டெக் நிறுவனங்களை பதம் பார்க்கும் சீன "ஜி ஜின்பிங்" அரசு.. என்ன நடக்கிறது..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகப் பொருளாதார நாடுகள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடிக்க அமெரிக்கா உடன் போட்டிப்போடும் சீனா தற்போது தன் நாட்டின் டெக் நிறுவனங்களின் ஆதிக்கத்தைக் குறைத்து தனது கட்டுப்பாட்டிற்குள் அனைத்து நிறுவனங்களையும் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளது.

 

சீனாவின் மிகப்பெரிய ஈகாமர்ஸ் மற்றும் டெக் நிறுவனமான அலிபாபா-வின் முன்னாள் தலைவர் ஜாக் மா சீன அரசையும், சீன வங்கி அமைப்பையும் விமர்சித்துப் பேச துவங்கிய நிலையில் இருந்து, சீன அரசு டெக் நிறுவனங்களையும், தலைவர்களையும் தனியாகக் குறிவைத்துக் கவனித்து வருகிறது.

 சீன டெக் நிறுவனங்கள்

சீன டெக் நிறுவனங்கள்

சீனாவின் பல டெக் நிறுவனங்கள் தற்போது உலகளவில் வர்த்தகம் செய்து வருகிறது, இந்தியா-வில் வர்த்தகம் செய்யும் சீன மொபைல் செயலிகள் மக்களின் தரவுகளைத் திருடுவதாக அறிவித்து 200க்கும் அதிகமான சீன செயலிகளைத் தடை செய்தது. இதனால் இந்தியாவிலும், சீனாவிலும் பல லட்சம் பேர் வேலைவாய்ப்பை இழந்தனர்.

 ஆதிக்கம்

ஆதிக்கம்

சொல்லப்போனால் டெக் நிறுவனங்களின் நாட்டின் வர்த்தகத்திலும், பொருளாதாரத்திலும் பெருமளவிலான ஆதிக்கம் செலுத்துகிறது என்பதை ஜாக் மா-வின் சர்ச்சை பேச்சுகளுக்குப் பின்பு தான் உணர்ந்தது சீன அரசு.

 சீன அரசு கட்டுப்பாடுகள்
 

சீன அரசு கட்டுப்பாடுகள்

இதன் பின்பு சீனாவில் செயல்படும் பல்வேறு டெக் நிறுவனங்களுக்குச் சீன அரசு அதிகளவிலான கட்டுப்பாடுகளும், விதிமுறைகளையும், விதித்தது. நிறுவனத்தைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்பதற்காகக் கண்ணை மூடிக்கொண்டு டெக் நிறுவனத் தலைவர்கள் ஏற்றுக்கொண்டனர். இதை ஏற்றுக்கொள்ளாத பல தலைவர்கள் தங்களது பதவியை விட்டு விலகினர்.

 4 நிறுவனங்கள் மீது தடை

4 நிறுவனங்கள் மீது தடை

இதற்கிடையில் சீன அரசு தற்போது தகவல் பாதுகாப்பு மற்றும் மக்களின் விருப்பத்தைப் பாதுகாக்கும் பொருட்டு ஆன்லைன் டாக்ஸி நிறுவனமான Didi, டிரக் லாஜிஸ்டிக்ஸ் தளமான Huochebang மற்றும் Yunmanman, ஆன்லைன் வேலைவாய்ப்பு தளமான Boss Zhipin ஆகிய நிறுவனத்தின் மீது வர்த்தகத் தடை விதித்துள்ளது.

 என்ன தான் பிரச்சனை..?

என்ன தான் பிரச்சனை..?

சரி சீனாவுக்கு என்ன தான் பிரச்சனை..? சீனாவில் இருக்கும் டெக் நிறுவனங்கள் பல தான் இருக்கும் துறையில் மோனோபோலியாக இயங்கி வருகிறது, இதேபோல் வாடிக்கையாளர்களின் தரவுகளை நிறுவனங்கள் கையாளும் விதமும் சீன அரசுக்கும் பெரும் பிரச்சனையாக உள்ளது.

 கிரே ஏரியா

கிரே ஏரியா

இதுநாள் வரையில் சீன டெக் நிறுவனங்கள் அரசு கட்டமைப்பில் இருந்த சில கிரே ஏரியாவில் (Gray Area) சில சுதந்திரத்துடன் வர்த்தக முறையை உருவாக்குவது, விற்பனையாளர் மற்றும் வர்த்தகர்களிடம் எக்ஸ்குளூசிவ் ஒப்பந்தம் செய்வது, வாடிக்கையாளக்களைப் புரிந்துகொள்ள அதிகளவிலான தரவுகளைச் சேகரிப்பது என ஆட்டம் ஆடியது.

 அலிபாபா, டென்சென்ட்

அலிபாபா, டென்சென்ட்

இந்த நிலையை மாற்ற சீனா health monitoring and quarantine apps-ஐ இந்தக் கொரோனா காலத்தில் அறிமுகம் செய்தது. இதில் அலிபாபா, டென்சென்ட் துவங்கி பல முன்னணி நிறுவனங்கள் அதிகளவிலான தரவுகளை வாடிக்கையாளர்களிடம் இருந்து திரட்டி வருகிறது எனச் சீன மார்கெட் ஆராய்ச்சி அமைப்பின் தலவைர ஷான் ரெயின் தெரிவித்துள்ளார்.

அபராதம்

அபராதம்

இதைத் தொடர்ந்து சீன அரசு சுமார் 2.8 பில்லியன் டாலர் தொகையை அலிபாபா நிறுவனத்திற்கு அபராதமாக விதித்தது. மற்ற நிறுவனங்கள் மீது அபராதம் மட்டும் அல்லாமல் பல்வேறு வழக்குகள் பதிவு செய்து விசாரணையைத் துவங்கியுள்ளது.

 சீன மக்கள்

சீன மக்கள்

சில வருடங்களுக்கு முன் சீன மக்கள் தகவல் திரட்டல், குறித்துக் கவலைப்படாத நிலையில், தற்போது அரசைக் காட்டிலும் அதிகளவிலான தரவுகளை டெக் நிறுவனங்கள் வைத்திருக்கும் காரணத்தால் சீன அரசு, அந்நாட்டு டெக் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கையை எடுத்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

China's Communist Party uneasy with the growing influence of big technology firm

China's Communist Party uneasy with the growing influence of big technology firm
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X