சென்னை நிறுவனத்தில் பில்கேட்ஸ் முதலீடு.. அடடே செம செம..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னையில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் முதலீடு செய்வோர் எண்ணிக்கையும், முதலீட்டு அளவும் பெரிய அளவில் அதிகரித்துள்ளது.

 

இந்த நிலையில் சென்னையைச் சேர்ந்த கேலிடோஃபின் (Kaleidofin) என்னும் ஸ்மார்ட் கடன் சேவை அளிக்கும் நிறுவனம் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ்-ன் அறக்கட்டளை சுமார் 5 மில்லியன் டாலர் தொகையை நேரடியாக முதலீடு செய்துள்ளது.

ஐஸ்கிரீம் விற்பனையில் புதிய சாதனை.. தனியார் நிறுவனங்களுக்கு டஃப் கொடுக்கும் ஆவின்!

கேலிடோஃபின்

கேலிடோஃபின்

பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் முதலீடு நிறுவனம் பிற ஏஞ்சல் முதலீட்டாளர்கள் மற்றும் ஏற்கனவே உள்ள முதலீட்டாளர்கள் ஆகியோரிடம் இருந்து கேலிடோஃபின் (Kaleidofin), ஒரு ஃபின்டெக் நிறுவனம் சிரியஸ் பி முதலீட்டுச் சுற்றில் சுமார் 10 மில்லியன் டாலர் முதலீட்டைத் திரட்டியுள்ளது.

பில் & மெலிண்டா கேட்ஸ்

பில் & மெலிண்டா கேட்ஸ்

ஜனவரியில், நிறுவனம் மைக்கேல் & சூசன் டெல் அறக்கட்டளையின் தலைமையில் சிரியஸ் பி முதலீட்டுச் சற்றில் திரட்டப்பட்ட 10 மில்லியன் டாலரில் 50 சதவீதம் அதாவது 5 மில்லியன் டாலர் தொகையைப் பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை வாயிலாகத் திரட்டியுள்ளது.

கேலிடோஃபின் 23 மில்லியன் டாலர்
 

கேலிடோஃபின் 23 மில்லியன் டாலர்

இன்றுவரை கேலிடோஃபின் (Kaleidofin) சுமார் 23 மில்லியன் டாலர் தொகையை முதலீடாகத் திரட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கேலிடோஃபின் (Kaleidofin) நிறுவனம், முறைசாராத் துறை (informal sector) வாடிக்கையாளர்களுக்கான கடன் சேவை அளிக்க இந்தச் சுற்றின் முதலீட்டைப் பயன்படுத்தும்.

கடன் சேவை

கடன் சேவை

கேலிடோஃபின் (Kaleidofin) நிறுவனம் 2020 ஆம் ஆண்டில் முறைசாரா துறை வாடிக்கையாளர்களை நிதியியல் வலிமையை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் கடன் வழங்கும் KiScoreTM என்னும் வடிவத்தை அறிமுகப்படுத்தியது. இதன் அடிப்படையில் சுமார் 6300 கோடி ரூபாய் அளவிலான கடனை அளித்துள்ளது.

சென்னை

சென்னை

இந்தியாவில் ஸ்டார்ட்அப் சந்தைகள் தற்போது சென்னையைத் தாண்டி பிற நகரங்களுக்கு வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. குறிப்பாகச் சென்னையில் 2022ஆம் அண்டின் முதல் 3 மாத காலகட்டத்தில் மட்டும் சுமார் 26 முதலீட்டு ஒப்பந்தங்கள் மூலம் 1.1 பில்லியன் டாலர் முதலீட்டைப் பெற்றுள்ளது.

4வது இடம்

4வது இடம்

இதன் மூலம் முதலீட்டு அளவில் 473 சதவீத வளர்ச்சியும், ஒப்பந்தங்கள் பிரிவில் 271 சதவீத வளர்ச்சியும் பதிவு செய்துள்ளது. 2022ஆம் ஆண்டில் அதிகம் முதலீட்டை பெற்ற ஸ்டார்ட்அப் சந்தைகளில் சென்னை 1.1 பில்லியன் டாலர் முதலீட்டு உடன் 4வது இடத்தைப் பெற்று அசத்தியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Chennai based Kaleidofin gets funding from Bill & Melinda Gates, Michael & Susan Dell Foundations

Chennai based Kaleidofin gets funding from Bill & Melinda Gates, Michael & Susan Dell Foundations சென்னை நிறுவனத்தில் பில்கேட்ஸ் முதலீடு.. அடடே செம செம..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X