கொரோனாவால் பெருத்த அடி வாங்க போகும் இந்திய தொழில்துறை.. சாதகம் என்ன? பாதகம் என்ன?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சீனாவினை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா தற்போது அண்டை நாடுகளையும் ஆட்டிப்படைக்க ஆரம்பித்துள்ளது என்றே கூறலாம்.

 

கொரோனா தாக்கத்தினால் பல உயிர்கள் பலியாகி கொண்டிருக்கும் அதே வேளையில், சீனாவின் அடிமடியிலேயே கைவைத்துள்ளது என்று தான் கூறவேண்டும். அது தான் சீனாவின் ஜிடிபி.

சீனாவில் 1,750 பேருக்கு மேல் பலியாகியுள்ள நிலையில், சுமார் 70,000 பேருக்கு மேல் இந்த கொடிய வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சார்ஸ் வைரஸை விட மோசம்

சார்ஸ் வைரஸை விட மோசம்

இந்த கொடிய கொரோனா வைரஸானது கடந்த 2003ல் தாக்கிய சார்ஸ் வைரஸினை விட மோசமான வைரஸாகும். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பலி எண்ணிக்கைக்கு மத்தியில் இந்த வைரஸ் பரவலை ஒரு அவசர நிலை என்று உலக சுகாதார அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இப்போது 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் மக்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. ஆக இனி வரும் நாட்களில் இதன் தாக்கமும் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்தியாவிலும் பாதிப்பு இருக்கலாம்

இந்தியாவிலும் பாதிப்பு இருக்கலாம்

ஒரு புறம் மக்களை வாட்டிவதைக்கும் இந்த கொரோனாவால், வர்த்தகமும் சீர்குலைந்து வருகிறது. இப்பிரச்சனை உலக நாடுகள் முழுவதிலும் எதிரொலிக்க வாய்ப்பிருக்கிறது. மறுபுறம் சீனாவில் பொருட்களுக்கான தேவை மென்மையாக மாறும்போது, இந்திய நிறுவனங்கள் அவற்றை உணர வாய்ப்புள்ளது.

சீனாவின் வர்த்தக பங்காளி
 

சீனாவின் வர்த்தக பங்காளி

இந்தியா சீனாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக உள்ளது. சீனாவின் மிகப்பெரிய ஏற்றுமதியாளராகவும், இரண்டாவது பெரிய வர்த்தக இறக்குமதியாளராகவும் இந்தியா உள்ளது. இங்கு தேவை மற்றும் வழங்கல் ஆகிய இரண்டின் மையமாக உலகளாவிய மதிப்பில், இந்தியா ஒரு முக்கிய பங்கினை கொண்டுள்ளது.

வளர்ச்சி மதிப்பீடு குறைப்பு

வளர்ச்சி மதிப்பீடு குறைப்பு

இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களில் சீனா மிகப்பெரிய 14% பங்கைக் கொண்டுள்ளது. சீனாவின் பொருளாதார நடவடிக்கைகளில் எந்தவொரு நீண்டகால இடையூறும், அதன் ஜிடிபியில் எதிரொலிக்கும். இந்த நிலையில் ஏற்கனவே சீனாவின் முழு ஆண்டு வளர்ச்சியினை ஏற்கனவே 5.8%ல் இருந்து 5.5% சதவிகிதமாக சிட்டி குறைத்துள்ளது.

சீனா –இந்தியா இறக்குமதி பற்றாக்குறை

சீனா –இந்தியா இறக்குமதி பற்றாக்குறை

சீனாவிலிருந்து அதிகளவில் பொருட்கள் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் நிலையில், இந்தியா அதிகளவு பற்றாக்குறையையும் எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2016 - 17ல் 61.3 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை இறக்குமதி செய்துள்ளது. இதே இந்தியா 10.2 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதியும் செய்தும் உள்ளது.

ஏற்றுமதி – இறக்குமதி

ஏற்றுமதி – இறக்குமதி

இதே 2017 - 18ல் 74.4 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை இறக்குமதி செய்த நிலையில், இந்தியா சீனாவுக்கு 13.3 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. இதே 2018 - 19ல் 70.4 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை இறக்குமதி செய்த நிலையில், இந்தியா சீனாவுக்கு 16.8 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது.

கொரோனா தந்த ஆறுதல்

கொரோனா தந்த ஆறுதல்

சீனாவில் ஏற்பட்ட இந்த நெருக்கடியானால் பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்பட்ட பிரச்சனையினால், கச்சா எண்ணெய் விலை 2018ல் காணப்படாத அளவுக்கு கடந்த ஜனவரி மாத உச்சத்திலிருந்து 25% குறைந்துள்ளது. இது போராடி வரும் இந்தியாவுக்கு சற்றே நிவாரணத்தினை அளித்து வருகிறது என்று கூறலாம். ஏனெனில் இந்தியாவில் தேவைப்படும் மொத்த எண்ணெய் தேவைகளில் 80% இறக்குமதியை நம்பித் தான் உள்ளது. ஆக பணவீக்கம் அதிகரித்து வரும் இந்த நிலையில் எண்ணெய் விலை குறைந்திருப்பது சற்று ஆறுதலை கொடுத்துள்ளது. இது பொருளாதாரத்திலும் ஒரு வளர்ச்சியை கொடுக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

