சீனா நிறுவனங்களுக்கு இது போறாத காலமே.. FDIஐ தொடர்ந்து.. செபியும் செக் வைக்கப் போகிறதா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: சீனாவுக்கு இது போறாத காலமே. கொரோனாவினை தொடர்ந்து சுற்றி சுற்றி பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. அதிலும் சீனாவின் முக்கிய வர்த்தக பங்காளியான இந்தியாவிடமும் கூட தற்போது சற்று மோதல் ஆரம்பித்துள்ளது.

குறிப்பாக சொல்லவேண்டுமானால் கடந்த ஜனவரி 2020 நிலவரப்படி இந்தியா சீனாவிடமிருந்து 429.55 பில்லியன் ரூபாய் மதிப்பிலான பொருட்களை இறக்குமதி செய்துள்ளது.

இது கடந்த ஜனவரி 2019ல் 356.77 பில்லியன் ரூபாய் அளவுக்கு இறக்குமதி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சீனா தான் டாப்
 

சீனா தான் டாப்

இந்தியா இறக்குமதி செய்யும் நாடுகளிலேயே அதிகளவில் சீனாவில் இருந்து தான் அதிகம் இறக்குமதி செய்து வருகிறது. இந்த நிலையில் கொரோனாவின் தாக்கம் உலகம் முழுவதும் அதிகரித்து வரும நிலையில், சர்வதேச நிறுவனங்கள் பொருளாதார பின்னடைவை சந்தித்து வருகின்றன. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சீனா பல நாடுகளின் நிறுவனங்களில் முதலீடு செய்து வருவதாக செய்திகள் வெளியாகின.

அன்னிய நேரடி முதலீட்டில் கட்டுப்பாடு

அன்னிய நேரடி முதலீட்டில் கட்டுப்பாடு

இதனையடுத்தே இந்தியா அன்னிய நேரடி முதலீட்டு (Foreign Direct Investment) வரைமுறைகளில் சில கடுமையான கட்டுப்பாடுகளினை கொண்டு வந்தது. அதாவது அன்னிய நேரடி முதலீடு விதிகளின் படி, இந்திய எல்லையை ஒட்டியுள்ள எந்த வெளிநாடுகளும், நேரடி முதலீடு செய்ய முடியாது என்றும், மத்திய அரசு வகுத்துள்ள வழிமுறைகளை பின்பற்றியே முதலீடு செய்ய முடியும் என்றும் தெரிவித்துள்ளது.

அனுமதி வாங்கித் தான் முதலீடு

அனுமதி வாங்கித் தான் முதலீடு

ஏற்கனவே இதுபோன்ற கட்டுப்பாடுகள் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்திற்கு மட்டுமே இருந்த நிலையில், தற்போது சீனாவும் அந்த லிஸ்டில் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் இனி சீனா நிறுவனங்கள் செய்யும் முதலீடுகளுக்கு, மத்திய அரசிடம் அனுமதி வாங்கித் தான் செய்ய வேண்டும் என்றும் கூறியது.

செபியும் சில கட்டுப்பாடுகளை கொண்டு வரலாம்
 

செபியும் சில கட்டுப்பாடுகளை கொண்டு வரலாம்

இந்த நிலையில் மத்திய அரசிடம் அனுமதி பெற்றால் போதுமா? இந்தியாவின் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபியிடம் அனுமதி பெற வேண்டாமா? இந்த நிலையில் FDI தொடர்ந்து தற்போது செபியும் தன் பங்கிற்கு விதிகளை கடுமையாக மாற்ற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது சீனாவுக்கு இன்னும் பிரச்சனையை அதிகப்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.

போர்ட்போலியோ முதலீட்டில் கட்டுப்பாடு

போர்ட்போலியோ முதலீட்டில் கட்டுப்பாடு

இந்தியாவில் பல்வேறு அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் நேரடியாகவே முதலீடு செய்து வருகிறார்கள். அந்நிய நிதி நிறுவனங்கள் துணை கணக்குகள் மற்றும் தகுதி வாய்ந்த அன்னிய முதலீட்டாளர்களை இணைத்து அன்னிய நிறுவன முதலீட்டாளர்களுக்கான போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் (Foreign Portfolio Investment-FPI) என்ற பிரிவை, இந்தியப் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி (SEBI) உருவாக்கி இருக்கிறது. இதில் ஏதும் கட்டுப்பாட்டினை கொண்டு வரலாம்.

