இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சீன நிறுவனங்கள் மிகப்பெரிய அளவிலான ஆதிக்கம் செலுத்துகிறது என்பது அனைவருக்கும் தெரியும். இந்த ஆதிக்கத்தை இந்திய நிறுவனங்களாலும் சரி, பிற வெளிநாட்டு நிறுவனங்களாலும் தகர்க்க முடியவில்லை.
3 மாதத்திற்கு ஒரு புதிய மாடல் போன், ஒவ்வொரு போனுக்கும் பல தொழில்நுட்ப முன்னேற்றங்கள், வடிவமைப்பு மேம்பாடுகள் என இந்திய மக்களைக் கவரும் வகையில் பட்ஜெட் விலையில் அதிகளவிலான மாடல்கள் என இந்திய சந்தையை மொத்தமாக வாரிப்போட்டுக்கொண்டது சீன ஸ்மார்போன் நிறுவனங்கள்.
ஆனால் இப்போது நிலை மாறியுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.
சாமானியர்களை உருக வைத்த ரத்தன் டாடா! இந்திய கம்பெனிகளுக்கு ரத்தன் டாடாவின் பளிச் கேள்வி!

சீன நிறுவனங்களின் ஆதிக்கம்
இந்தியாவில் சியோமி, விவோ, சாம்சங், விவோ, ஓப்போ, ஒன்பிளஸ், ரியல்மி இன்டெக்ஸ், போகோ, ஐடெல், Infinix, Tecno ஆகிய சீன நிறுவனங்கள் மிகப்பெரிய அளவிலான வர்த்தகத்தைக் கொண்டு இந்திய சந்தையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது என்றால் மிகையில்லை.

விற்பனை
மார்ச் காலாண்டு வரையில் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஸ்மாட்ர்போன்களில் 10ல் 8 போன்கள் சீன நிறுவனங்களின் தயாரிப்பாகவும், பிராண்டாகவும் இருந்தது. இதனால் இந்திய சந்தையில் சீன ஸ்மாட்ர்போன்களின் ஆதிக்கம் எப்போதும் இல்லாத வகையில் 81 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியா - சீனா
கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா சீன ராணுவ வீரர்கள் மத்தியில் ஏற்பட்ட சண்டை மற்றும் அதன் பின்பு இந்திய எல்லையில் நிலவிய பதற்றமான சூழ்நிலை மற்றும் இந்தியா உட்படப் பல வல்லரசு நாடுகள் சீனா மீது எடுத்துவரும் நடவடிக்கைகள் மூலம், இந்திய மக்கள் மத்தியில் சீனாவும், சீன நிறுவனங்களுக்கும் எதிரான மனநிலை உருவாகியுள்ளது.

வர்த்தகம் சரிவு
இந்திய மக்கள் மத்தியில் நிலவும் சீனவுக்கு எதிரான மனநிலை காரணமாக ஜூன் காலாண்டில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் சீன நிறுவனங்களின் விற்பனை சந்தை 72 சதவீதமாகக் குறைந்துள்ளது. இந்தச் சரிவுக்குச் சீனாவுக்கு எதிரான மனநிலை மட்டும் அல்லாமல் சீனா- இந்தியா இடையே நிலவும் வர்த்தகப் போக்குவரத்து பிரச்சனையும் முக்கியக் காரணமாக உள்ளது.

சாம்சங்
இதேவேளையில் சாம்சங் கொரோனாவிற்கு முந்தைய விற்பனை அளவில் 94 சதவீதம் திரும்பிவிட்டதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் சாம்சங் இந்தியாவில் தனது உற்பத்தி பணிகளைத் துரிதப்படுத்தி இந்த வர்த்தக இடைவெளி வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்தி வருகிறது சாம்ங்.

2வது இடம்
இதன்மூலம் இந்தியாவில் அதிக ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் பட்டியலில் கொரிய நிறுவனமான சாம்சங் கடந்த காலாண்டில் வீவோ-விடம் இழந்த 2வது இடத்தை மீண்டும் பெற்றுள்ளது. மேலும் ஜூன் காலாண்டில் சாம்சங் 26 சதவீத வர்த்தகச் சந்தையைப் பதிவு செய்துள்ளது.

இந்தியா: மாபெரும் சந்தை
இந்தியாவில் கடந்த சில வருடங்களாக ஸ்மார்ட்போனின் ஆதிக்கம் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது, இந்தியா மிகப்பெரிய சந்தையாக விளங்குவதால், வர்த்தக வளர்ச்சிக்குச் சற்றும் குறைவில்லை. இதனால் வெளிநாட்டு ஸ்மாட்ர்போன் நிறுவனங்களும், டிஜிட்டல் சேவை நிறுவனம் இந்தியாவிற்குப் படையெடுத்து வருகிறது.
இதில் உண்மை யாதெனில் இந்தியாவில் இன்னும் அனைவருக்கும் ஸ்மார்ட்போன் சென்று அடையவில்லை, ஸ்மார்ட்போன் இருப்பவர்கள் அனைவருக்கும் டிஜிட்டல் சேவைகள் முழுமையாகவும் கிடைக்கவில்லை.