இந்தியாவுக்கு சிக்கல்! இந்திய இறக்குமதிகளுக்கு செக் வைத்த சீனா!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

1960-களில் இருந்து இந்தியாவும் சீனாவும் பங்காளிச் சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். சில போர்கள் எல்லாம் கூட இரண்டு நாடுகளுக்கு இடையில் நடந்து இருக்கின்றன.

ஆனால் இரண்டு நாடுகளும், இன்று உலக அரங்கில் மிக முக்கியமான இடத்தைப் பிடித்து இருக்கின்றன.

இரண்டு நாடுகளும் அடுத்த சில தசாப்தங்களில் உலகின் பொருளாதார வல்லரசுகளாக வர அதிக வாய்ப்பு இருக்கும் நாடுகள். ஆனால் ஒரே பிரச்சனை என்ன என்றால், சீனா, வெறுமனே வளர்ச்சியை மட்டும் கவனிக்காமல், ஒட்டு மொத்த உலகத்தையே வளைக்க திட்டம் போட்டு வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறது.

பி ஆர் ஐ திட்டம்
 

பி ஆர் ஐ திட்டம்

சீனா, உலகத்தையே வளைக்க போடும் திட்டத்தில் ஒரு முக்கியமான அம்சம் பெல்ட் அண்ட் ரோட் திட்டம் (BRI - Belt & Road Initiative). இந்த திட்டத்தின் படி தெற்காசியா தொடங்கி, ஐரோப்பா வரை சீனாவின் கை நீள்கிறது. இப்படி சீனா, வளர்ச்சியின் பெயரைச் சொல்லி பல ஏரியாக்களை வளைத்துக் கொண்டு இருக்கிறது என்றால், போகிற போக்கில் சில நிலபரப்புகளை உரிமை கொண்டாடிக் கொண்டு இருக்கிறது.

நிலப் பரப்புகள்

நிலப் பரப்புகள்

இந்தியாவின் அக்‌ஷய் சின் தொடங்கி, சமீபத்தைய தோக்லம் மற்றும் லடாக் வரை பல நில பரப்புகளை சீனா, உரிமை கொண்டாடிக் கொண்டு இருக்கிறது. அவ்வளவு ஏன் தென் சீனக் கடலையும் சீனா உரிமை கொண்டாடிக் கொண்டு இருக்கிறது. கடந்த ஜூன் மாத காலத்தில், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், சீனர்களின் தாக்குதலால், 20 இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள்.

நாடு முழுக்க கொந்தளிப்பு

நாடு முழுக்க கொந்தளிப்பு

இது நாள்வரை, சீன ஆக்கிரமிப்புகளை கண்டித்துக் கொண்டிருந்த இந்திய மக்கள், இந்திய ராணுவ வீரர்களின் வீர மரண செய்தியைப் பார்த்து கொந்தளித்துவிட்டார்கள். மத்திய அரசும் சீனாவுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என முடிவு செய்து கொண்டு வேலையில் இறங்கியது. முதல் அடியை சீன கம்பெனிகளுக்கு கொடுக்கத் தொடங்கியது.

வர்த்தக ஒப்பந்தங்கள்
 

வர்த்தக ஒப்பந்தங்கள்

மத்திய நெடுஞ்சாலைத் திட்ட ஒப்பந்தங்களை சீனாவுக்கு கொடுக்க மாட்டோம் என்றது மத்திய அரசு. சீன பொருட்களை வாங்காதீர்கள் என்றார் மத்திய நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான். சீனாவில் இருந்து இறக்குமதி செய்யபப்டும் சோலார் மின்சார சாதனங்கள் மீது கூடுதல் வரி விதித்தார்கள்.

சீனாவின் 59 செயலிகளுக்கு தடை

சீனாவின் 59 செயலிகளுக்கு தடை

மேலே சொன்ன வர்த்தக விவகாரங்கள் கொடுத்த அடியை விட, டிக் டாக், யூ சி பிரவுசர், ஹலோ உட்பட சீனாவின் 59 முக்கியமான செயலிகளுக்கு இந்திய தடை விதித்தது. இந்த தடைகளால் சீனா பெரிதும் கலக்கமடைந்தது. இத்தோடு இந்தியா விடவில்லை. எங்கு எல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கு எல்லாம் சீன புறக்கணிப்பைக் கொண்டு வந்தது.

சீன புறக்கணிப்பு

சீன புறக்கணிப்பு

சமீபத்தில், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் (Indian Oil Comapnies), கச்சா எண்ணெய் போக்குவரத்துக்கு, சீன கப்பல் கம்பெனிகளை பயன்படுத்த வேண்டாம் என முடிவு செய்து இருக்கிறார்களாம். சீன இறக்குமதிகளைக் கட்டுப்படுத்த இந்திய அரசு பொருட்களுக்கான தர நிர்ணயங்களில் இறங்கி இருப்பதாகவும் செய்திகள் வெளியாயின.