கண்கானிக்க வேண்டும்

கண்கானிக்க வேண்டும்

செபி அமைப்பில் பதிவு பெற்ற அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் (FPI) வழங்கும் பங்கேற்பு ஆவணங்கள் மூலமாக மற்ற நாடுகளின் பெரும் பணக்காரர்கள், இந்திய பங்குகள், கடன்பத்திரங்கள் மற்றும் முன்பேர வர்த்தக சந்தைகளில் முதலீடு செய்கின்றனர். இந்த நிலையில் நிபுணர்கள் போர்ட்போலியோ முதலீட்டாளர்களை கண்கானிக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

குறைந்த ஆபத்தில் உள்ள நாடுகள்

குறைந்த ஆபத்தில் உள்ள நாடுகள்

ஏற்கனவே குறைந்த ஆபத்துள்ள நாடுகளின் முதலீட்டாளர்களின் கணக்குகளை ஒவ்வொரு மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆராயப்படுகின்றன. இன்னும் சொல்லப்போனால் யுபிஓ அறிக்கை ஆண்டுதோறும் நடக்கிறது. இதுவரை அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர், ஹாங்காங் ஆகியவை குறைந்த ஆபத்தில் உள்ள நாடுகளாக உள்ளன.

அதிக ஆபத்து உள்ள நாடு

அதிக ஆபத்து உள்ள நாடு

இதே சீனா மற்றும் சில நாடுகளை இந்தியா அதிக ஆபத்துள்ள அதிகார வரம்பாக ஆராய்கிறது. அதிக ஆய்வில், இந்த கணக்குகளின் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஆராயப்படுகிறது. இப்படி இருக்கையில் தற்போது செபி தன் முதலீட்டாளர்களின் பாதுகாப்பை அவ்வப்போது உறுதிப்படுத்த பல்வேறு முறைகள் மற்றும் நடவடிக்கைகளை செபி வழங்கியுள்ளது.

தீவிர நடவடிக்கை

தீவிர நடவடிக்கை

பங்குச் சந்தை மற்றும் பிற பத்திரங்கள் சந்தை வணிக ஒழுங்குமுறை கவனித்து வருகிறது. மேலும் தரகர்கள், பரிமாற்ற முகவர்கள், வங்கியாளர்கள், அறங்காவலர்கள், பதிவாளர்கள், போர்ட்ஃபோலியோ மேலாளர்கள், முதலீட்டு ஆலோசகர்கள், வணிக வங்கியாளர்கள் போன்ற வணிகத்தின் இடைத்தரகர்களை பதிவு செய்து ஒழுங்குபடுத்துதல் போன்றவற்றினையும் கண்கானித்து வருகிறது. இந்த நிலையில் இனி இன்னும் தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

அனுமதி பெற வேண்டும்

அனுமதி பெற வேண்டும்

தற்போது சீனா பாதுகாப்பு, தொலைத்தொடா்பு உள்ளிட்ட 16 துறைகளைத் தவிர ஆயிரத்துக்கும் மேற்பட்ட துறைகளிலும், தொழில்களிலும் சீனாவின் அன்னிய நேரடி முதலீட்டுக்கு முன் அனுமதி பெறத் தேவையில்லை என்ற நிலைமையே இதுவரையில் இருந்து வந்தது. ஆனால் அரசின் கட்டுப்பாட்டினை அடுத்து இனி எந்தவொரு முதலீட்டுக்கும் அனுமதி பெற்றாக வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Chinese investors may face sebi heat after change in FDI rules

SEBI is likely to make investment rules more stringent for China and other neighbouring nations.
Story first published: Tuesday, April 21, 2020, 17:20 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X