சீனாவுக்கு இந்தியா வைத்த செக்.. WTO சென்றாலும் நிவாரணம் பெற வழியே இல்ல ராஜா.. இனி சிக்கல் தான்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மக்களை இந்த கொரோனா ஒரு புறம் படுத்தி எடுத்து வரும் நிலையில், மறுபுறம் இந்த சீனா பாகிஸ்தானின் பிரச்சனை வேறு. இதற்கிடையில் வீழ்ச்சி கண்டு வரும் பொருளாதாரத்தினையும் சமாளிக்க வேண்டியுள்ளது.

 

இப்படி பல சவால்களுக்கு மத்தியிலும் மத்திய அரசு பல அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதிலும் தற்போது நிலவி வரும் பதற்றமான நிலையில் கூட பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.

சீனாவுக்கு எதிர்ப்பு

சீனாவுக்கு எதிர்ப்பு

கடந்த வாரத்தில் லடாக் எல்லை பகுதியில் சீனா இந்திய வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதற்கிடையில் சீனா வேண்டாம், சீன பொருட்கள் வேண்டாம் என்ற பரப்புரைகள் மக்கள் அதிகமாகவே காணப்படுகிறது. அதோடு தற்போது அரசு தரப்பிலும் தற்போது அது எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது எனலாம்.

தடை ஏன்

தடை ஏன்

ஏனெனில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசு சீனாவின் 59 செயலிகளை, இந்தியாவின் இறையாண்மைக்கும், இந்தியாவின் பாதுகாப்பு, மாநில பாதுக்காப்பு மற்றும் பொது ஒழுங்கு போன்றவற்றினை காரணம் காட்டி தடை செய்தது. ஆனால் தடை செய்த சில தினங்களுக்கு பின்னர் உலக வர்த்தக அமைப்பை நாட போவதாக கடந்த வியாழக்கிழமையன்று அச்சுறுத்தியுள்ளது.

இந்தியாவின் இந்த நடவடிக்கை பாரபட்சமானது
 

இந்தியாவின் இந்த நடவடிக்கை பாரபட்சமானது

மேலும் சீனா இந்த ஸ்மார்ட்போன் செயலிகளை தடை செய்ததை பாரபட்சமானது என்றும், உலக வர்த்தக விதிமுறைகளை மீறுவதாகவும், அதற்கு எதிரானது என்றும் தெரிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜி ரோங் ஒரு அறிக்கையில், இந்தியாவின் இந்த நடவடிக்கையானது பாரபட்சமானது என்றும், இது உலக வர்த்தக அமைப்பின் விதிகளுக்கு எதிரானது என்றும் கூறியிருந்தார்.

நிவராணம் பெற வாய்ப்பே இல்லை

நிவராணம் பெற வாய்ப்பே இல்லை

மேலும் இந்த நடவடிக்கையானது சர்வதேச வணிகத்தின் பொதுவான போக்குகளுக்கும், மின்னணு வணிகத்துக்கும் எதிரானதாக உள்ளது என்றும் கூறப்படுகிறது. அதோடு நுகர்வோர் நலனுக்கும், சந்தைப் போட்டிக்கும் இது எதிரானது என்றும் சீனா தரப்பில் கூறப்படுகிறது. எவ்வாறயினும் சீனா உலக வர்த்தக அமைப்பினை நாடினாலும் கூட, இந்த விஷயத்தில் நிவாரணம் பெற வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.

எந்த ஒப்பந்தமும் இல்லை

எந்த ஒப்பந்தமும் இல்லை

அதற்கு முக்கியமாக மூன்று காரணங்கள் உள்ளன. ஸ்மார்ட்போன் தொடர்பான சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே எந்தவிதமான தொடர்பும் இல்லை. சீன நிறுவனங்கள் தங்கள் செயலிகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. ஆனால் இதற்காக எந்தவொரு ஒப்பந்தமும் கையெழுத்திடப்படவில்லை. ஏனெனில் இந்தியா அனைவரும் அணுகக்கூடிய சந்தை என்பதால்.

