இந்தியாவில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வேகமாக வளர்ச்சி அடைய முக்கியக் காரணமாக அமைந்தது சீன மற்றும் ஜப்பான் முதலீட்டு நிறுவனங்களின் முதலீடுகள் தான். இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் டிஜிட்டல் சேவையிலும், பின்டெக் துறையிலும் உள்ளது அனைவருக்கும் தெரியும்.
இந்தியச் சந்தையில் டிஜிட்டல் வளர்ச்சி பெரிய அளவில் இல்லாத நிலையில் இந்தியாவில் புதிய டிஜிட்டல் சேவைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க அதிகளவிலான நிதி தேவை உள்ளது. இந்த நிதி தேவையும், கால அவகாசத்தையும் தான் சீன மற்றும் ஜப்பான் நிறுவனங்கள் தங்களது அதீத முதலீடுகள் மூலம் கொடுத்தது. இந்த முதலீடுகளால் சீன மற்றும் ஜப்பான் நிறுவனங்கள் அதிகளவிலான லாபத்தை அடைந்தது வந்தது.
ஆனால் இந்த ஆண்டு இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் சீன நிறுவனங்கள் செய்த முதலீடுகளின் அளவு பெரிய அளவில் குறைந்துள்ளது.
டிக்டாக்-ஐ விற்றுவிட்டு வெளியேறுங்கள்.. அதிபர் டிரம்ப் புதிய உத்தரவு..!

சீனா முதலீடு நிறுவனங்கள்
இந்த ஆண்டு மத்திய அரசு பல்வேறு காரணங்களுக்காக இந்திய சந்தையில் சீன முதலீடுகளைக் கட்டுப்படுத்த வெளிநாட்டு நேரடி முதலீட்டு விதிமுறைகளில் புதிய மாற்றத்தை செய்யாதது. இதன் அடிப்படையில் சீன நிறுவனங்கள் இந்திய சந்தையிலும், நிறுவனங்களிலும் முதலீடு செய்ய வேண்டுமென்றால் மத்திய அரசிடம் அனுமதி பெற்ற பின்பே முதலீடு செய்ய வேண்டும் என விதிகள் மாற்றப்பட்டது.

முதலீட்டில் சரிவு
இந்த விதி மாற்றத்தின் எதிரொலியாக ஜனவரி முதல் ஜூலை மாதம் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் இருக்கும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் சீன நிறுவனங்கள் வெறும் 166 மில்லியன் டாலர் மட்டுமே முதலீடு செய்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் சீன நிறுவனங்கள் இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் சுமார் 197 மில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
2019ஆம் ஆண்டில் மொத்தமாகச் சீன நிறுவனங்கள் சுமார் 641 மில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏப்ரல் மாதம்
கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா- சீனா எல்லையில் ராணுவ வீரர்கள் இடையில் ஏற்பட்ட தாக்குதலுக்குப் பின் சீன முதலீடுகளும், சீன நிறுவனங்களின் ஆதிக்கத்தையும் இந்தியாவில் குறைக்க வேண்டும் என்பதற்காகவே மத்திய அரசு ஏப்ரல் மாதத்தில் வெளிநாட்டு முதலீடுகளின் விதிகளில் மாற்றங்களைக் கொண்டு வந்தது.

தடை பெற்றது
மத்திய அரசின் இந்தத் திடீர் கொள்கை மாற்றத்தால் பல முன்னணி நிறுவனங்களில் ஏற்கனவே முதலீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்ட முதலீடுகளும் நடைபெற்றுள்ளது. மேலும் சீனாவின் மிகப்பெரிய முதலீட்டாளர் ஒருவர் இந்தியாவிடம் முழுமையான விளக்கம் கிடைக்கும் வரையில் இந்திய சந்தையில் முதலீடு செய்யப்போவது இல்லை எனத் தெரிவித்துள்ளதாக லைவ்மின்ட் தெரிவித்துள்ளது.

இந்திய ஸ்டார்ட்அப்
இதோடு இந்தியாவில் சில ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் சீன முதலீடுகளை ஏற்கத் தயாராக இல்லை என்று வெளிப்படையாகக் கூறியுள்ளது, அதில் முதன்மையானது ஸார்ட் வீடியோ செயலியான போலோ இந்தியா நிறுவனர் வருண்-ம் ஒருவர்.