Chennai Gold Rate: மீண்டும் எவரெஸ்டைத் தொட்ட தங்கம் விலை! பவுனுக்கு எவ்வளவு ஏற்றம்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் கலாச்சாரம், உணவு, உடை, பழக்க வழக்கங்கள் என பல்வேறு வேறுபாடுகள் இருந்தாலும்... கிரிக்கெட், தங்கம் (Gold) போன்ற விஷயங்களில் ஏறக்குறைய எல்லோரும் ஒரே உணர்வோடு தான் இருப்பார்கள்.

தங்கம், இந்திய குடும்பங்களின் ஒரு அங்கம். அதனாலேயே, உலக தங்க வியாபாரத்தில் எப்போதும் நமக்கு ஒரு முக்கிய இடம் உண்டு.

அப்படிப்பட்ட தங்க காதலர்களாகிய நாம், இன்றைய Chennai Gold rate-ஐப் பற்றித் தெரிந்து கொள்ளவில்லை என்றால் எப்படி? இதோ விவரங்கள்..!

சென்னை தங்கம் விலை நிலவரம்
 

சென்னை தங்கம் விலை நிலவரம்

தென் இந்தியாவின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றான சென்னையில் 10 கிராம் (24 கேரட்) தங்கத்தின் விலை 49,150 ரூபாய்க்கு விற்கிறார்கள். அதே போல 10 கிராம் (22 கேரட்) தங்கத்தின் விலை 45,080 ரூபாய்க்கு விற்கிறார்களாம். அப்படி என்றால் பவுனுக்கு எவ்வளவு.

சென்னையில் தங்கம் விலை என்ன - பவுனுக்கு

சென்னையில் தங்கம் விலை என்ன - பவுனுக்கு

1 கிராம் தங்கம் (24 கேரட்) விலை 4,915 ரூபாய் என்கிற கணக்கில் பவுனுக்கு 39,320 ரூபாய்க்கு விற்கிறார்களாம். அதே போல 1 கிராம் தங்கம் (22 கேரட்) விலை 4,508 என்கிற கணக்கில் பவுனுக்கு 36,064 ரூபாய்க்கு விற்கிறார்களாம். 24 கேரட் 1 கிராம் தங்கத்தின் உச்ச விலையே 4,915 தான். அந்த விலையை மீண்டும் தொட்டு நம்மை பங்கம் செய்திருக்கிறது தங்கம்.

தங்கம் விலை நிலவரம்

தங்கம் விலை நிலவரம்

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை (24 கேரட் 1 கிராம்) - 4,915 ரூபாய்

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை (22 கேரட் 1 கிராம்) - 4,508 ரூபாய்

சர்வதேச தங்கம் விலை (ஒரு அவுன்ஸ், டாலரில்) - 1,737 டாலர்

சர்வதேச தங்கம் விலை (ஒரு அவுன்ஸ், ரூபாயில்) - 1,31,348 ரூபாய்

MCX ஜூன் ஃப்யூச்சர் காண்டிராக்ட் - 46,530 ரூபாய்

தங்கம் விலை இன்று - சர்வதேசம் டாலர்
 

தங்கம் விலை இன்று - சர்வதேசம் டாலர்

நேற்று மே 29, 2020-ல் அதிகபட்சமாக, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை, சர்வதேச சந்தையில் 1,737 டாலர் வரைத் தொட்டு வர்த்தகமாகி இருக்கிறது. ஆனால் வர்த்தக நேர முடிவில், சர்வதேச தங்கம் விலை 1,730 டாலருக்கு நிறைவடைந்து இருக்கிறது. வரும் திங்கட்கிழமை இதே போல விலை ஏற்றம் தொடருமா என்பதை கவனித்தால், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை என்ன ஆகும் என்பதைச் சொல்லிவிடலாம்.

தங்கம் விலை இன்று - சர்வதேசம் ரூபாய்

தங்கம் விலை இன்று - சர்வதேசம் ரூபாய்

இந்திய ரூபாயில், சர்வதேச அளவில் வர்த்தகமாகும், 31.1 கிராம் (ஒரு ட்ராய் அவுன்ஸ்) தங்கம் விலை, நேற்று 29 மே 2020 அன்று அதிகபட்சமாக 1,31,348 ரூபாயைத் தொட்டு வர்த்தகமாகி இருக்கிறது. ஆனால் வர்த்தக நேர முடிவில் கொஞ்சம் இறக்கம் கண்டு 1,30,564 ரூபாய்க்கு நிறைவடைந்து இருக்கிறது.

தங்கம் விலை இன்று - MCX

தங்கம் விலை இன்று - MCX

நேற்று, மே 29, 2020, இந்தியாவின் எம் சி எக்ஸ் சந்தையில் வர்த்தகமாகும் ஜூன் 2020, 10 கிராம் ஃப்யூச்சர்ஸ் தங்க காண்டிராக்ட்டின் விலை 46,530 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது. அதே போல, ஆகஸ்ட் மாத காண்டிராக்டின் விலை 47,069 ரூபாய்க்கு நிறைவடைந்து இருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Chennai gold rate today 30th May 2020

Chennai Gold rate Today: Here you can get the complete information about Chennai gold rate as on 30th may 2020 as well as international and MCX Gold rate in Tamil
Story first published: Saturday, May 30, 2020, 15:34 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more