இந்தியாவை மிரட்டும் பணவீக்கம்.. இந்த பிரிவு மக்களுக்கு அதிக பாதிப்பு..!!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக நாடுகள் பெரும் போராட்டத்திற்குப் பின்பு கொரோனா தொற்றுப் பாதிப்பை கட்டுப்படுத்திய நிலையில், தற்போது பொருளாதாரம் மற்றும் வர்த்தக வளர்ச்சிக்கான திட்டத்தை வகுக்கவும், முக்கியமான கொள்கை மாற்றங்களை செய்யவும் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்கு முக்கியக் காரணம் பணவீக்கம்..

 

அக்டோபர் மாதத்திற்கான பணவீக்க அளவீடுகளை உலக நாடுகள் வெளியிட்டுள்ள நிலையில் அமெரிக்கா 30 வருடம் இல்லாத அளவிற்குப் பணவீக்கம் அதிகரித்துள்ளது. ஜெர்மனியில் 4.5 சதவீதம், ரஷ்யா 7 சதவீதம், பிரேசில் 10 சதவீதம், துருக்கி 20 சதவீதம், அர்ஜெண்டினா 50 சதவீதம் எனப் பல நாடுகளில் பல வருட உச்சத்தைத் தொட்டு உள்ளது.

இந்நிலையில் இந்தியாவின் நிலை என்ன..? இந்தியா இதை எப்படிச் சமாளிக்கப்போகிறது..?

சிறு முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் 2 வாய்ப்புகள்.. நீங்க ரெடியா..!

 stagflation என்றால் என்ன..?

stagflation என்றால் என்ன..?

1960களில் 70களில் மிகவும் பிரபலமாக இருந்த stagflation சொல் தற்போது மீண்டும் உலக நாடுகள் மத்தியில் பிரபலமாகியுள்ளது. அதாவது பொருளாதார வளர்ச்சியில் தேக்கம் (stag-nant) இதேவேளையில் அதிகளவிலான பணவீக்கம் (In-flation) இருப்பது தான் stagflation. இதுதான் தற்போதைய உலக நாடுகளின் உண்மை நிலவரம்.

 இந்தியாவின் நிலை என்ன..?

இந்தியாவின் நிலை என்ன..?

இந்தியாவில் stagflation மூலம் அதிகளவிலான பாதிப்புகள் பெரிய அளவில் இல்லை ஆனால், அதிகரித்துள்ள பணவீக்கம் மூலம் இந்தியாவில் பல பிரச்சனைகள் உருவாகியுள்ளது.

இந்தியாவில் தற்போது ரீடைல் பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் இலக்கிற்குள் இருக்கும் காரணத்தால் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை என்றாலும் விலைவாசி உயர்வு நாட்டின் வர்த்தகச் சந்தையைக் கடுமையாகப் பாதிக்கும்.

 ரீடைல் பணவீக்கம்
 

ரீடைல் பணவீக்கம்

2019அதாவது கொரோனா துவங்குவதற்கு முன்பாக ரீடைல் பணவீக்கம் ரிசர்வ் வங்கி இலக்கிற்குள் தான் இருந்தது. ஆனால் கொரோனா தொற்று வந்த பின்பு சந்தையில் டிமாண்ட் பெரிய அளவில் குறைந்த வேளையிலும் பொருட்களின் விலை குறையாமல் தொடர்ந்து உயர்வாகவே இருந்தது.

 உணவு மற்றும் எரிபொருள்

உணவு மற்றும் எரிபொருள்

இந்த நிலைக்கு மிக முக்கியக் காரணம் உணவு மற்றும் எரிபொருள் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றங்கள் தான், இதைத் தற்காலிக தாக்கம் தான் என்றாலும் நீண்ட காலம் இது தொடரும் போது நாட்டின் வளர்ச்சி பெரிய அளவில் பாதிக்கும், இதுதான் தற்போது இந்தியாவில் நடந்துள்ளது.

 core inflation அளவீடு

core inflation அளவீடு

இந்தத் தற்காலிக பணவீக்க பிரச்சனைகள் அவ்வப்போது இருக்கும் காரணத்தால் கொள்கை வகுப்பாளர்கள் பொதுவாகவே core inflation அளவீட்டை மையமாக வைத்து திட்டத்தையும் முடிவுகளையும் வகுப்பார்கள். அதாவது ரீடைல் பணவீக்கத்தில் உணவு மற்றும் எரிபொருள் பணவீக்கத்தை விடுத்த அளவீடுகள் தான் core inflation.

 6 சதவீதம்

6 சதவீதம்

ஆனால் இந்தியாவில் தற்போது core inflation அளவீடும் 6 சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் காரணத்தால் இந்திய பெரிய பிரச்சனையில் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. ரீடைல் பணவீக்கத்தில் தொடர்புடைய உணவு பணவீக்கம் கடந்த சில மாதங்களாகக் குறைந்துள்ள நிலையில், core inflation 6 சதவீதம் என்ற உயர்வான நிலையிலேயே உள்ளது.

 கச்சா எண்ணெய் விலை

கச்சா எண்ணெய் விலை

இந்தச் சூழ்நிலையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தால் மட்டுமே core inflation குறையும், இல்லையெனில் கட்டாயம் குறையாது. மேலும் நவம்பர் - மார்ச் வரையிலான காலகட்டத்திற்கு இந்தியாவில் கோர் பணவீக்க அளவீடுகள் 6 சதவீதம் அளவிலேயே இருக்கும், அடுத்த நிதியாண்டில் இருந்து 5.5 சதவீதம் வரையில் குறையும் என ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 அதிகப் பாதிப்பு யாருக்கு

அதிகப் பாதிப்பு யாருக்கு

இந்த அதீத பணவீக்கத்தால் இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளது நகர்புறத்து ஏழை மக்கள் தான். நடப்பு நிதியாண்டில் அதிகரித்துள்ள பணவீக்கத்தால் நகரத்து ஏழை மக்கள் 7 சதவீதம் வரையில் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதேபோல் நகரத்துப் பணக்காரர்கள் 6.4 சதவீதம் அளவில் தான் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதேபோல் கிராமப்புறத்தில் இருக்கும் அனைத்து தட்டு மக்களும் 5.9 சதவீதம் வரையில் பாதிக்கப்பட்டு உள்ளனர் என NSSO அமைப்பின் தரவுகள் கூறுகிறது

 விலைவாசி உயர்வு

விலைவாசி உயர்வு

ஒரு பொருளின் விலை பல முக்கியக் காரணிகள் அடிப்படையாகக் கொண்டு நிர்ணயம் செய்யப்படுகிறது. அப்படி இருக்கையில் முக்கிய வர்த்தகப் பொருட்களின் விலை அதிகரித்தால் மக்கள் மத்தியில் நுகர்வின் அளவு பாதிக்கும் இதனால் நாட்டின் வர்த்தகமும் பாதிக்கும். விலைவாசி உயர்வு ஒரு சங்கிலி தொடர் பிரச்சனை போல் இது ஒரு நாட்டின் பொருளாதாரத்தையும், நாணய மதிப்பையும் அதிகளவில் பாதிக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Core Inflation higher even after food and Fuel price drops, How it affects people

Core Inflation higher even after food and Fuel price drops, How it affects people
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X