கார் விற்பனையில் 92% சரிவு.. கொரோனா-வின் கொடூரம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆசியாவின் ஆட்டோமொபைல் ஹப் என் கூறப்படும் அளவிற்குச் சிறிய ரகக் கார் முதல் ஆடம்பர கார் வரையிலும், பெட்ரோல்- டீசல் கார் முதல் அதிநவீன பேட்டரி கார் வரையில் அனைத்து விதமான கார்களையும் தயாரித்து ஆசியா முழுவதும் விற்பனை செய்து வந்த சீனா, தற்போது கொரோனா வைரஸ்-ன் கொடூரத்தால் மொத்த ஆட்டோமொபைல் சந்தையும் முடங்கியுள்ளது.

 

சீனாவின் பிப்ரவரி மாத ஆட்டோமொபைல் சந்தை வர்த்தகம் சுமார் 92 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.

கார் விற்பனை

கார் விற்பனை

COVID-19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் சீனா மக்களை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த உலகையும் பீதி அடைய வைத்துள்ளதன் எதிரொலியாகச் சீன மக்கள் கார் வாங்குவதில் சற்றும் விருப்பம் தெரிவிக்கவில்லை. இதனால் பிப்ரவரி மாதத்தில் சீனாவின் கார் விற்பனை 92 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.

16 நாட்கள்

16 நாட்கள்

சீன பயணிகள் கார் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி பிப்ரவரி மாதத்தின் முதல் 16 நாட்களில் மட்டுமே கார் விற்பனை ஆகியுள்ளது. அதன் பின் ஒரு கார் கூட விற்பனை ஆகவில்லை என அறிவித்துள்ளது.

இந்த 16 நாட்களில் வெறும் 4,909 கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது, இக்காலகட்டத்தில் கடந்த ஆண்டு 59,930 கார்கள் விற்பனை ஆனது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சீனாவில் தற்போது அவசர நிலை அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஜி ஜின்பிங்
 

ஜி ஜின்பிங்

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 2,442 ஆக உயர்ந்துள்ளது அத்துடன் நோய்த் தொற்றுகளால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சீனாவில் மட்டும் கிட்டத்தட்ட 77,000 ஐ தாண்டி உள்ள நிலையில் நாடு தழுவிய தேசிய சுகாதார அவசர நிலையை அறிவித்துள்ளார் சீன அதிபர் ஜி ஜின்பிங்.

COVID-19

COVID-19

இந்தச் சூழ்நிலையில் COVID-19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தவும், தடுக்கவும் சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் பெய்ஜிங்கில் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தின் முடிவில் தான் நாடு தழுவிய தேசிய சுகாதார அவசர நிலையை அறிவித்தார்.

சீன சிறை

சீன சிறை

கொரோனா வைரஸ் தற்போது சீனாவில் இருக்கும் சிறைகளிலும் வேகமாகப் பரவி வருகிறது. ஷான்டாங் மாகாணத்தின் ரெஞ்செங் சிறையில் 7 போலீஸார் மற்றும் 200 கைதிகளுக்கும் வைரஸ் பரவியுள்ளது. அது போல் ஜெஜியாங் மாகாணத்தில் ஷிலிபெங் சிறையில் 34 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதோடு சீனாவின் கொரோனா வைரஸ் சுமாப் 25 நாடுகளுக்குப் பரவியுள்ளது. இதில் தென்கொரியா முதன்மையாக உள்ளது.

தென் கொரியா

தென் கொரியா

சீனாவுக்கு வெளியே கொரோனா வைரஸால் மோசமாகப் பாதிக்கப்பட்டு வரும் நாடாகத் தென்கொரியா மாறி வருகிறது.

டேகு மற்றும் சியோங்டோ ஆகிய இரண்டு நகரங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. அந்தப் பகுதியை சிறப்புப் பராமரிப்பு மண்டலமாக அறிவித்துப் போர்க்கால நடவடிக்கைகளைத் தென்கொரியா எடுத்து வருகிறது.

தென்கொரியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தென்கொரியாவில் 156ஆக அதிகரித்துள்ளது மட்டும் அல்லாமல் ஒருவர் கொரோனாவால் உயிரிழந்திருப்பதையும் அந்நாட்டு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.

இத்தாலி

இத்தாலி

தென்கொரியாவைத் தொடர்ந்து இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இருவர் உயிரிழந்துள்ள நிலையில், பல்வேறு நகரங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இத்தாலியில் இதுவரை 79 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

China car sales fall 92% in first half of February amid coronavirus

Car sales in China fell by 92% in the first half of February as most dealerships remained closed and "barely anybody" looked to buy vehicles amid the coronavirus outbreak, the China Passenger Car Association (CPCA) said. About 4,909 passenger vehicles were sold in the first 16 days, down from 59,930 vehicles in same period last year, as per CPCA data.
Story first published: Monday, February 24, 2020, 11:38 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X