இன்ஃபோசிஸ் CEO மீதான புகார்களுக்கு ஆதாரம் இல்லை..! முறைகேடுகள் நடக்கவில்லை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் நாராயண மூர்த்தியின் இன்ஃபோசிஸ் நிறுவனமும் ஒன்று. உலக ஐடி நிறுவனங்களில் கூட இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு ஒரு தனி இடம் உண்டு.

இந்த நிறுவனத்தில் வேலைக்கு சேர வேண்டும் என எத்தனையோ இந்திய இளைஞர்கள் இப்போதும் கம்ப்யூட்டரும் கையுமாக அலைந்து கொண்டு இருக்கிறார்கள்.

ஆனால் இப்படிப்பட்ட ஒரு பெரிய கார்ப்பரேட் நிறுவனமே சில பெரிய முறைகேடு வேலைகளைச் செய்து, தன் நிகர லாபத்தைக் உயர்த்திக் காட்டிக் கொண்டு இருக்கிறார்கள் என ஒரு புகார் எழுந்தது.

இவர்கள் தானாம்
 

இவர்கள் தானாம்

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் கணக்கு வழக்குகளில் பல முறைகேடுகளை இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி (CEO) சலீல் பரேக் மற்றும் முதன்மை நிதி அதிகாரி (CFO) நிலஞ்சன் ராய் தான் செய்து இருப்பதாகச் சொன்னார்கள். இப்படி இன்ஃபோசிஸ் உயர் அதிகாரிகள் மீது பொது வெளியில் குற்றம் சுமத்துவது சில இன்ஃபோசிஸ் நிறுவன ஊழியர்களே தான் என ஒரு கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்கள்.

குற்றச்சாட்டு

குற்றச்சாட்டு

அந்தக் கடிதத்தில், சலீல் பரேக் மற்றும் நிலஞ்சன் ராய் இணைந்து பல காலாண்டுகளாக, முறையற்ற, மோசமான நடவடிக்கைகளைச் செய்து வருவதாகச் சொல்லி இருந்தார்கள். இந்த இரண்டு உயர் அதிகாரிகளும் மோசடி செய்ததற்கான இ மெயில் மற்றும் வாய்ஸ் ரெக்கார்டிங் தங்களிடம் இருப்பதாகவும் சொல்லி இருந்தார்கள் பெயர் வெளியிடாமல் புகார் சொன்ன ஊழியர்கள். கடந்த செப்டம்பர் - அக்டோபர் 2019 கால கட்டத்தில் இந்த தவறுகளை எல்லாம் சுட்டிக் காட்டி, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இயக்குநர் குழுவுக்கு, ஒரு கடிதம் எழுதி இருந்தார்கள்.

மோசடி விளக்கம்

மோசடி விளக்கம்

கடந்த காலாண்டில், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் விசா கட்டணச் செலவுகள் போன்ற பல செலவுகளை, முழுமையாக கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம் என அழுத்தம் கொடுத்து இருக்கிறார்களாம். உதாரணமாக விசா கட்டணத்துக்கு 10,000 ரூபாய் செலவு செய்து இருந்தால், 5,000 அல்லது 6,000 ரூபாயை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்வது. இப்படி செலவுகளைக் குறைத்தால் லாபம் கூடத் தானே செய்யும். அதைத் தான் இன்ஃபோசிஸ் நிறுவனமும் செய்து இருக்கிறது என்கிறார்கள் புகார் கொடுத்தவர்கள். இதெல்லாம் ஜு ஜு பி என்கிற ரேஞ்சில் ஒரு மெகா மோசடியைச் செய்து இருப்பதாக சுட்டிக் காட்டினார்கள் ஊழியர்கள்.

350 கோடி முறைகேடு
 

350 கோடி முறைகேடு

இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு சில ஒப்பந்தம் மூலமாக 50 மில்லியன் டாலர் (சுமார் 350 கோடி ரூபாய்) பணம் வந்திருக்கிறது. வந்த போது அதை ஒழுங்காக கணக்கில் எடுத்துக் கொண்டு வந்துவிட்டார்கள். ஆனால் சில பல காரணங்களுக்காக வந்த 50 மில்லியன் டாலரை மீண்டும் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். ஆக இப்போது இன்ஃபோசிஸ் நிறுவனத்துக்கு வந்த 50 மில்லியன் கையில் இல்லை. இந்த இடத்தில் தான், 50 மில்லியனை திருப்பிக் கொடுத்ததை கணக்கில் கொண்டு வர வேண்டாம் என மேலிடத்தில் இருந்து அழுத்தம் கொடுத்ததாக புகார் சொல்லி இருந்தார்கள்.

