அய்யோ.. கொரோனாவை கண்டு அலறும் ஜி ஜின்பிங்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சீனாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை பெரிய அளவில் குறையாமல் அந்நாட்டு மக்களையும், பொருளாதாரத்தையும் பாதித்து வருகிறது. குறிப்பாக 2023 ஆம் ஆண்டில் உலக நாடுகளில் உருவாகும் ரெசிஷனில் முக்கியப் பங்கு சீனாவுக்கும் உள்ளது.

சீனாவில் உற்பத்தி குறைந்து, ஏற்றுமதி பாதித்துள்ள வேளையில் பல முக்கிய மூலப்பொருட்களின் விலை அதிகரித்து விலைவாசி உயர அடிப்படை காரணமாக உள்ளது சீனா. இந்த நிலையில் சீனாவில் பெரும் நகரங்களில் மட்டுமே தற்போது அதிகளவில் கொரோனா தொற்று இது கிராமங்கள் மற்றும் ஊரகப் பகுதிகளுக்கும் வேகமாகப் பரவும் நிலை உருவாகியுள்ளது.

சீனாவில் எதிர்வரும் நீண்டகால விடுமுறை கண்டு அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் அச்சத்தில் உள்ளார்.

சீனாவுக்கு ஜாக்பாட்.. ஆப்பிள் கொடுத்த நெருக்கடி.. தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் கிளியர் ஆகுமா..? சீனாவுக்கு ஜாக்பாட்.. ஆப்பிள் கொடுத்த நெருக்கடி.. தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் கிளியர் ஆகுமா..?

சீனா

சீனா

சீனாவின் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்றாக இருக்கும் லூனார் நியூ இயர் கொண்டாட்டங்களுக்கு முன்னதாகப் பல லட்சம் மக்கள் பெரு நகரங்களில் இருந்து கிராமங்களில் இருக்கும் அவர்களது சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். வருடத்திற்கு ஒரு முறை நீண்ட கால விடுமுறை உடன் வரும் லூனார் நியூ இயர் பண்டிகைக்குச் சொந்த ஊருக்குச் செல்லும் மக்களைத் தடுக்க முடியாது.

லூனார் நியூ இயர் பண்டிகை

லூனார் நியூ இயர் பண்டிகை

தற்போது சீனாவில் தான் அதிகப்படியான கொரோனா தொற்று இருக்கும் நிலையில் இந்தப் பண்டிகை மூலம் பெரு நகரங்களில் இருக்கும் மக்கள் சீன கிராமப்புறங்களுக்குச் செல்லும் காரணத்தால் கொரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் பரவும் அபாயம் உள்ளதை கண்டு கவலைப்படுகிறேன் என்று ஜி ஜின்பிங் கூறியுள்ளார்.

சீன அதிபர் ஜி ஜின்பிங்

சீன அதிபர் ஜி ஜின்பிங்

சீன அதிபர் ஜி ஜின்பிங் தனது ஜீரோ கோவிட் பாலிசியை இன்றளவும் ஆதரித்தாலும் கடந்த மாதம் பொருளாதாரத்தை முடக்கி, நாடு தழுவிய மக்கள் போராட்டம் மூலம் கடுமையாக எதிர்க்கப்பட்ட நிலையில் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டது.

கிராமப்புறத்தில் கொரோனா

கிராமப்புறத்தில் கொரோனா

விடுமுறைக்கு முன்னதாகப் புதன்கிழமை சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளூர் அதிகாரிகளிடம் நாட்டின் கிராமப்புறத்தில் கொரோனா தொற்று பரவுவதைக் குறித்துக் கவலைப்படுவதாகக் கூறினார். மேலும் அனைத்து விதத்திலும் உள்நாட்டு அரசுகள் நிலைமையைச் சமாளிக்கத் தயாராக இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

மக்கள் நெருக்கடி

மக்கள் நெருக்கடி

மேலும் கிராமபுறத்தில் கொரோனா தொற்று அதிகமானால் கட்டாயம் மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஏற்கனவே பெரு நகரங்களில் போதுமான கட்டமைப்பு இருந்தாலும் சமாளிக்க முடியாமல் மக்கள் தரையில் படுத்துச் சிகிச்சை பெற்று வரும் நிலை தான் உள்ளது. இந்த நிலையில் சீனாவின் கிராமங்களிலும் தொற்று அதிகரித்தால் நிலைமை மோசமாகி விடும் எனத் தெரிவித்தார்.

40 நாள்

40 நாள்

ஜனவரி முதல் பிப்ரவரி வரையிலான 40 நாள் காலத்தில் இரண்டு பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயணங்கள் மேற்கொள்ளவார்கள் என்று சீன போக்குவரத்து அதிகாரிகள் கணித்துள்ளனர்.

2 மடங்கு உயர்வு

2 மடங்கு உயர்வு

இது கடந்த ஆண்டின் லூனார் நியூ இயர் பண்டிக்கை எண்ணிக்கை விடக் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகம், மேலும் தொற்றுநோய்க்கு முந்தைய அளவுகளில் இருந்து 70 சதவீதம் அதிமாகும். புதன்கிழமை மட்டும் சீனா முழுவதும் 30.2 மில்லியன் மக்கள் பயணம் செய்ததாகச் சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

China celebrating Lunar New Year; Xi Jinping 'concerned' over Covid cases in countryside

China celebrating Lunar New Year; Xi Jinping 'concerned' over Covid cases in countryside
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X