கொரோனா இறப்பு.. 5 வருடம் சம்பளம்+ கல்விக் கட்டணம்.. இன்னும் பல சலுகைகள்.. ரிலையன்ஸின் நிவாரணம்.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்டில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கமானது மிக மோசமான தாக்கத்தினை ஏற்படுத்தி வரும் நிலையில், பல ஆயிரம் பேர் கொரோனாவின் கோரப்பசிக்கு இறையாகியுள்ளனர்.

 

இதற்கிடையில் பல்வேறு நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களின் இழப்பினை ஈடுசெய்யும் விதமாக, ஊழியர்களின் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றன.

சமீபத்தில் பல நிறுவனங்களும் கொரோனாவால் ஊழியர் மரணம்.. 2 வருட சம்பளத்தை கொடுக்கும் பஜாஜ்..! என்னென்ன உதவிகளை செய்து வருகின்றன என்பதை பார்த்தோம்.

பெரும் நிவாரணம்

பெரும் நிவாரணம்

அந்த வகையில் நாட்டின் மிகப்பெரிய பில்லியனர் ஆன முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், பெருந்தொற்று நோயால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பல்வேறு வகையான அறிவிப்புகளை கொடுத்துள்ளது. இது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பெரும் நிவாரணம் அளிக்கும் ஒரு விஷயமாக இருக்கும் எனலாம்.

5 ஆண்டுகளுக்கு சம்பளம்

5 ஆண்டுகளுக்கு சம்பளம்

நிவாரணத்தின் ஒரு பகுதியாக கொரோனாவினால் இறந்த ஊழியர்களின் குடும்பத்தினருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு தொடர்ந்து சம்பளம் அளிக்கப்படும் என அறிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்பில் நீதா அம்பானி, எங்களின் விலை மதிப்பற்ற சகாக்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கொரோனாவினால் இறந்தவர்களுக்கு எங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிக்கிறோம். இந்த வேதனையை சமாளிக்க பலரும் சிரமப்படுகிறோம்.

ரிலையன்ஸ் ஆதரவளிக்கும்
 

ரிலையன்ஸ் ஆதரவளிக்கும்

ரிலையன்ஸ் நிறுவனம் இறந்த ஊழியர்களின் குடும்பத்தினருக்கு ஆதரவளிக்கும். இந்த மோசமான நிலையில் ரிலையன்ஸ் அவர்களுடன் இருக்கும். கொரோனாவினால் இறந்த ஊழியர் கடைசியாக வாங்கிய சம்பளத்தினை, ஐந்து வருடத்திற்கு வழங்குவதாகவும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கல்விக் கட்டணம்

கல்விக் கட்டணம்

அதேபோல் இறந்தவர்களின் குழந்தைகளின் இளங்கலை கல்லூரி படிப்பு வரையில், 100% கட்டணத்தினை வழங்குவதாக தெரிவித்துள்ளது. அதாவது இந்தியாவில் எந்த நிறுவனமாக இருந்தாலும், கல்வி கட்டணம், விடுதி கட்டணம், புத்தக கட்டணம் ஆகியவற்றை ரிலையன்ஸ் நிறுவனம் வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது.

மருத்துவ செலவுகள்

மருத்துவ செலவுகள்

ஊழியர்களின் மனைவி மற்றும் குழந்தைகள் (இளங்கலை பட்ட படிப்பு வரை), பெற்றோர் என அனைவருக்கும் 100 சதவீதம் மருத்துவ செலவுகளை ரிலையன்ஸ் நிறுவனம் ஏற்கும் என்றும் அறிவித்துள்ளது. அதே போல கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஊழியர்கள், அவர்களது குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தால், அவர்களுக்கு சிறப்பு விடுமுறை அளிக்கப்படும்.

ரூ.10 லட்சம்

ரூ.10 லட்சம்

அந்த காலகட்டத்தில் ஊழியர்களுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் இது உதவியாக இருக்கும். இதே போல கொரோனாவினால் இறந்த ஆஃப் ரோல் ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வரை கொடுக்கப்படும் என்றும் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவர் நீதா அம்பானி தெரிவித்துள்ளார்.

நேரடியாக உதவி வழங்கப்படும்

நேரடியாக உதவி வழங்கப்படும்

இந்த 10 லட்சம் ரூபாய் குடும்ப உறுப்பினர்களை இழந்து வாடும் குடும்ப உறுப்பினர்களை ஆதாரிப்பதற்கும், பராமரிப்பதற்கும், நாமினிக்கு நேரடியாக கொடுக்கப்படும். இந்த நிதியானது ரிலையன்ஸ் அறக்கட்டளை மூலம் வழங்கப்படும். ஆக கொரோனாவினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நலனை கருத்தில் கொண்டு, நிதி உதவி, கல்வி கட்டணம் உள்ளிட்ட பல சலுகைகளும் குடும்பத்தினருக்கும் வழங்குவது பெரும் நிவாரணம் அளிக்கும்.

முகேஷ் சம்பளம் பெறவில்லை

முகேஷ் சம்பளம் பெறவில்லை

அதோடு பெரும்தொற்று காரணமாக முகேஷ் அம்பானி 2020 - 21ம் ஆண்டிற்கான எந்த சம்பளத்தினையும் பெறவில்லை. இருப்பினும் மற்ற முக்கிய நிர்வாக இயக்குனர்கள் மற்றும் முழு நேர இயக்குனர்களான நிகில் ஆர் மெஸ்வானி மற்றும் ஹிட்டல் ஆர் மெஸ்வானி ஆகியோருக்கு 24 கோடி ரூபாய் மதிப்பிலான சம்பளம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Coronavirus impact: from kids education to salary up to 5 years, RIL extends helps to family deceased employees

Coronavirus impact: from kids education to salary up to 5 years, RIL extends helps to family deceased employees
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X