இந்தியாவில் பணமதிப்பிழப்பு செய்யாதது கொரோனா செய்துவிட்டது.. டிஜிட்டல் பொருளாதாரம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் கருப்புப் பணம் ஒழிப்பதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை இரவோடு இரவாகச் செல்லாது என அறிவித்தனர். இதன் மூலம் இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிமாற்றம் அதிகரித்து டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்க முடியும் எனக் கூறப்பட்டது.

 

மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கருப்புப் பணப் புழக்கத்தில் எவ்விதமான மாற்றமும் ஏற்படவில்லை, ஒழிக்கவும் முடியவில்லை.

ஆனால் கொரோனா வந்த பின்பு பாதுகாப்பு மற்றும் தொற்றுக் காரணமாகச் சமானிய மக்கள் முதல் பெரும் பணக்காரர்கள் வரையில் அதிகளவில் டிஜிட்டல் பணப் பரிமாற்ற முறையைப் பயன்படுத்தத் துவங்கியுள்ளனர்.

குறிப்பாக 2020ல் டிஜிட்டல் பேமெண்ட் சேவைகள் பெரு நகரங்களைத் தாண்டி சிறு நகரங்களுக்குச் சென்றுள்ளது. இதனால் டிஜிட்டல் பேமெண்டுகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை பெரிய அளவில் உயர்ந்துள்ளது.

இந்தியாவுக்கு அடித்த ஜாக்பாட்... அமெரிக்க நிறுவனம் பல ஆயிரம் கோடி முதலீடு செய்ய திட்டம்..!

மக்கள் மனநிலை

மக்கள் மனநிலை

தை விடவும் டிஜிட்டல் பணப் பரிமாற்றங்களையே அதிகளவில் விரும்புகின்றனர். இந்த ஒரு வருட காலகட்டத்தில் பணத்தைக் கொண்டு செலவுகளைச் செய்து வந்தவர்களில் 50 சதவீத பேர் டிஜிட்டல் முறைக்கு மாற்றியுள்ளனர்.

ஆன்லைன் வர்த்தகம் ஆதிக்கம்

ஆன்லைன் வர்த்தகம் ஆதிக்கம்

இதற்கு ஏற்றார் போல் கொரோனா பாதிப்பு அதிகமான நாளிலிருந்து இந்தியாவில் காய்கறி, மளிகை பொருட்கள், ஆடை, எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வரையில் அனைத்தையும் மக்கள் ஈகாமர்ஸ் தளத்தில் தான் அதிகளவில் வாங்குகின்றனர்.

மக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கும் காரணத்தால் ஈகாமர்ஸ் நிறுவனங்களும் பேமெண்ட் செலுத்தும் போது டிஜிட்டல் முறையைப் பயன்படுத்துவதை எளிதானதாகவும், பாதுகாப்பானதாகவும் கருதுகின்றனர்.

300 மாவட்டங்கள்

300 மாவட்டங்கள்

சமூக ஆய்வு தளமான லோக்கல்சர்கிள் டிஜிட்டல் பேமெண்ட் குறித்து 300 மாவட்டங்களில் சுமார் 15,000 பேரிடம் ஆய்வு நடத்தியுள்ளது. இந்த ஆய்வில் பங்குபெற்றவர்களில் 50 சதவீதம் பேர் டிஜிட்டல் பணப்பரிமாற்றத்திற்கு மாறியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

14 சதவீத இந்தியர்கள்
 

14 சதவீத இந்தியர்கள்

மேலும் இந்த ஆய்வில் சுமார் 14 சதவீதம் பேர் 50 முதல் 100 சதவீத பணப் பரிமாற்றங்களைப் பில் இல்லாமல் தான் வர்த்தகம் செய்வதாகத் தெரிவித்துள்ளனர். இந்த அளவீடு கடந்த நிதியாண்டில் 27 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் வர்த்தக அமைப்புகள் செய்யும் பரிமாற்றங்கள் அனைத்தும் கணக்கிற்கு வருவது அதிகரித்துள்ளது. பில் இல்லாமல் வர்த்தகம் செய்யும் எண்ணிக்கை 50 சதவீதம் குறைந்துள்ளது.

விரிவாக்கம்

விரிவாக்கம்

இந்தக் கொரோனா காலத்தில் டிஜிட்டல் பேமெண்ட் சேவைகள் வர்த்தக அமைப்புகளைத் தாண்டி, வீட்டு வாடகை, வீட்டுப் பணிப்பெண்களுக்குச் சம்பளம், தள்ளுவண்டிக் கடையில் சாப்பிடும் போதும், வீடு வாங்கும் போது, கார் அல்லது பைக் வாங்கும் போது, வீட்டில் ஏதாவது ரிப்பேர் ஆனால் அதற்காகக் கொடுக்கப்படும் கட்டணம், எனப் பல வழிகளில் பல தரப்பு மக்கள் டிஜிட்டல் பேமெண்ட்-ஐ பயன்படுத்தத் துவங்கியுள்ளனர்.

இந்த ஆய்வில் பங்குபெற்ற சிலர் லஞ்சத்தைக் கூட டிஜிட்டல் பரிமாற்றமாகச் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

207 கோடி பரிமாற்றங்கள்

207 கோடி பரிமாற்றங்கள்

இந்த ஆக்டோபர் மாதம் மட்டும் இந்திய மக்கள் சுமார் 207 கோடி டிஜிட்டல் பணப் பரிமாற்றங்களைச் செய்து அசத்தியுள்ளனர். இதோடு கடந்த 5 வருடத்தில் டிஜிட்டல் பேமெண்ட் எண்ணிக்கை 55.1 சதவீதம் வருடாந்திர வளர்ச்சி அடைந்துள்ளது.

இதேபோல் பரிமாற்றம் செய்த பணத்தில் மதிப்பு ஒவ்வொரு வருடமும் 15.2 சதவீதம் அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Corona achieved what demonetization cant do in India: Digital Economy

Corona achieved what demonetization cant do in India: Digital Economy
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X