என்ன மோசடி

என்ன மோசடி

ஒரு நிறுவனத்துக்கு எப்படி லாபம் வரும்.

மொத்த வருவாய் - மொத்த செலவுகள் = நிகர லாபம்.

உதாரணமாக மொத்த வருவாய் ரூ.100 - மொத்த செலவுகள் ரூ.85 = நிகர லாபம் ரூ.15.

இப்போது இந்த நிகர லாபத்தை அதிகரிக்க வேண்டும் என்றால் வருவாயை அதிகரிக்க வேண்டும் அல்லது செலவைக் குறைக்க வேண்டும். இன்ஃபோசிஸ் இரண்டையும் செய்து இருக்கிறது.

1. விசா கட்டணம் போன்ற பல செலவுகளை முறையாக கணக்கில் கொண்டு வரவில்லை எனவே இன்ஃபோசிஸ் சொல்லும் கணக்குப் படி செலவு குறைந்து இருக்கிறது.

2. வராத 50 மில்லியன் டாலர் (350 கோடி ரூபாய்) வருமானத்தை வந்ததாக கணக்கில் எடுத்துக் கொண்டார்கள். ஆக இன்ஃபோசிஸ் கணக்குப் படி வருமானம் அதிகரித்து இருக்கிறது என்றார்கள் புகார் கொடுத்தவர்கள்.

ஆடிட்டர்கள் என்ன செய்தார்கள்

ஆடிட்டர்கள் என்ன செய்தார்கள்

மேலே சொன்ன 50 மில்லியன் டாலர் விவகாரம் போல, பல முக்கிய விவரங்களை ஆடிட்டர்களுக்கோ அல்லது இயக்குநர் குழுவுக்கோ கூட தெரியாத அளவுக்கு பார்த்துக் கொண்டார்களாம். எனவே ஆடிட்டர்களும் தங்களுக்கு கிடைத்த தகவல்களை வைத்துக் கொண்டு கணக்கு வழக்குகளை சரி பார்த்துக் கொடுத்துவிட்டார்களாம். குறிப்பாக பெரிய ஒப்பந்தங்களில் இருந்து வரும் வருமானங்களில், பல முறைகேடுகள் செய்து இருப்பதாகவும் தங்கள் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்கள் அந்த ஊழியர்கள்.

சலீல் பரேக்

சலீல் பரேக்

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரியாக இருக்கும் சலீல் பரேக், பல பரிசீலனை மற்றும் அனுமதிகளை முறையாக மேற்கொள்ளவில்லை என்றார்கள் புகார் கொடுத்தவர்கள். இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் விற்பனை பிரிவுக்கும், சில பல டீல்களுக்கு அப்ரூவல்களை இ மெயிலில் பதிவு செய்ய வேண்டாம் எனவும் சொல்லி இருக்கிறார்களாம். இவை எல்லாவற்றையும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் லாபத்தை அதிகரித்துக் காட்டும் எண்ணத்துடன் சலீல் பரேக் செய்திருப்பதாக புகாரில் சொல்லி இருந்தார்கள் ஊழியர்கள்.

நிலஞ்சன் ராய்

நிலஞ்சன் ராய்

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முதன்மை நிதி அதிகாரி (CFO) என்கிற முறையில், நிறுவனத்தில் நடக்கும் தவறுகளை முறையாகச் சொல்லி இருக்க வேண்டும். ஆனால் நிலஞ்சன் ராய் அதை சி இ ஓ வழியில் மறைத்துவிட்டார் எனவும் குற்றம்சாட்டினார்கள் அந்த ஊழியர்கள். அதோடு முதன்மைச் செயல் அதிகாரி, இன்ஃபோசிஸ் இயக்குநர் குழுவில் இருக்கும் மற்றவர்களைப் பற்றி தரக் குறைவாகப் பேசியதையும் இந்த ஊழியர்கள் தங்கள் புகாரில் சொல்லி இருந்தார்கள்.

இரண்டாவது பெரிய புகார்

இரண்டாவது பெரிய புகார்

இந்த புகார்களை எல்லாம் ஒரு பக்கம் விசாரித்துக் கொண்டு இருக்கும் போதே, மீண்டும் இன்ஃபோசிஸ் நிறுவன சி இ ஓ சலீல் பரேக் மீது இன்னொரு புகார் எழுந்தது. அந்த புகாரையும் விசாரிக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டது இன்ஃபோசிஸ் இயக்குநர்கள் குழு மற்றும் இன்ஃபோசிஸ் ஆடிட் கமிட்டி.