டோனர்களுக்கு கூடுதல் வரி

டோனர்களுக்கு கூடுதல் வரி

சமீபத்தில் தான், இந்திய மத்திய அரசு, சீனாவில் தயாரிக்கப்பட்ட அல்லது சீனா, மலேசியா & தைவான் (சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் தாய்பி) போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கறுப்பு டோனர் பவுடர்களுக்கு, தற்காலிகமாக anti-dumping duty என்கிற பெயரில், அடுத்த 6 மாதங்களுக்கு கூடுதல் வரி விதித்தது.

திருப்பி அடித்த சீனா

திருப்பி அடித்த சீனா

இந்தியாவுக்கு மட்டும் தான் வர்த்தக ரீதியில் அடி கொடுக்கத் தெரியுமா? சீனாவுக்கு தெரியாதா? இப்போது சீனாவின் வணிக அமைச்சகம், இந்தியாவில் தயாரிக்கப்பட்டு, சீனாவில் இறக்குமதி செய்யப்படும் சிங்கில் மோட் ஆப்டிக்கல் ஃபைபர்களுக்கு, வரும் ஆகஸ்ட் 14 முதல், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, anti-dumping duty விதித்து இருக்கிறார்களாம்.

7.4 - 30.6 % வரி

7.4 - 30.6 % வரி

சீனாவின் வணிக அமைச்சகம் விதித்து இருக்கும் இந்த anti-dumping duty, எந்த இந்திய கம்பெனி என்பதைப் பொருத்து 7.4 சதவிகிதம் முதல் 30.6 சதவிகிதம் வரை வசூலிப்பார்களாம். இத்தனை நாள், இந்தியா விதித்த வரிகளுக்கு எல்லாம் அதிக எதிர்வினையாற்றாத சீனா, இப்போது பொளேரென "வரிக்கு வரி" என்கிற போக்கில் திருப்பி அடிக்கத் தொடங்கி இருக்கிறது.

2014-ல் இருந்து வரி

2014-ல் இருந்து வரி

இந்தியாவில் தயாரிக்கப்படும், சிங்கில் மோட் ஆப்டிக்கல் பைபர்களூக்கு கடந்த 2014-ம் ஆண்டிலேயே இந்த anti-dumping duty வரியை விதித்து இருந்தது சீனா. ஜூன் 2019-ல் ஆண்டில், இந்தியாவின் ஆப்டிக்கல் பைபர் மீது வரி தொடர்ந்து விதிக்கலாமா வேண்டாமா என ஒரு பரிசீலனையைத் தொடங்கியது சீன தரப்பு.

உள்நாட்டுத் தொழில் அடிபடும்

உள்நாட்டுத் தொழில் அடிபடும்

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் ஆப்டிக்கல் பைபர்கள் மீதான anti-dumping duty-க்களை நீக்கினால், சீனாவில் இருக்கும், ஆப்டிக்கல் பைபர் துறை அடி வாங்கும். இந்தியாவில் இருந்து ஆப்டிக்கல் பைபர்கள், சீனாவில் குவியத் தொடங்கிவிடும் எனச் சொல்லி இருக்கிறது சீன வணிக அமைச்சகம். எனவே தான் anti-dumping duty-யை அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து இருக்கிறார்களாம்.

சீன தரப்பு வாதம்

சீன தரப்பு வாதம்

இந்தியாவில் இருந்து சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வர்த்தக மதிப்பு (பணம்) 4.5 சதவிகிதம் குறைந்து இருக்கிறதாம். சீனாவிடம் இருந்து, இந்தியா இறக்குமதி செய்யும் வர்த்தக மதிப்பு 2.54 சதவிகிதம் குறைந்து இருப்பதாக சீனாவின் சுங்க வரித் துறை கணக்கு சொல்கிறது. இப்போதும் சீனாவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்வதை விட, மிக அதிகமாகவே சீனாவில் இருந்து இந்தியா, இறக்குமதி செய்து கொண்டு இருக்கிறது. சீனாவும் தன் நாட்டு பொருளாதாரத்தை பாதுகாக்கிறேன் என வரி வழியாக பதில் சொல்லத் தொடங்கிவிட்டது. இனி இந்தியா உஷாராக இருக்க வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

China extended the anti-dumping duty on Indian optical fibre

The red dragon communist nation China has extended the anti-dumping duty for 5 more years on Indian optical fibre.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X