோடி ரூபாய்
நர பிராம்ணி - 11.51 கோடி ரூபாய்
நர தேவான்ஷ் - 19.42 கோடி ரூபாய் என நிகர சொத்து மதிப்புகள் இருக்கின்றன. மொத்தம் 93.38 கோடி ரூபாய்க்குச் சொத்து பத்துக்கள் இருக்கின்றனவாம்.