புகார் விளக்கம்

புகார் விளக்கம்

சலீல் பரேக் கடந்த ஜனவரி 2018-ல் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சி இ ஓ-வாக் பொறுப்பேற்றுக் கொண்டார். இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் சி இ ஓ பெங்களூர் அலுவலகத்தில் இருந்து தான் செயல்பட வேண்டும் என்பது விதி. ஆனால் அதை மீறி சலீல் பரேக் மும்பையில் இருந்து இயங்கிக் கொண்டு இருக்கிறார்.

பெங்களூரு வரமாட்டாரா

பெங்களூரு வரமாட்டாரா

இதைத் தான் இரண்டாவது புகாரில் சுட்டிக் காட்டி இருக்கிறார்கள். சலீல் பரேக்கை, பெங்களூருக்கு அழைத்து வருவதில் இன்ஃபோசிஸ் இயக்குநர் குழுவுக்கு என்ன சிக்கல் என கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். அதோடு சலீல் பரேக் மாதம் இரண்டு முறையாவது பெங்களூரு வந்து போவதையும் குறிப்பிட்டு இருக்கிறது அந்த இரண்டாவது புகார்.

அது என்ன ஸ்பெஷல் கவனிப்பு

அது என்ன ஸ்பெஷல் கவனிப்பு

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் அனைவருமே அலுவலகத்துக்கு வந்து போகும் செலவை ஊழியர்களே ஏற்றுக் கொள்கிறார்கள். அப்படி இருக்கும் போது சலீல் பரேக் மும்பையில் இருந்து பெங்களூரு வந்து போகும் செலவுகளை மட்டும் நிறுவனம் கொடுப்பது ஏன்..? எனவும் கேள்வி எழுப்பி இருக்கிறார். அதோடு இதுவரை சலீல் பரேக் பயணத்துக்கு, இன்ஃபோசிஸ் நிறுவனம் கொடுத்த பணத்தை திருப்பி வசூலிக்கவும் சொல்லி இருக்கிறது அந்த இரண்டாவது புகார் கடிதம்.

பேர் சொல்லமாட்டேன்

பேர் சொல்லமாட்டேன்

இந்த இரண்டாவது புகார் கடிதம், கையெழுத்து இடப் படாமலும், தேதி குறிப்பிடாமலும் இருக்கிறது. இதை எழுதியது, இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிதித் துறையில் வேலை பார்க்கும் ஒரு ஊழியர் தான் எனவும் அந்தக் கடிதத்தில் சொல்லப்பட்டு இருக்கிறதாம். அதோடு, தன் விவரங்களை வெளியிட்டால், தன் மீது கடுமையான பழிவாங்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பயந்து பெயரைக் குறிப்பிடவில்லை எனவும் சொல்லப்பட்டு இருக்கிறதாம்.

விசாரணை

விசாரணை

இந்த புகார்களை இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் ஆடிட் கமிட்டி, ஷர்துல் அமர்சந்த் மங்கள்தாஸ் அண்ட் கோ மற்றும் பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் உதவியோடும் ஒரு தனி விசாரணையைத் தொடங்கியது. சில பல வாரங்களுக்குப் பிறகு இந்த ஆடிட் கமிட்டி தன் விசாரணை முடிவுகளை வெளியிட்டு இருக்கிறார்கள்

ஆதாரம் இல்லை

ஆதாரம் இல்லை

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் ஆடிட் கமிட்டி நடத்திய விசாரணையில், சலீல் பரேக் மற்றும் நிலஞ்சன் ராய் உட்பட எந்த ஒரு உயர் அதிகாரிகளும் தவறாக நடந்து கொள்ளவில்லை எனச் சொல்லி இருக்கிறார்கள். அதோடு, எந்த ஒரு நிதி முறைகேடுகளும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் நடக்கவில்லை என ஆடிட் கமிட்டி தன் முடிவுகளைச் சொல்லி இருக்கிறார்கள்.

லே ஆஃப்

லே ஆஃப்

இந்த புகார் எழுந்த பின், ஆனால் இந்த ஆடிட் கமிட்டி முடிவுகள் வெளியாவதற்கு முன், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மிட் லெவல் ஊழியர்களில் சுமார் 10,000 பேரை, இன்ஃபோசிஸ் நிறுவனம், லே ஆஃப் செய்ய இருப்பதாகச் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது. எது எப்படியோ, புகார்களை முழுமையாக விசாரித்து ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது இன்ஃபோசிஸ். இனியாவது இது போன்ற சர்ச்சைகளில் சிக்காமல், இன்னும் நேர்மையாக இருந்தால் நல்லது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

complaints against infosys CEO do not have evidence

The Infosys audit committee said that the whistle blower complaints against infosys CEO do not have enough evidence. There is no executive misconduct and financial impropriety in infosys.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more