கதறும் இந்திய குடும்பங்கள்! ஒரு வாரத்துக்கு மேல தாக்கு பிடிக்க முடியாதுங்க! ஷாக் சர்வே ரிப்போர்ட்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா வைரஸ் நோயால் மக்கள் கொத்து கொத்தாக இறந்து கொண்டு இருக்கிறார்கள். அதில் இந்தியா மட்டும் விதி விலக்கல்ல.

 

ஆனால் மறு பக்கம், இந்திய குடும்பங்களின் பொறுமையையும், வெறுமையையும் சோதித்துக் கொண்டு இருக்கிறது கொரோனா.

இப்போது CMIE - Centre for Monitoring Indian Economy என்கிற அமைப்பு இந்திய குடும்பங்களைப் பற்றி சில அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டு இருக்கிறது.

ஒரு வாரம் தான்

ஒரு வாரம் தான்

CMIE வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் சுமாராக 3-ல் ஒரு பங்கு குடும்பங்கள் (34 சதவிகித குடும்பங்கள்), இன்னும் ஒரு வாரத்துக்கு மேல் இந்த சூழலை தாக்கு பிடிக்க முடியாது, இந்த லாக் டவுன் பிரச்சனையை சமாளிக்கும் விதத்தில் கையில் பணமோ பொருளோ இல்லை எனச் சொல்லி இருக்கிறார்கள்.

நகரம் Vs கிராமம்

நகரம் Vs கிராமம்

இந்தியாவின் நகர் புறங்களில் வாழும் குடும்பத்தினர் மத்தியில் 65 சதவிகித குடும்பங்களிடம் அடுத்த ஒரு வார காலத்துக்குத் தேவையான பொருட்கள் இருக்கிறதாம். ஆனால் இந்தியாவின் முதுகெலும்பான கிராம புறங்களில் 54 சதவிகித குடும்பங்களிடம் தான் அடுத்த 1 வாரத்துக்கு தேவையான பொருட்கள் கைவசம் இருக்கிறதாம்.

84 % பேர்
 

84 % பேர்

அதே போல இந்திய குடும்பங்களில் 84 சதவிகித குடும்பங்கள், தங்களின் மாதாந்திர வருமானம் குறைந்து இருக்கிறது எனவும் வருத்தத்தைப் பதிவு செய்து இருக்கிறார்கள். இதில் போதாக்குறைக்கு வேலை இழப்புகள் வேறு தாறுமாறாக அதிகரித்துக் கொண்டு இருக்கிறது.

வேலை இழப்புகள்

வேலை இழப்புகள்

கடந்த மார்ச் 21 அன்று Consumer Pyramids Household Survey (CPHS)-ன் படி, இந்தியாவில் 7.4 சதவிகிதம் தான் வேலை இல்லா திண்டாட்டம் இருந்தது. ஆனால் இந்த மே 05, 2020 அன்று வேலை இல்லா திண்டாட்டம் 25.5 சதவிகிதமாக அதிகரித்து இருக்கிறது. இது ஒட்டு மொத்த இந்திய குடும்பங்களையும் கடுமையாக பாதித்து இருக்கிறது.

எந்த மாநிலம்

எந்த மாநிலம்

இந்த லாக் டவுன் பிரச்சனையால் பீஹார், ஹரியானா, ஜார்கண்ட் போன்ற பின் தங்கிய மாநிலங்கள் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறதாம். டெல்லி, பஞ்சாப், கர்நாடகா போன்ற மாநிலங்கள் இந்த கொரோனா லாக் டவுனால் குறைவாகவே பாதிக்கப்பட்டு இருப்பதாக CMIE அறிக்கை சொல்கின்றன.

தீர்வு

தீர்வு

இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் கடுமையான வறுமையைத் தவிர்க்க, கொரோனா லாக் டவுனால் பிரச்சனையில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு வேகமாக பணப் பரிமாற்றம் செய்து உதவ வேண்டும் என்கிறது அறிக்கை. இன்று மாலை 4 மணிக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 20 லட்சம் கோடி ரூபாய் திட்டத்தைக் குறித்துப் பேச இருக்கிறார். அதில் மக்களுக்கு உதவுவது பற்றி ஏதாவது திட்டம் இருக்கிறதா எனப் பார்ப்போம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

CMIE report said Indian families are in very bad situation

The Center for Monitoring Indian Economy said that the indian households are in very bad situation due to coronavirus lock down. 84 % house holds monthly income decreased and 34 % households may run out of resources in one week.
Story first published: Wednesday, May 13, 2020, 11:27 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X