சென்னை - திருச்சி - மதுரைக்கு ஜாக்பாட்.. பாரத் பெட்ரோலியம் சொன்ன குட்நியூஸ்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை சூடுபிடித்து வரும் வேளையில் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது உற்பத்தி திறனை மேம்படுத்த அதிகப்படியான முதலீட்டை செய்து வரும் நிலையில், எரிபொருள் விற்பனை நிறுவனங்களும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷனை அதிகரிக்கத் தொடர்ந்து அதிகப்படியான முதலீட்டை செய்து வருகிறது.

 

தற்போது நாட்டின் முன்னணி பெட்ரோல், டீசல் விற்பனை நிறுவனமான பாரத் பெட்ரோலியம் முக்கியமான திட்டத்தை அறிவித்துள்ளது.

எலக்ட்ரிக் கார் விற்பனை 109% உயர்வு.. டெஸ்லா, டாடா-வின் நிலை என்ன தெரியுமா..?!

 எலக்டரிக் வாகனங்கள்

எலக்டரிக் வாகனங்கள்

எலக்டரிக் வாகனங்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்சனையே ரேஞ்ச் தான், அந்தப் பிரச்சனையைச் சரி செய்யத் திரும்பும் இடமெல்லாம் பெட்ரோல் பங்க் இருப்பது போல் எலக்ட்ரிக் சார்ஜிங் பாயின்ட்களும் வேண்டும்.
இந்தியாவில் சார்ஜிங் பாயின்ட்களை அமைக்கப் பல தனியார் நிறுவனங்கள் இருந்தாலும், பொதுத்துறை எரிபொருள் நிறுவனங்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.

 பார்த் பெட்ரோலியம் நிறுவனம்

பார்த் பெட்ரோலியம் நிறுவனம்

இதன் படி பார்த் பெட்ரோலியம் நிறுவனம் தமிழ்நாட்டின் மிகவும் முக்கிய வழித்தடமான சென்னை - திருச்சி - மதுரை நெடுஞ்சாலையில் சுமார் 10 CCS-2 DC ரகப் பாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷனை அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
சுமார் 900 கிலோமீட்டர் தொலைவு கொண்ட இந்தப் பாதையில் இரு வழித்தடத்திலும் இந்த 10 சார்ஜிங் ஸ்டேஷன்கள் தகுந்த இடத்தில் அமைக்கப்படும் எனப் பாரத் பெட்ரோலியம் தெரிவித்துள்ளது.

 7000 ரீடைல் விற்பனையகம்
 

7000 ரீடைல் விற்பனையகம்

பெட்ரோல், டீசல் மற்றும் பெட்ரோலியம் பொருட்களில் மட்டுமே இருந்த பாரத் பெட்ரோலியம் எலக்ட்ரிக் வாகனங்களின் எழுச்சி காரணமாகச் சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்கும் புதிய வர்த்தகத் துறைக்குள் நுழைந்துள்ளது. பாரத் பெட்ரோலியம் நிறுவனம் இந்தியா முழுவதும் 7000 ரீடைல் விற்பனையகங்களில் எலக்ட்ரிக் சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்கும் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.

 ஜியோ - BP, டாடா பவர்

ஜியோ - BP, டாடா பவர்

எலக்ட்ரிக் வாகனங்கள் உள்ளூரில் மட்டும் பயன்படுத்துவதில் எவ்விதமான பிரச்சனையும் இல்லை, காரணம் வீட்டிலேயே சார்ஜ் செய்துக்கொள்ள முடியும், ஆனால் நீண்ட தூர பயணம் தான் தற்போதைய பிரச்சனை இதைச் சரி செய்யவே தற்போது ஜியோ - BP, டாடா பவர் முதல் பார்த் பெட்ரோலியம் வரையில் களத்தில் இறங்கியுள்ளது.

 4 சக்கர வாகனம்

4 சக்கர வாகனம்

மேலும் இந்தியாவின் பெட்ரோல், டீசல் இறக்குமதியை குறைக்க மத்திய அரசு எலக்ட்ரிக் வாகனங்களை ஊக்குவித்து வரும் நிலையில், இதன் விற்பனையை அதிகரிக்கக் கட்டாயம் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் ஸ்டேஷன் கட்டாயம் தேவை.

தற்போது தமிழ்நாட்டில் பார்த் பெட்ரோலியம் நிறுவனம் அமைக்கும் சார்ஜிங் ஸ்டேஷன் மூலம் மாநிலத்தில் எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை அதிகரிக்கலாம்..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Chennai-Trichy-Madurai Highway Gets 10 new EV Fast Charging stations: Bharat Petroleum

Chennai-Trichy-Madurai Highway Gets 10 new EV Fast Charging stations: Bharat Petroleum சென்னை - திருச்சி - மதுரைக்கு ஜாக்பாட்.. பாரத் பெட்ரோலியம் சொன்ன குட்நியூஸ்..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X