ஆளவிடுங்கடா சாமி.. அமெரிக்காவை விட்டு ஓடும் DIDI.. 1.5 டிரில்லியன் டாலர் கோவிந்தா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சீனாவின் மிகப்பெரிய ஆன்லைன் டாக்ஸி சேவை நிறுவனமான DIDI சீன அரசு எடுத்த கடுமையான நடவடிக்கை மூலம் அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்ட வேளையில் தற்போது அமெரிக்க அரசிடம் இருந்தும் பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறது.

 

இந்த நிலையில் பிரச்சனையை எதிர்கொள்ள முடியாத DIDI முக்கியமான முடிவை எடுத்துள்ளது. இதனால் பங்குசந்சையில் மிகப்பெரிய அளவிலான சரிவை எதிர்கொண்டு முதலீட்டாளர்களுக்கு அதிகப்படியான நஷ்டத்தைக் கொடுத்துள்ளது.

 DIDI நிறுவனம்

DIDI நிறுவனம்

சீனா அரசு வெளிநாட்டுப் பங்குச்சந்தையில் ஐபிஓ வெளியிட்ட சீன நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்து DIDI உட்படச் சில முக்கியச் சீனா நிறுவனத்தின் மீது தகவல் பாதுகாப்பு, முறையற்ற நிர்வாகம், வாடிக்கையாளர்கள் தனிப்பட்ட தகவல்களை அதிகமாகச் சேகரித்தல் எனப் பல குற்றச்சாட்டுகளைச் சுமத்தியது.

 DIDI சேவைக்குத் தடை

DIDI சேவைக்குத் தடை

இதன் பின் DIDI நிறுவனத்தின் அனைத்து சேவைகளையும் முடங்கி, ஸ்மார்ட்போன் செயலிகளையும் தடை செய்தது. இதன் மூலம் அமெரிக்கப் பங்குச்சந்தையிலும் இருக்கும் DIDI நிறுவனத்தின் பங்கு மதிப்பு ஐபிஓ வெளியிட்ட அடுத்த சில நாட்களில் இருந்து பெரிய அளவில் சரிந்தது.

 அமெரிக்கப் பங்குச்சந்தை
 

அமெரிக்கப் பங்குச்சந்தை

இந்நிலையில் தற்போது அமெரிக்கப் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையம் அமெரிக்கப் பங்குச்சந்தையில் இருந்து வெளிநாட்டு நிறுவனங்கள் வெளியேற அனுமதி வழங்கவும் அதற்கான சட்ட விதிகளை அமலாக்கம் செய்ய உள்ளதாகவும் அறிவித்தது.

 நியூயார்க் பங்குச்சந்தை

நியூயார்க் பங்குச்சந்தை

இதைத் தொடர்ந்து நியூயார்க் பங்குச்சந்தையில் இருந்து DIDI நிறுவனம் வெளியேறுவதற்கான பணிகளைத் துவங்கியுள்ளதாகச் சீன நிறுவனமான Didi Chuxing அறிவித்துள்ளது. சீன அரசு DIDI மட்டும் அல்லாமல் அலிபாபா, டென்சென்ட் போன்ற பல முன்னணி நிறுவனத்தின் மீது கடுமையான நடவடிக்கையை எடுத்துள்ளது.

 ஹாங்காங் பங்குச்சந்தை

ஹாங்காங் பங்குச்சந்தை

நியூயார்க் பங்குச்சந்தையை விட்டு வெளியேறும் DIDI நிறுவனம் ஹாங்காங் பங்குச்சந்தையில் பட்டியலிடுவதற்கான பணிகளைத் துவங்கி உள்ளதாகவும் சீன சமுக வலைத்தளப் பக்கத்தில் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சீன அரசு தனது கடுமையான நடவடிக்கையால் நினைத்ததை சாதித்துள்ளது.

 Hang Seng Tech Index

Hang Seng Tech Index

சீனா அரசின் இந்த நடவடிக்கைக்குப் பின் எந்தொரு சீன நிறுவனமும் வெளிநாட்டுப் பங்குச்சந்தையில் ஐபிஓ வெளியிடவில்லை. சீன அரசு அந்நாட்டு டெக் நிறுவனங்கள் மீது எடுத்த நடவடிக்கையால் Hang Seng Tech Index-ல் இருக்கும் டெக் நிறுவனங்கள் 1.5 டிரில்லியன் டாலர் அளவிலான மொத்த சந்தை மதிப்பை இழந்துள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Chinese Didi to de-list from New York exchange; Hang Seng Tech Index lost $1.5 trillion Mcap

Chinese Didi to de-list from New York exchange; Hang Seng Tech Index lost $1.5 trillion Mcap
Story first published: Friday, December 3, 2021, 16:04 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X