சமையல் எண்ணெய் விலை தொடர்ந்து சரிவு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மத்திய அரசு கலால் வரி குறைப்பால் எப்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு 9.5 ரூபாய் குறைந்துள்ளதோ, அதேபோல் இந்தோனேசியா சமையல் எண்ணெய் மற்றும் சமையல் எண்ணெய் உற்பத்திக்கான மூலப்பொருட்கள் மீது விதித்திருந்த கட்டுப்பாடுகளை நீக்கி ஏற்றுமதி தொடங்கியதில் இருந்து இந்தியாவில் சமையல் எண்ணெய் விலை குறையத் துவங்கியுள்ளது.

 
சமையல் எண்ணெய் விலை தொடர்ந்து சரிவு..!

இந்தோனேசியாவின் எண்ணெய் ஏற்றுமதி தடை மூலம் பின்பு சர்வதேச சந்தையில் சமையல் எண்ணெய்யின் விலை உயர்ந்த இதேவேளையில் அந்நாட்டு வர்த்தகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் எண்ணெய் ஏற்றுமதியை படிப்படியாகக் குறைக்கத் துவங்கியுள்ளது.

இதன் வாயிலாக எண்ணெய்-எண்ணெய் வித்துக்களின் விலை கடந்த ஒரு வாரத்தில் பெரிய அளவில் குறைந்துள்ளது. இதனால் கச்சி கனி கடுகு எண்ணெய் விலை ரூ.40 குறைந்துள்ளது. இது சமையல் எண்ணெய் விலையில் குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது.

பாகிஸ்தான் அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி.. இந்தியாவை விட 3 மடங்கு அதிகம்..!

கடுகு விலை கடந்த வாரத்தை விட இந்த வாரம் ஒரு குவிண்டால் ரூ.7,515-7,565 ஆக இருந்தது தற்போது 100 ரூபாய் குறைந்துள்ளது. இதன் எதிரொலியாகக் கடுகு தாத்ரி எண்ணெய் குவிண்டாலுக்கு ரூ.250 குறைந்து ரூ.15,050 ஆக உள்ளது. மறுபுறம், கடுகு பாக்கி கானி மற்றும் கச்சி கனி எண்ணெய் விலை டின்னுக்கு (15 கிலோ) ரூ.40 குறைந்து முறையே ரூ.2,365-2,445 மற்றும் ரூ.2,405-2,515 ஆக உள்ளது.

வெளிநாட்டுச் சந்தைகளில் உயர்வு இருந்தபோதிலும், சோயாபீன் தானியங்கள் மற்றும் சோயாபீன் லூஸ் விலைகள் குறைந்துள்ளது. இதன் மூலம் ஒரு குவின்டால் சோயாபீன் தானியங்கள் விலை ரூ. 7,025-7,125 மற்றும் சோயாபீன் லூஸ் விலை ரூ. 6,725-6,825 ஆகச் சரிந்துள்ளது. சுத்திகரிக்கப்பட்ட நிலக்கடலை சால்வென்ட் டின்னுக்கு ரூ.25 குறைந்து, ரூ.2,625-2,815 ஆக உள்ளது.

கடந்த வாரம் கச்சா பாமாயில் விலை குவிண்டாலுக்கு ரூ.500 குறைந்து ரூ.14,850 ஆகவும், பாமாயில் டெல்லி ரூ.600 குறைந்து ரூ.16,350 ஆகவும், பாமாயில் கண்டலா ரூ.520 குறைந்து ரூ.15,200 ஆகவும் உள்ளது. இந்த விலை ரீடைல் சந்தையிலும் எதிரொலித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

cooking oil price falls after Indonesia's exports picks up

cooking oil price falls after Indonesia's exports picks up சமையல் எண்ணெய் விலை தொடர்ந்து சரிவு..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X