குற்றம் சொல்ல முடியாது

குற்றம் சொல்ல முடியாது

இந்த செயலிகளை ஊக்குவிக்க அதிக முதலீடு செய்து ஊக்குவிக்கப்பட்டன. இதற்காக சீனாவிலிருந்து முதலீடுகள் அதிகளவில் பாய்ந்தன. இந்த செயலிகள் இந்திய இளைஞர்களின் மனதில் இருந்து சீன தயாரிப்புகளுக்கான அவநம்பிக்கையை அகற்ற உதவியது. ஆக இவை அனைத்துமே எந்தவித ஒப்பந்தமும் இல்லாமல் நடந்தது. ஆக இந்தியா எந்தவொரு வர்த்தக கொள்கையையும் மீறியதாக உலக வர்த்தக அமைப்பில் குற்றம் சாட்ட முடியாது.

WTO அனுமதி

WTO அனுமதி

உலக வர்த்தக அமைப்பின் இந்த விதிகள் இந்திய நிலைப்பாட்டை ஆதரிக்கின்றன. WTO சட்டங்களின் படி, ஒரு நாடு அதன் இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்பு நலனுக்கு அச்சுறுத்தலாக இருப்பதால் நிறுவனங்கள் அல்லது தயாரிப்புகளுக்கு எதிராக செயல்பட அனுமதிக்கிறது.

இந்தியா சீனாவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய முடியும்

இந்தியா சீனாவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய முடியும்

உண்மையில் சட்ட விரோத மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறையில் ஈடுபட்டதற்காக, உலக வர்த்தக அமைப்பில் சீனாவுக்கு எதிராக இந்தியா ஒரு எதிர் வழக்கை உருவாக்க முடியும். அதோடு சீனா நீண்ட நாட்களாக மூன்றாம் நாடு வழியாக பொருட்களை அனுப்பி வருக்கின்றது. உதாரணத்திற்கு சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கிற்கு - இந்தியாவுடன் முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தங்கள் உள்ளன.

இந்திய வர்த்தகம் பாதிப்பு

இந்திய வர்த்தகம் பாதிப்பு

சீனா தனது போட்டியாளர்களை விட குறைந்த விலையில் பொருட்களை விற்க, இந்தியாவில் தனது தயாரிப்புகளை கொட்டும்போது அதிக கடமைகளை செலுத்துவதைத் தவிர்ப்பதற்காக இதை செய்கிறது. இந்த முறைகேடான விஷயம் இந்திய வர்த்தகத்தினை பெரிதும் பாதித்துள்ளது.

சீனாவில் அனுமதியில்லை

சீனாவில் அனுமதியில்லை

கூகுள்,பேஸ்புக் டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல செயலிகள் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருக்கும் பயன்பாடுகள் சீனாவில் அறியப்படவில்லை. ஆக இவ்வாறு தடுப்பதன் மூலம் சீனா தனது சொந்த பதிவுகளை வளர்த்துக் கொள்ள இது உதவியது என்றும் கூறப்படுகிறது.

கட்டுப்பாடு இல்லை

கட்டுப்பாடு இல்லை

ஆக மாறுவேடமிடப்பட்ட சீனா சமூக வலைதளங்கள், வெளி நாட்டு சந்தைகளில் படையெடுக்க தொடங்கிய நிலையில், இந்தியாவில் எளிதாக அதன் காலை வைத்தது. இது இந்திய சந்தைகளை எளிதில் வளைத்துக் கொண்டது. இந்தியாவினை பொறுத்தவரையில் நீண்ட கால விசாவுடன் மற்றும் கட்டுப்பாடுகளும் குறைவு. ஆனால் சீனாவில் சில செய்தித்தாள்களுக்கு கூட கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாம்.

சீன ஊடகங்கள் வேண்டாம்

சீன ஊடகங்கள் வேண்டாம்

இந்த செய்தியை இந்திய செய்தித்தாள் சங்கம் கவனித்து இதனை கவனிக்க கோரியதாகவும் கூறப்படுகிறது. அதோடு இந்தியாவில் சீன ஊடகங்களை தவிர்க்க கோரியதாகவும் கூறப்படுகிறது. ஆக சீனா இதனை உலக வர்த்தக அமைப்பிற்கு எடுத்து செல்வதற்கான ஒரு அச்சுறுத்தல் என்றும் கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

China has no way to relief with WTO

Chinese apps ban.. China has no way to relief with WTO against india
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X