உலகின் உற்பத்தி இன்ஜின் ஆக இருக்கும் சீனா கடந்த சில மாதங்களாகக் கொரோனா தொற்றுக் காரணமாக அறிவிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடுகள் அடங்கிய ஜீரோ கோவிட் பாலிசி மூலம் உற்பத்தி, வர்த்தகம், ஏற்றுமதி, பொருளாதாரம் என அனைத்தும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருடாந்திர ஜிடிபி அளவு சரியும் அளவிற்கு மோசமான நிலையும் அடைந்துள்ளது.
இந்நிலையில் பொருளாதாரச் சரிவின் பாதிப்பை உணர்ந்த ஜி ஜின்பிங் அரசு லாக்டவுன்-ஐ தளர்த்தியுள்ளது.
மேலும் பொருளாதாரச் சரிவில் இருந்து வேகமாக மீண்டு வர வேண்டும் என்பதற்காகச் சீன அரசு 21 பில்லியன் டாலர் மதிப்பிலான சலுகையை அறிவித்துள்ளது.
ஜோ பைடன் அறிவிப்பால் ஜி ஜின்பிங் செம குஷி..!

சீன அரசு
சீன அரசு ஏற்கனவே தனது பொருளாதாரத்தை வேகமாக மீட்டெடுக்க டெக், இன்பரா, வேவைவாய்ப்பு ஆகிய 3 முக்கியத் துறைகளைத் தேர்வு செய்துள்ள நிலையில், லாக்டவுன் தளர்வுகளுக்குப் பின்பு பலமுக்கியமான சலுகைகளை அறிவித்துள்ளது. இதன் மூலம் சீன நிறுவனங்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளது.

விமான மற்றும் ரயில்வே சேவை
விமானச் சேவை மற்றும் ரயில்வே சேவை துறையை மீட்டெடுக்க வரிக் குறைப்பு மற்றும் பத்திர வெளியீடு போன்ற முக்கியமான தளர்வுகளை அளிக்கச் சீன அரசின் பொருளாதாரத் திட்டமிடல் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அறிவிப்பு மூலம் கொரோனா லாக்டவுன் வாயிலாகப் பாதிக்கப்பட்டு உள்ள நிறுவனங்கள் மகிழ்ச்சியில் உள்ளது.

12 பில்லியன் டாலர் சலுகை
சீன அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் நாட்டின் பொருளாதாரம் மேம்பட வேண்டும் என்றும், விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும் என்பதற்காகவும் 140 பில்லியன் யுவான் அதாவது 12 பில்லியன் டாலர் மதிப்பிலான டாக்ஸ் ரீபண்ட் அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

2.64 டிரில்லியன் யுவான் பாதிப்பு
இப்புதிய அறிவிப்பு மூலம் சீனாவின் மொத்த வரி ரீபண்ட், வரிக் குறைப்பு, கட்டண குறைப்பு ஆகியவற்றின் மூலம் சுமார் 2.64 டிரில்லியன் யுவான் அளவிலான பாதிப்புகளை எதிர்கொள்ள உள்ளது என சீன அரசு அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்பு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

கார்
சீன அரசு விமானப் போக்குவரத்துத் துறைக்கு உதவி செய்ய 200 பில்லியன் யுவான் மதிப்பிலான பத்திரங்களையும், ரயில்வே கட்டுமான துறைக்காக 300 பில்லியன் யுவான் மதிப்பிலான பத்திரங்களை வெளியிட்டு உள்ளது. இதேபோல் ஆட்டோமொபைல் துறையை மேம்படுத்த சில கார்களுக்கு விற்பனை வரியை குறைத்துள்ளது.