ப சிதம்பரம் பளார் கேள்வி..! வெங்காயத்துக்கு நோ என்றால்... அப்போ "அவகேடோ"வா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: கடந்த புதன்கிழமையன்று மக்களவையில் குளிர்கால அமர்வின் போது வெங்காயம் விலை அதிகரித்து வரும் நிலையில், நான் வெங்காயம் அதிகம் சாப்பிடுவதில்லை. இதனால் வெங்காயம் விலை என்னை அதிகம் பாதிக்கவில்லை என்றும் கூறியிருந்தார்.

 

நானும் எனது குடும்பத்தினரும் கடுமையான விலையேற்றம் உள்ள காய்கறிகளை சாப்பிடுவதில்லை. அதிலும் வெங்காயம் பூண்டு அதிகம் சாப்பிடுவதில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ப சிதம்பரம், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு, 106 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ள ப சிதம்பரம், தனது குரலை ஒரு போதும் அரசாங்கத்தால் அடக்க முடியாது என்று கூறியுள்ளார்.

நிதியமைசருக்கு பேச்சுக்கு பதிலடி

நிதியமைசருக்கு பேச்சுக்கு பதிலடி

இது தவிர வெங்காயம் குறித்த நிதியமைசரின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அவர் புதன் கிழமையன்று மக்களவையில் வெங்காயம் சாப்பிடுவதில்லை என்று கூறினார். அப்படி எனில் அவர் வேறு என்ன சாப்பிடுவார். அவகேடோ தான் சாப்பிடுவாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். நான் வெங்காயம் சாப்பிடாத குடும்பத்தை சேர்ந்தவள் என்று நிதியமச்சர் கூறிய நிலையில், இப்படி ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார் எதிர்கட்சியை சேர்ந்த ப சிதம்பரம்.

நாட்டையே உலுக்கி வரும் வெங்காயத்தின் விலை

நாட்டையே உலுக்கி வரும் வெங்காயத்தின் விலை

ஒரு புறம் நாட்டையே உலுக்கி வரும் வெங்காயத்தின் விலையால், கதிகலங்கி போயுள்ள மக்கள், இதுபோன்ற உரையாடல்களினால் கடுப்பாகியுள்ளனர் என்றே கூறலாம். இருக்கும் பிரச்சனையில் இது ஒரு முக்கிய பிரச்சனையா என்ற நிலையில், ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜிடிபி விகிதம் வீழ்ச்சி கண்டுள்ள இந்த நிலையில், மக்களை வாட்டி வதைக்கும் இப்பிரச்சனையிலிருந்து வெளியேற, அரசும் சரி, எதிர் கட்சிகளும் சரி ஏதேனும் வழி இருந்தால் கூறலாம் என்பதே மக்களின் கருத்து.

விலை உயர்வை கண்டித்து ஆர்பாட்டம்
 

விலை உயர்வை கண்டித்து ஆர்பாட்டம்

இந்த நிலையில் இன்று காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள், நாடாளுமன்ற வளாகத்தில் வெங்காயம் விலையை உயர்வை கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இவர்களோடு முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப சிதம்பரமும் கலந்து கொண்டார். இந்த ஆர்பாட்டத்தில் அரசாங்கம் வெங்காயம் விலையை குறைத்து, ஏழைகளை துன்புறுத்துவதை நிறுத்த வேண்டும் என்ற பதாகைகளோடு, வெங்காயம் நிறைந்த கூடைகளோடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.

முடிவு தான் என்ன?

முடிவு தான் என்ன?

விண்ணைத் தொட்டு வரும் வெங்காயத்தின் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது அடித்தட்டு மக்களே. தற்போது வெங்காயம் மட்டும் அல்ல, இதனை தொடர்ந்து, வெங்காயம், பூண்டு, முருங்கைக்காய், கத்தரிக்காய் என காய்கறி வகைகளும் படையெடுக்க தொடங்கியுள்ளன. ஏற்கனவே 16 மாதங்களில் இல்லாத அளவுக்கு சில்லறை பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில், இந்த விலை ஏற்றத்தால் இன்னும் அதிகரிக்கலாம் என்றும் கருதப்படுகிறது. ஆக அரசு விரைவில் இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே இங்கு அனைவரின் வேண்டுகோளாக இருக்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Congress leader P Chidambaram asks finance minister doesn’t eat onions. So what does she eat? Does she eat avocado?

Congress leader P Chidambaram asks finance minister she doesn’t eat onions. So what does she eat? Does she eat avocado?. At that same time congress leaders, including P.Chidambaram protest in parliament over onion prices
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X