மத்திய நிதியமைச்சகம் பல்வேறு நிர்வாகம் மற்றும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள லட்சுமி விலாஸ் வங்கிக்கு நவம்பர் 17ஆம் தேதி மாலை 6 மணி முதல் டிசம்பர் 16ஆம் தேதி வரையில் moratorium கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்தத் தடை காலத்தில் இவ்வங்கியில் டெபாசிட் செய்துள்ளவர்களுக்கு 25,000 ரூபாய்க்கு அதிகமாகத் தொகையைக் கொடுக்கக் கூடாது, அப்படிக் கொடுக்க வேண்டும் என்றால் ரிசர்வ் வங்கியிடம் இருந்து எழுத்துப்பூரவ ஒப்புதல் பெற வேண்டும். இதேபோல் வங்கி 25,000 ரூபாய்க்கு மேல் யாருக்கும் கடன் அளிக்கக் கூடாது. இப்படிக் கடன் கொடுக்க வேண்டுமென்றால் சந்தை கட்டுப்பாட்டு ஆணையத்திடம் ஒப்புதல் பெற வேண்டும்.
இவ்வங்கியின் கடந்த செப்டம்பர் 2019ஆம் ஆண்டு முதல் ரிசர்வ் வங்கியின் prompt corrective action (PCA) கீழ் உள்ளது. மேலும் அக்டோபர் மாதம் லட்சுமி விலாஸ் வங்கியின் நிர்வாகக் குழுவில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக ரிசர்வ் வங்கி மற்றும் செபியின் நேரடி கட்டுப்பாட்டிற்கு வந்துள்ளது.
தமிழகத்தை சேர்ந்த லட்சுமி விலாஸ் பேங்க் இயங்க கட்டுப்பாடுகளுடன் தடை.. என்ன காரணம்..!

லட்சுமி விலாஸ் வங்கி
தமிழ்நாட்டைத் தாயகமாகக் கொண்டு இயங்கி வரும் முன்னணி வங்கிகளில் ஒன்றான, லட்சுமி விலாஸ் வங்கி 96 வருடம் வர்த்தகத்தில் உள்ளது. இவ்வங்கியின் நிர்வாகக் குழுவில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சனையின் விளைவாக லட்சுமி விலாஸ் வங்கியின் பங்குதாரர்கள் வங்கியின் 6 இயக்குனர்களைப் பதவியில் இருந்து நீக்கியது.

ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு
இதனைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கி மற்றும் சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி ஆகிய அமைப்புகள் லட்சுமி விலாஸ் வங்கியின் நிர்வாகத்தைக் கையில் எடுத்துத் தொடர்ந்து வங்கி நிர்வாகம் மற்றும் நிதி நிலையில் தொடர் ஆய்வுகளைச் செய்து வந்தது.

மத்திய நிதியமைச்சகம்
லட்சுமி விலாஸ் வங்கியில் ரிசர்வ் வங்கி மற்றும் செபி ஆய்வுகளைத் தீவிரமாகச் செய்து வரும் நிலையில் ரிசர்வ் வங்கியின் கோரிக்கையின் அடிப்படையில் மத்திய நிதியமைச்சகம் இவ்வங்கியின் மீது டிசம்பர் 16 வரையில் moratorium கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

லட்சுமி விலாஸ் வங்கி
மக்களின் மத்தியிலும், இவ்வங்கியில் டெப்பாசிட் செய்தவர்களின் நம்பிக்கையைக் காப்பற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்கவே இந்த moratorium கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் வங்கி திரும்பவும் இயல்பான முறையில் இயங்க தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுக்கவும் உறுதியாக உள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.

யெஸ் வங்கி
இதேபோன்று தான் மார்ச் 5, 2020ல் ரிசர்வ் வங்கியின் கோரிக்கையின் அடிப்படையில் மத்திய நிதியமைச்சகம் யெஸ் வங்கி மீது moratorium கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டது. இதன்பின் செய்யப்பட்ட ஆய்வில் இவ்வங்கி செய்த பல குளறுபடிகள் வெளியானது.
இதோடு இந்த வங்கியை காப்பாற்ற ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா களத்தில் இறங்கியது குறிப்பிடத்தக்கது.

சந்தேகம்
ஏற்கனவே லட்சுமி விலாஸ் வங்கியின் நிர்வாகக் குழுவில் ஏற்பட்ட பிரச்சனை மற்றும் கொரோனா காரணமாகவும் கிளிக்ஸ் கேப்பிடல் நிறுவனத்தின் கூட்டணி முயற்சி தாமதம் ஆன நிலையில் தற்போது மத்திய நிதியமைச்சகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள காரணத்தால் இக்கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை தொடருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

கைவிடப்படும்..
சில நாட்களுக்கு முன்பு கிளிக்ஸ் கேப்பிடல் நிறுவனம், லட்சுமி விலாஸ் வங்கி கூட்டணி தொடர்பான பணிகளைத் தொடர்ந்து தாமதம் செய்தால் கூட்டணி ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு விலகுவதாகக் கிளிக்ஸ் கேப்பிடல் எச்சரித்தது.
இதனால் கிளிக்ஸ் கேப்பிடல் உடனான கூட்டணி தற்போது மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறியுள்ளது.

Clix கேப்பிடல் - லட்சுமி விலாஸ் வங்கி
நிதி சேவை துறையில் வர்த்தக வளர்ச்சிக்காகவும், வாடிக்கையாளர் எண்ணிக்கை வளர்ச்சிக்காகவும் லட்சுமி விலாஸ் வங்கி டெல்லியை சேர்ந்த Clix கேப்பிடல் நிறுவனத்துடன் இணைத்திடப் சில மாதங்களுக்கு முன்பு பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த வர்த்தக இணைப்பால் இரு தரப்பிற்கும் பல்வேறு சாதகமான வர்த்தக வளர்ச்சி இருப்பதாகக் கருத்து நிலவி வந்தது.

ஒப்பந்தம்
லட்சுமி விலாஸ் வங்கி மற்றும் Clix கேப்பிடல் சர்வீஸ், Clix பைனான்ஸ் ஆகிய கூட்டணி நிறுவனங்கள் மத்தியில் முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிந்து non-binding letter of intent ஒப்பந்தம் கையெழுத்தாகி வர்த்தக இணைப்பிற்காகத் தயாராகி வந்தது.
ஆனால் இந்த இணைப்பு மற்றும் அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகள் அனைத்தும் கொரோனா லாக்டவுன் ஆகியவற்றின் காரணமாகக் காலதாமதம் ஆனது. தற்போது மத்திய நிதியமைச்சகத்தின் moratorium கட்டுப்பாடுகளால் மேலும் தாமதமாகியுள்ளது.

இந்தியாபுல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ்
லட்சுமி விலாஸ் வங்கியைக் கைப்பற்ற இந்தியாபுல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் முயற்சி செய்த போது ரிசர்வ் வங்கி மறுப்புத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது Clix கேப்பிடல் உடனான வர்த்தக இணைப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.