சீனா-வின் ஷீன் ஆப் தடை.. ஆனா பொருட்களை விற்கலாம்.. மத்திய அமைச்சகம் விளக்கம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சீன முன்னணி பேஷன் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனமான ஷீன் செயலி மூலம் இந்தியாவின் தகவல் பாதுகாப்புக்குப் பாதிப்பு உள்ளது என அறிவித்து மத்திய அரசு 2020ல் இந்தச் செயலியை தடை செய்தது.

 

ஆனால் இந்த ஷீன் நிறுவனத்தின் பொருட்கள் அமேசான் ஈகாமர்ஸ் தளம் உட்படப் பல வெப்சைட்-ல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது மத்திய அரசு பதில் அளித்துள்ளது.

அமேசான் நிறுவனத்தில் லஞ்சம்.. அமெரிக்காவில் இருந்து புதிய உத்தரவு..!

சீன செயலிகள் தடை

சீன செயலிகள் தடை

இந்தியாவில் சீன செயலிகள் மூலம் தேசிய பாதுகாப்புக்குப் பாதிப்பு உள்ளதை அறிந்த பின்பு மத்திய அரசு டிக்டாக், ஷேர்இட் உட்படப் பல சீன செயலிகளுக்குத் தடை விதித்து மொத்தமாக இந்திய சந்தையை விட்டு வெளியேற்றியது. இந்தத் தடை உத்தரவில் பேஷன் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனமான ஷீன் செயலி-ம் ஒன்று.

ஐடி விதிகள் பிரிவு 69A

ஐடி விதிகள் பிரிவு 69A

ஐடி விதிகள் படி பிரிவு 69A முலம் ஷீன் செயலி மட்டுமே தடை செய்யப்பட்டு உள்ளது, ஷீன் நிறுவன பொருட்களைப் பிற தளம் மற்றும் வெப்சைட்-ல் விற்பனை செய்ய எவ்விதமான தடையும் 69A பிரிவு சட்டத்தில் அளிக்க உரிமை இல்லை என மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஐடி சேவை துறை டெல்லி உயர் நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது.

சீனாவின் ஷீன் நிறுவனம்
 

சீனாவின் ஷீன் நிறுவனம்

ஷீன் நிறுவனத்தின் பொருட்களை இந்தியாவில் பிற இணையத் தளம் மற்றும் செயலியில் விற்பனை செய்யத் தடை விதிக்கத் தனிப்பட்ட முறையில் உத்தரவுகளை வெளியிட வேண்டும். மேலும் இந்த உத்தரவை சீன ஆப்களைத் தடை செய்த குழுவால் அறிவிக்க முடியாது என்றும் மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஐடி சேவை துறை விளக்கம் கொடுத்துள்ளது.

அமேசான் தளம்

அமேசான் தளம்

அமேசான் தளம் மூலம் இந்தியாவில் மீண்டும் ஷீன் பிராண்ட் பொருட்கள் விற்பனைக்கு வருகிறது, இதனைத் தடை செய்ய வேண்டும் என அனந்திகா சிங் பெடிஷன் தாக்கல் செய்தார். இந்தப் பெடிஷனை விசாரித்த நீதிபதி டிஎன் படேல் மற்றும் ஜோதி சிங் ஆகியோர் மத்திய அமைச்சகத்தின் விளக்கத்தைப் பெற்றுள்ளனர்.

டெல்லி உயர் நீதிமன்றம்

டெல்லி உயர் நீதிமன்றம்

மேலும் அனந்திகா சிங்-க்கு அமேசான் நிறுவனத்திற்கு தனது பெடிஷனை அனுப்பவும், மத்திய அரசின் விளக்கத்திற்கு பதிலை சமர்ப்பிக்கவும் டிசம்பர் 1 வரை அவகாசம் கொடுத்துள்ளது டெல்லி உயர் நீதிமன்றம். இதற்கிடையில் அமேசான் நிறுவனத்திற்கு எவ்விதமான கடிதமும் இதுகுறித்து வரவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

மக்கள் கருத்து

மக்கள் கருத்து

மக்களாகிய நீங்கள் ஷீன் நிறுவனம் அமேசான் தளத்தில் தனது பொருட்களை விற்பனை செய்ய அனுமதிக்கலாமா..? இதுகுறித்து உங்கள் கருத்தை மறக்காமல் பதிவிடுங்கள். இதே முறையில் கீழ் பிற சீன செயலிகளும் இந்தியாவிற்கு நுழைந்தால் என்ன ஆகும் என்பது தான் தற்போது முக்கியக் கேள்வியாக உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Chinese Shein app ban, sale of products in Amazon not covered under IT Act 69A : MeitY

Chinese Shein app ban, sale of products in Amazon not covered under IT Act 69A : MeitY
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X