வரலாற்றைப் படைக்கும் சீன நிறுவனம்.. உலகிலேயே மிகப்பெரிய ஐபிஓ..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்வதேச முதலீட்டுச் சந்தையும் பங்குச் சந்தையிலும் கொரோனா காரணமாக மோசமாக இருக்கும் வேளையில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். இந்தப் பிரச்சனையைச் சமாளிக்க உலகில் இந்தியா உட்படப் பல நாடுகளில் புதிய நிறுவனங்கள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு வருகிறது. இதனால் முதலீட்டாளர்கள் மட்டும் அல்லாமல் நிறுவனங்களுக்கும் சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது.

 

இந்நிலையில் சீனாவின் முன்னணி பின்டெக் நிறுவனமான அலிபாபா-வின் ஆண்ட் குரூப் பங்குச்சந்தையில் இறங்கத் திட்டமிட்டுள்ளது. எப்போதும் இல்லாமல் தற்போது சீன நிறுவனங்களுக்கு இரு நாடுகளில் ஓரே நேரத்தில் பட்டியலிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இவை அனைத்தையும் வைத்துப் பார்க்கும்போது உலகளவில் ஆண்ட் குருப் நிறுவனத்தின் ஐபிஓ தான் உலகின் மிகப்பெரிய ஐபிஓவாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

ஏற்கனவே சவுதி அரேபியா நாட்டின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனமான ஆராம்கோ ஐபிஓ-வில் சாதனை படைத்து முதலிடத்தில் இருக்கும் வேளையில் சீனாவின் ஆண்ட் குருப் எந்த மதிப்பீட்டில் புதிய சாதனை படைக்கப்போகிறது.

பட்டையைக் கிளப்பும் சீனா.. அதிர்ச்சியில் வல்லரசு நாடுகள்..!

அன்ட் குருப்

அன்ட் குருப்

சீனாவில் மிகப்பெரிய ஈகாமர்ஸ் நிறுவனத்தை உருவாக்கிய ஜாக் மா-வின் அலிபாபா குழுமத்தின் நிதி சேவை பிரிவு தான் இந்த அன்ட் குரூப். இந்நிறுவனம் தற்போது சீனாவின் மிகப்பெரிய பின்டெக் நிறுவனமாக விளங்குகிறது.

1 பில்லியன் வாடிக்கையாளர்கள்

1 பில்லியன் வாடிக்கையாளர்கள்

இந்நிறுவனத்தின் கீழ் தான் சீனாவின் மிகப்பெரிய டிஜிட்டல் மேமெண்ட் தளமான அலிபே உள்ளது. சீனா முழுவதிலும் சுமார் 1 பில்லியன் வாடிக்கையாளர்களும், 80 மில்லியன் விற்பனையாளர்களைக் கொண்டு வருடம் 118 டிரில்லியன் யுவான் மதிப்பிலான வர்த்தகத்தைச் செய்கிறது.

மதிப்பு
 

மதிப்பு

அலிபாபா குழுமத்தின் நிதி சேவை பிரிவு துவக்கத்தில் இருந்தே இயங்கி வந்தாலும், 2014ஆம் ஆண்டு தான் தனி நிறுவனமாகப் பிரிக்கப்பட்ட பல்வேறு டிஜிட்டல் நிதி சேவைகளை அளிக்கத் துவங்கியது. ஆரம்பத்தில் இருந்தே அதிகளவிலான வாடிக்கையாளர்களைப் பெறத் துவங்கிய அன்ட் குரூப் ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனமாகத் துவங்கப்பட்டது.

இன்றைய நிலையில் அன்ட் குரூப் நிறுவனத்தின் மொத்த மதிப்பு 280 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜாக் மா

ஜாக் மா

இன்று நடந்த முக்கியமான நிதியியல் சேவை கூட்டத்தில் அலிபாபா குழுமத்தின் தலைவரான ஜாக்மா ஆண்ட் குரூப் நிறுவனத்தை ஐபிஓ மூலம் பட்டியலிடத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்த அறிவிப்பு வெளியான அடுத்த நொடியில் இருந்து சீன முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ள சீன சந்தைக்கு இது ஜாக்பாட் ஆக விளங்கும்.

2 பங்குச்சந்தை

2 பங்குச்சந்தை

இதுமட்டும் அல்லமல்ல அன்ட் குரூப் ஒரே நேரத்தில் சீனாவின் ஷாங்காய் ஸ்டார் மார்கெட் மற்றும் ஹாங்காங் பங்குச்சந்தையிலும் பட்டியலிட உள்ளதாகத் தெரிவித்தாக ஜாக்மா். மேலும் அவர் அமெரிக்காவிற்கு வெளியில் அதிக மதிப்பீட்டில் ஐபிஓ வெளியிடும் நிறுவனமாக ஆண்ட் குரூப் இருக்கும் எனத் தெரிவித்தார்.

ஹாங்காங் நாட்டைச் சீனா கைப்பற்றிய பின் சீனா நிறுவனங்கள் எவ்விதமான தடையும் இல்லாமல் இரு நாடுகளிலும் பட்டியலிட முடியும்.

35 பில்லியன் டாலர்

35 பில்லியன் டாலர்

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சவுதி ஆராம்கோ நிறுவனம் 29.4 பில்லியன் டாலர் மதிப்பிலான ஐபிஓ வெளியிட்டு வரலாற்று சாதனையைப் படைத்தது. தற்போது ஆண்ட் குரூப் 35 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் ஐபிஓ வெளியிட உள்ளதாகக் கணிப்புகள் வெளியாகியுள்ளது.

35 பில்லியன் டாலர் ஐபிஓ என்பது உண்மையாகும் பட்சத்தில் அன்ட் குருப் சாதனை படைக்க உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Chinese Ant Group Historic IPO plan with Dual Listing

Chinese Ant Group Historic IPO plan with Dual Listing
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X