இஎம்ஐயில் ப்ரிட்ஜ், டிவி, செல்போன் என அடுத்து பொருட்கள் வாங்கும் மக்கள்.. செய்யும் பெரும் தவறு?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: ப்ரிட்ஜ், டிவி, வாஷிங் மெஷின், செல்போன் என வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்கும் சாமானியர்கள் அதன்பிறகு பெரும்பாலும் ஒரே தவறை திரும்ப திரும்ப செய்து சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள். அவர்கள் அப்படி செய்யும் தவறு என்ன? என்பதை இப்போது பார்ப்போம்.

 

ப்ரிட்ஜ், டிவி, வாஷிங் மெஷின், செல்போன், பைக், கார் என நுகர்வு பொருட்கள் வாங்க நம் நாட்டில் அதிக அளவில் கடன்கள் வழங்கப்படுகின்றன. இப்படிப்பட்ட கடன்களை முன்பெல்லாம் தனியார் நிதி நிறுவனங்கள் மட்டுமே வழங்கி கொண்டிருந்தன.

ஆனால் இப்போது பல வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இந்த கடன்களை குறைந்த வட்டியில் வழங்குகின்றன. இதற்காக ஒவ்வொரு கடையிலும் ஸ்டால்கள் உள்ளன.

லாபத்தில் 19% சரிவு.. பலப்பரிச்சையில் வெற்றி கண்ட பஜாஜ் ஆட்டோ..!

காசு இருக்காது

காசு இருக்காது

நம் மக்களிடம் மொத்தமாக காசு கையில் இருப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்று. சமானிய மக்களும் அனைத்து வசதிகளும் இன்றைக்கு பெறுகிறார்கள் என்றால் அதற்கு மாத தவணை திட்டம் மிக முக்கிய காரணம் என்பதை மறுக்க இயலாது.

உண்மை என்ன

உண்மை என்ன

ப்ரிட்ஜ், டிவி, வாஷிங் மெஷின், செல்போன், கட்டில், பீரோ, பெட், என வீட்டு உபயோகப்பொருட்கள் பலவற்றை தனியார் நிதி நிறுவனங்களும், வங்கிகளும், அதிகம் விற்பனையாகும் பெரிய கடைகளில் ஸ்டால் போட்டு அமர்ந்து கடன் வழங்கி வருகின்றன. இவற்றுக்கு குறைந்த பட்ச ஆவணங்களே தேவை என்பதுடன், கடனும் எளிதாக வழங்கப்படுகின்றன. 0 சதவீத வட்டி என்ற பெயரில் வழங்கும் இந்த கடன்களுக்கு பிராசசிங் கட்டணம், வட்டி என 2.5 சதவீதம் வரை மொத்த கடன் தொகையில் மாதம் மாதம் வசூலிக்கப்படுகின்றன.. உதாரணமாக 14 ஆயிரத்திற்கு பொருட்கள் வாங்கினால் 9மாத கால இஎம்ஐயில் 16 ஆயிரம் வரை கட்ட வேண்டியது வரும்..

மாதம் மாதம் அபராதம்
 

மாதம் மாதம் அபராதம்

இந்த கடன்கள் வாங்கும் மக்கள் அடுத்தடுத்து இதேபோன்று தான் பொருட்களை இஎம்ஐயில் தான்வாங்கி போடுகிறார்கள். இதில் பலருக்கும் தெரியாத ஒன்று ஒரு நாள் தாமதமாக கட்டினாலும் பெரிய அளவில் தொகை வசூலிக்கப்படும் என்பது தான். சரியாக இஎம்ஐ தேதி அன்று வங்கியில் பணம் இல்லாத காரணத்தால் அபராதம் கட்டும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இப்படி மாதம் மாதம் அபராதம் கட்டுபவர்கள் மிக அதிகம். அதுதான் வங்கிளுக்கும், நிதி நிறுவனங்களும் மிக லாபம் என்பதுடன், நுகர்வோருக்கு பெரிய நஷ்டம், குறைந்தபட்சம் ஓராண்டு இஎம்ஐயில் 2 இஎம்ஐக்கு உரிய பணத்தை உரிய நேரத்தில் கட்டாமல் ஒரு நாள் தாமதித்து கட்டினால் சுமார் 800 ரூபாய் வரை கூடுதலாக கட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

