சீம ராஜாவாக தொடரும் சிக்கன் பிரியாணி! மந்திரியாக நிற்கும் மசால் தோசை!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியா. அடர்த்தியாக மக்கள் வாழும் ஒரு நாடு. ஒவ்வொரு 100 கிலோமீட்டருக்கும் இந்திய உணவுப் பழக்க வழக்கங்களில் சில மாற்றங்களைக் காண முடியும் என்று சொல்வார்கள்.

 

தென் இந்தியாவின் கடைக் கோடியில் இருக்கும் தமிழகம் இட்லி தோசை, பொங்கல் வடை என காலையில் சாப்பிடுகிறார்கள் என்றால் கேரளத்தில் புட்டு, கடலைக் கறி கலை கட்டும்.

ஆந்திராவில் பெசரட்டு தோசையும் தேங்காய் சட்னியையும் ஒரு பிடி பிடிப்பார்கள். கர்நாடகத்தில் மொறு மொறு மசால் தோசை மணக்கும்.

மாநிலத்துக்கு என்று உணவு ஸ்பெஷல்

மாநிலத்துக்கு என்று உணவு ஸ்பெஷல்

பஞ்சாப்பில் சென்னா பட்டுரா பறக்கும், மத்தியப் பிரதேசத்தில் போகா (அவல் உப்புமா), மேற்கு வங்கத்தில் தால் கச்சோரி, பிஹாரில் சாத்தே ரொட்டி, ஹரியானா மிஸ்ஸி ரொட்டி என பட்டியலை போட்டுக் கொண்டே போனால் பசி எடுத்து விடும். இப்படி இந்தியாவில் காலை உணவுகள் வேறுபடலாம். ஆனால் மதியம் & இரவில் ஒட்டு மொத்த இந்தியாவும் ஒன்று கூடும் அளவுக்கு ஒரு உணவு இருக்கிறது.

ஒற்றுமை உணவு

ஒற்றுமை உணவு

அந்த ஒற்றுமை உணவின் பெயர் பிரியாணி. "ஆனா ஊனான்னா அடிச்சுக்குறாங்க பிடிச்சிக்குறாங்க, தண்ணி தரமாட்டேங்குறாங்க, ஆனா பிரியாணின்னா மட்டும் ஒன்னு கூடுறாங்களே" என வெளிநாட்டுக் காரர்களே வியக்கும் அளவுக்கு நம்மில் ஒற்றுமையை வளர்க்கும் உணவு இது. ஒவ்வொரு மாநிலத்திலும் பிரியாணியின் சுவை மாறுபடலாம். ஆனால் பிரியாணி என்கிற உணர்வு மாறுபடுவதில்லை.

ஸ்விக்கி தரவுகள்
 

ஸ்விக்கி தரவுகள்

இந்தியாவின் உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி StatEATistics report: The Quarantine Edition என்கிற பெயரில் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. அதில் லாக் டவுன் காலத்திலும், சமீபத்தைய அன்லாக் கால கட்டங்களில், மக்கள் எந்த உணவுகளை அதிகம் விரும்பி சாப்பிட்டு இருக்கிறார்கள் என ஒரு குட்டி கணக்கைச் சொல்லி இருக்கிறது.

சிக்கன் பிரியாணி

சிக்கன் பிரியாணி

வழக்கம் போல சிக்கன் பிரியாணி, எல்லா உணவுகளுக்கும் சீம ராஜாவாக அமர்ந்து இருக்கிறது. இந்த லாக் டவுன் மற்றும் அன்லாக் கால கட்டங்களில் கூட 5.5 லட்சம் சிக்கன் பிரியாணிகள் ஆர்டர் செய்யப்பட்டு இருக்கிறதாம். கடவுளே வந்தாலும், இந்தியர்கள் வயிற்றில் சிக்கன் பிரியாணிக்கு இருக்கும் இடத்தை பிடிக்க முடியாது போலிருக்கிறதே.

நம்மைப் போலவே பலர்

நம்மைப் போலவே பலர்

இந்தியாவில், நம்மைப் போலவே சிக்கன் பிரியாணியை வெறி கொண்டு காதலிப்பவர்கள், நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதை ஸ்விக்கியின் இந்த StatEATistics report: The Quarantine Edition தரவுகளைப் பார்க்கும் போது தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது. வாழ்க சிக்கன் பிரியாணி, வளர்க லெக் பீஸ். சரி, ராஜா சிக்கன் பிரியாணிக்கு யார் எல்லாம் துணை..?

மந்திரியான மசால் தோசை

மந்திரியான மசால் தோசை

சிக்கன் பிரியாணிக்கு அடுத்து, பட்டர் நானை விரட்டி விரட்டி 3.35 லட்சம் ஆர்டர் செய்து இருக்கிறார்கள் நம் மக்கள். இதை ராணியாக வைத்துக் கொள்வோம். அடுத்து மந்திரியாக மொறு மொறு மசால் தோசையை ஆர்டர் செய்து இருக்கிறார்கள். 3.31 லட்சம் ஆர்டர்கள் பறந்து இருக்கின்றன.

டார்லிங் - சாக்கோ லாவா கேக்

டார்லிங் - சாக்கோ லாவா கேக்

இந்த கொரோனா லாக் டவுன் மற்றும் அன்லாக் கால கட்டங்களில், கடுமையான உணவு வறட்சி நிலவிய போதும், நம் மக்கள், தங்கள் வயிற்றுக்கு இனிமை சேர்க்க சாக்கோ லாவா கேக்கை அதிகம் ஆர்டர் செய்து இருக்கிறார்களாம். மொத்தம் 1,29,000 ஆர்டர்களாம். அதனைத் தொடர்ந்து அண்ணன் குளோப் ஜாமூன் வருகிறார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Chicken biryani is unbeatable still remains top in swiggy order list

The mouth watering chicken biryani proved that they are unbeatable. Chicken biryani still remains top in swiggy order.
Story first published: Friday, July 24, 2020, 18:36 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X