ஐடி ஊழியர்களுக்கு நல்ல செய்தி சொன்ன காக்னிசண்ட்.. அப்படி என்ன நல்ல விஷயம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா என்னும் கொடிய அரக்கனால் நாட்டில் அதிகரித்து வரும் உயிரிழப்புகள் மட்டும் அல்ல, பொருளாதாரமும் பின்னோக்கி சென்று கொண்டு இருக்கிறது.

அதோடு பல துறையில் வேலையின்மை தலைவிரித்தாடி வருகிறது. பல ஆயிரம் பேர் தங்களது வேலையினை இழந்து, சம்பளத்தினை இழந்து வறுமையில் தவித்து வருகின்றனர்.

அதிலும் முக்கியமாக அண்டை நாடுகளை அதிகம் சார்ந்திருக்கும் ஐடி துறையில், இதன் தாக்கம் மிகவும் அதிகமாகவே உள்ளது எனலாம்.

ஐடி நிறுவனங்கள் பாதிப்பு
 

ஐடி நிறுவனங்கள் பாதிப்பு

அதிலும் இன்று கொரோனாவினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா தான் ஐடி துறையில் முக்கிய பங்கு வகிக்கும் நாடுகளில் ஒன்றாகும். இதன் காரணமாக ஐடி நிறுவனங்களுக்கு கிடைக்கும் புதிய புராஜக்ட்டுகள் கிடைக்காமை, தேவை குறைவும், பொருளாதார பிரச்சனை, அதிலும் பல துறை சார்ந்த நிறுவனங்களும், கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் செலவினை குறைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

ஊழியர்களுக்கு பிரச்சனை

ஊழியர்களுக்கு பிரச்சனை

ஐடி நிறுவனங்களில் தலை தூக்கியுள்ள இந்த பிரச்சனையினால் ஏற்கனவே பல முன்னணி நிறுவனங்கள் கூட, பணி நீக்கம் மற்றும் சம்பள குறைப்பு, பதவி உயர்வு போன்ற நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதற்கு ஐடி துறையின் ஜாம்பவான் ஆக உள்ள, பல பெரிய ஐடி நிறுவனங்கள் கூட பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பல ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் இதன் தாக்கம் இருந்தாலும், இந்தியாவில் குறிப்பாக ஐடி ஊழியர்கள் பெரும் பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர் என்றே கூறலாம்.

டிஜிட்டல் திறன்களை கொண்டவர்களை காப்பாற்றுவோம்

டிஜிட்டல் திறன்களை கொண்டவர்களை காப்பாற்றுவோம்

தற்போதைய பொருளாதார நெருக்கடியிலும், மோசமான நிலையில் இருந்தும் டிஜிட்டல் திறனைக் கொண்ட பணியாளர்களை பணி நீக்கங்களிலிருந்து காக்னிசண்ட் பாதுகாக்கும் என்றும் அதன் தலைமை நிதி அதிகாரி தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சர்வதேச அளவில் கடினமான வணிகச் சூழல் இருந்தாலும், கடந்த ஆண்டில் கிளவுட் தொழில்நுட்ப பாதையானது காக்னிசண்ட் நிறுவனத்திற்கு நல்லதொரு நிலைபாட்டை ஏற்படுத்த உதவியதாக முன்னதாக, சில வாரங்களுக்கு முன்பு ஒர் அறிக்கையில் காக்னிசண்டின் தலைமை நிர்வாக அதிகாரி பிரையன் ஹம்பரிஸ் கூறியிருந்தார்.

டிஜிட்டல் வருவாய்
 

டிஜிட்டல் வருவாய்

நியூஜெர்சியை தளமாகக் கொண்ட இந்த ஐடி நிறுவனம் டிஜிட்டல் வணிகம் மூலமாக அதன் வருவாயில் சுமார் 38 சதவீதத்தினை சம்பாதித்துள்ளதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக 16.8 பில்லியன் டாலர் வர்த்தகத்தினை டிஜிட்டல் வர்த்தகத்தில் இருந்து பெற்றதாக தெரிவித்துள்ளது. இதில் வாடிக்கையாளர்களை கிளவ்டு சேவைக்கு மாற்ற உதவுதல், ஆன்லைன் மற்றும் சமூக ஊடகங்களில் சந்தைப்படுத்துதல் மற்றும் ஸ்மார்ட் போன் அப்ளிகேஷன்ஸ் என பலவகையில் ஊக்குவித்து வருவதாகவும், அவற்றை பராமரித்தல் என பல சேவைகளை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

ஊழியர்கள் பணி நீக்கம்

ஊழியர்கள் பணி நீக்கம்

நிறுவனங்கள் செலவுகளை குறைக்க திட்டமிடும் நிலையில், அதன் ஒரு பகுதியாக ஊழியர்களை வெளியேற்றி வருகின்றது. அதற்கான பல நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக காக்னிசண்ட் பணி நீக்கம் செய்ய முடிவு செய்தது. இதன் ஒரு பகுதியாக கணிசமான ஊழியர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

டிஜிட்டல் திறன் உள்ளவர்கள் தப்பலாம்

டிஜிட்டல் திறன் உள்ளவர்கள் தப்பலாம்

எனினும் இதில் உள்ள நல்ல விஷயம் என்னவெனில் என்னதான் பணி நீக்கம் செய்யப்பட்டாலும், கொரோனாவினால் ஏற்பட்டுள்ள மந்த நிலையின் காரணமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், டிஜிட்டல் திறன் உள்ள பணியாளர்கள் பணி நீக்கம் என்னும் கண்டத்திலிருந்து தப்பி பிழைப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

டிஜிட்டல் திறனுக்கு நல்ல வாய்ப்பு

டிஜிட்டல் திறனுக்கு நல்ல வாய்ப்பு

ஆக டிஜிட்டல் திறன் உள்ளவர்கள் சில காரணங்களால் அவர்களது திறன் பயன்படுத்தப்படாவிட்டாலும், அவர்களுக்கு சரியான திறன்கள் உள்ளன. ஆக அந்த திறமையை நாங்கள் மீட்டெடுப்பதற்காக நாங்கள் அவர்களை பாதுக்காப்போம். மேலும் தற்போது ஐடி துறையில் கிளவுட் அனலிஸ்டிக்ஸ் மற்றும் சைபர் செக்யூரிட்டி போன்ற துறைகளில் வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆக இத்துறை சார்ந்த திறன் உள்ளவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் காத்திருக்கிறது என்றே கூறலாம்.

டிஜிட்டல் தேவை அதிகரிப்பு

டிஜிட்டல் தேவை அதிகரிப்பு

மேலும் தற்போது உலகம் முழுக்க கொரோனாவால் பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், DIGITAL தேவைகள் அதிகரித்துள்ளன. ஏனெனில் கொரோனாவினால் உலகின் பல நாடுகள் முடங்கியுள்ள நிலையில், பெரும்பாலான நிறுவனங்கள் டிஜிட்டல் சேவைகளுக்கு மாறியுள்ளன. ஆக மொத்தம் இனி வரும் காலத்தில் டிஜிட்டல் திறன்களுக்கான தேவை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Cognizant will protect employees with digital skills from layoff

IT major Cognizant will protect employees with digital skill from lay off even if they remain under utilized during the ongoing economic issues.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more