தனிநபர் கடன் ஆஃபர்

தனிநபர் கடன் ஆஃபர்

இன்னொரு விஷயத்தையும் இங்கே சொல்லியாக வேண்டும். நுகர்வோர் கடனை முறையாக கட்டியவர்களுக்கு தனியார் நிதிநிறுவனங்கள் தனிநபர் கடனை எந்த நிபந்தனையும் இன்றி 50 ஆயிரம் முதல் ஒருலட்சம் வரை உடனே வழங்குகின்றன. அதற்கு வட்டியாக 18 சதவீதத்திற்கு மேல் வசூலிக்கின்றன இங்கு தான் நம் மக்கள் பெரிய சிக்கலுக்குள் விழுகிறார்கள். தேவை இருக்கிறதோ, இல்லையோ, கடன் தருவதாக சொன்னால் உடனே மக்கள் வாங்கிவிடுகிறார்கள். அதன் பின்னால் உள்ள சிக்கலை அவர்கள் உணர்வது இல்லை.

அபராதம் மிக அதிகம்

அபராதம் மிக அதிகம்

நம்மால் கடனை கட்ட முடியுமா? மாதம் மாதம் அதற்கு உரிய பணத்தை நம்முடைய சம்பளத்தில் ஒதுக்கிவிட முடியுமா? என்பதை பலரும் உணருவதில்லை.. தனியாரிடம் கடன் வாங்கினால் கூட ஓரிரு நாள் தள்ளி சொன்னால் விட்டுவிடுவார்கள் விட்டுவிடுவார்கள்.. ஆனால் தனியார் நிதி நிறுவனங்களில், வங்கிகளில் கட்டாயம் இஎம்ஐ கட்டியே ஆக வேண்டும் என்பது விதி.. இல்லாவிட்டால் 500 முதல் 600 வரை அபராதம் கட்ட வேண்டியது வருகிறது.

தேவையில்லாமல் வேண்டாம்

தேவையில்லாமல் வேண்டாம்

இன்னொரு புறம் கடனை தேவையில்லாமல் வாங்கி அதை சரியாகபயன்படுத்தாமல் அந்த காசையே அடுத்த மாதத்தில் இருந்தே இஎம்ஐக்கு கட்டும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். எனவே கடன் தருகிறார்கள் என்பதற்காக யாரும் கடன் வாங்காதீர்கள். தேவை இருந்தாலும், கடனை வாங்கினால், எதற்கு வாங்குகிறீர்களோ, அதற்கு மட்டும் பயன்படுத்துங்கள். கடனுக்கான வட்டி எவ்வளவு, மாத இஎம்ஐ தவறினால் வட்டி எவ்வளவு, பிராசிங் கட்டணம் எவ்வளவு உள்ளிட்ட விவரங்களை தெளிவாக கேட்டுக்கொள்ளுங்கள்.

மிக கவனம் தேவை

மிக கவனம் தேவை

இதேபோல் கடனை கட்ட முடியுமா? அதற்கு உரிய நிதி ஆதாரம் எப்போதும் இருக்குமா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். சமானியர்கள் செய்யும் பெரும் தவறே, கடனை கட்ட முடியுமா என்பதை உறுதி செய்ய இயலாமல், கடனை வாங்குகிறார்கள், பின்னாளில் அதற்கு மிகப்பெரிய விலையை கொடுக்குகிறார்கள். அத்துடன் இன்னொரு பெரிய பிரச்சனை என்னவென்றால், தனியார் நிதி நிறுவனங்களில் கடன் தொகையை முறையாக செலுத்தாவிட்டால் உங்கள் சிபில் ஸ்கோர் கடுமையாக பாதிக்கும். எனவே நுகர்வோர் கடனை வாங்கும் போது கவனமாக இருங்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

consumer loan: People who buy products like refrigerator, TV, cell phone in EMI, make a big mistake?

Ordinary people who buy household items like refrigerator, TVs, washing machines, cell phones often make the same mistake over and over again. What is wrong with them doing that? Let's see now
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X