ரூ.300 கோடி கருப்பு பணம்.. சென்னை நிறுவனத்தில் வருமான வரி துறை சோதனை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வருமான வரித்துறை மற்றும் ஜிஎஸ்டி அமைப்பு நாடு முழுவதும் தொடர்ந்து சோதனை செய்து வரும் நிலையில் பல முறைகேடுகள் மற்றும் மோசடிகளை கண்டுப்பிடித்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் மத்திய நேரடி வரி அமைப்பு செப்டம்பர் 23ஆம் தேதி செய்த ஆய்வில் மிகப்பெரிய அளவிலான கருப்பு பணம் மற்றும் முறைகேடுகள் செய்துள்ளது கண்டுப்பிடித்துள்ளது.

 

தங்கம் விலை படிப்படியாக சரிவு.. இப்போது வாங்குவது சரியா..?!

இந்த தரவுகள் தற்போது மத்திய நேரடி வரி அமைப்பு அதிகாரிப்பூர்வமாக வெளியிட்டுள்ள நிலையில் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய நேரடி வரி அமைப்பு

மத்திய நேரடி வரி அமைப்பு

மத்திய நேரடி வரி அமைப்பு சென்னையில் செப்டம்பர் 23ஆம் தேதி 2 நிதியியல் குழுமங்களுக்கு சொந்தமான சுமார் 35 இடத்தில் சோதனை செய்தது. இந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத 300 கோடி ரூபாய் அளவிலான கருப்பு பணத்தை கண்டுப்பிடித்துள்ளது. சோதனை நடத்தப்பட்ட இடத்தில் இருந்து 9 கோடி ரூபாய் அளவிலான ரொக்க பணத்தையும் கைப்பற்றியுள்ளது வரி துறை.

நிதியியல் குழுமங்கள்

நிதியியல் குழுமங்கள்

இவ்விரு நிதியியல் குழுமங்கள் மற்றும் அதன் கிளை நிறுவனங்கள் இணைந்து தமிழ்நாட்டில் இருக்கும் பல பெரும் கார்பரேட் நிறுவனங்களுக்கும், பல வர்த்தக நிறுவனங்களுக்கும் பெரிய அளவிலான பணத்தை கடனாக கொடுத்துள்ளது. இந்த கடன் அனைத்தும் பணமாக பரிமாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

அதிகப்படியான வட்டி
 

அதிகப்படியான வட்டி

மேலும் கொடுத்த கடனுக்கு அதிகப்படியான வட்டியை வசூலித்துள்ளது மட்டும் இல்லாமல் இந்த வட்டி வருமானத்திற்கு எவ்விதமான வட்டியும் செலுத்தப்படவில்லை. மேலும் இந்த வட்டி வருமானம் அனைத்தையும் டம்மி வங்கி கணக்கில் பெற்று வந்தது இந்த சோதனையில் நேரடி வரி அமைப்பு கண்டுப்படித்துள்ளது.

பணத்தின் ஆதாரம்

பணத்தின் ஆதாரம்

இதுமட்டும் அல்லாமல் இந்த நிதி நிறுவனங்களில் உள்ள பணம் எப்படி வந்தது, யாருடைய பணம் என்பது குறித்து எவ்விதமான ஆதாரங்களும் இல்லை. இந்த ஆதாரமற்ற பணத்தை வைத்து தான் பாதுகாப்பற்ற கடன்களை நிறுவனங்களுக்கு அளித்து வருகிறது எனவும் மத்திய நேரடி வரி அமைப்பு கண்டுப்படித்துள்ளது.

சொத்து பத்திரங்கள் பறிமுதல்

சொத்து பத்திரங்கள் பறிமுதல்

இதோடு இந்த இரு நிதி நிறுவனங்கள் பெயரில் பல சொத்துக்கள் இருப்பதையும் அரசுக்கு மறைக்கப்பட்டு உள்ளது, மேலும் வருமானம் ஈட்டும் பல வழிகளையும் மறைத்து வைத்துள்ளது கண்டுப்பிடிக்கப்பட்டு உள்ளது. மேலும் நேரடி வரி அமைப்பு இந்த நிதி நிறுவனங்களின் பெயரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Chennai: Rs300-crore black money detects in 2 Chennai financing groups by CBDT

Chennai: Rs300-crore black money detects in 2 Chennai financing groups by CBDT
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X