கேர் மதிப்பீடு எச்சரிக்கை

கேர் மதிப்பீடு எச்சரிக்கை

எனினும் இந்த வைரஸ் தோன்றிய காலத்தின் அருகில் இருக்கும் காலம் சவாலானது என்பதை நிரூபிக்கும் விதமாக, சீனாவின் தொழிசாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் இந்தியாவுக்கு கிடைக்க வேண்டிய அத்தியாவசியமான பொருட்களின் ஓட்டத்தை இது சீர்குலைக்கும். இதன் தாக்கம் நீண்ட காலமாக இருந்தால் அது இந்தியாவின் இறக்குமதியை பாதிக்கும் என்பதால், அதற்கு மாற்றாகக் கண்டுபிடிப்பது சற்று சவாலான விஷயமாக இருக்கலாம் என்றும் கேர் மதிப்பீடு அறிக்கை இந்தியாவை எச்சரித்துள்ளது.

இதில் எல்லாம் தாக்கம் இருக்கும்

இதில் எல்லாம் தாக்கம் இருக்கும்

மின்னணு கூறுகள், மின் அல்லாத இயந்திரங்கள், இயந்திர கருவிகள், உலோகப்பொருட்கள், ஆர்கானிக் கெமிக்கல்ஸ், மருந்து பொருட்கள் போன்ற துறைகள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களில், சீனாவின் கொரோனா தாக்கம் இருக்கலாம். அதாவது சரியான நேரத்தில் மூலதன பொருட்கள் இல்லாமல் வர்த்தகம் பாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

செலவை அதிகரிக்க வழிவகுக்கும்

செலவை அதிகரிக்க வழிவகுக்கும்

எனினும் இந்த தாக்கம் தொடரும் பட்சத்தில் இது உற்பத்தியை பெருக்க தூண்டும். இல்லையெனில் சீனாவுக்கு மாற்றை கட்டாயப்படுத்தக்கூடும். இது அதிக செலவினங்களுக்கு வழிவகுக்கும். ஆக இப்போதைக்கும் சில இந்திய நிறுவனங்களே தாக்கத்தினை உணர்ந்துள்ளன. சீனா புத்தாண்டு காரணமாக பெரும்பாலான இறக்குமதியாளார்கள் அதிகப்படியான சரக்குகளை சேமித்து வைத்து இருப்பதால் இதுவரை அதன் தாக்கம் வெளிப்படவில்லை.

பெரும் சவால்கள்

பெரும் சவால்கள்

ஆனால் சீனா நிறுவனங்கள் கடந்த வாரமே தங்களது நிறுவனங்களை திறக்க திட்டமிட்டிருந்த நிலையில், இந்த கொடிய கொரோனாவால் இன்று வரை மூடப்பட்டுள்ளன. இது அடுத்த மாதம் மட்டுமே திறக்க திட்டமிட்டுள்ளன. ஆக மீண்டும் சப்ளை தொடங்காவிட்டால், இந்திய நிறுவனங்கள் இன்னும் சில வாரங்களில் பற்றாக்குறையை உணரக்கூடும். இதனால் மூலப்பொருட்களுக்கு இல்லாமல் போகும். குறிப்பாக ஆட்டோமொபைல் துறை மற்றும் எலட்ரானிக் துறைகள், பார்மா நிறுவனங்கள் இதனால் பெரும் சவால்களை எதிர்கொள்ள கூடும்.

பலத்த அடி

பலத்த அடி

ஏற்கனவே மிக வீழ்ச்சி கண்டுள்ள ஆட்டோமொபைல் துறையில், இது பலத்த அடியை கொடுக்க கூடும். அதிலும் வரவிருக்கும் ஏப்ரலில் அமலாகவிருக்கும் பிஎஸ் 6 விதிகளுக்கு ஏற்ப புதிய வாகன உதிரி பாகங்களும், மின்சார வாகனங்களுக்களுக்கான உதிரி பாகங்களும் நிறைய தேவைப்படும் இந்த நேரத்தில் இந்த தாக்கம் வந்துள்ளது. ஆக இது இந்திய வாகனத் துறையில் மிக பலத்த அடியைக் கொடுக்க கூடும்.

வாகன உற்பத்தி வீழ்ச்சி காணலாம்

வாகன உற்பத்தி வீழ்ச்சி காணலாம்

குறிப்பாக சீனாவிலிருந்து 10- 30% வாகன உதிரி பாகங்கள் இறக்குமதி செய்யப்படும் நிலையில், சில நிறுவனங்கள் அசெம்பிளி பொருட்களை இறக்குமதி செய்து அவற்றை அப்படியே விற்பனை செய்கின்றன. இது இந்தியா வாகனத்துறையில் முக்கிய பங்கு வகித்து வரும் நிலையில், ஒரு கூறு வழங்கப்படுவது குறைந்தால் கூட இது ஒட்டுமொத்த வாகன துறையையும் வீழ்ச்சி காணக்கூடும். இதனால் இந்த ஆண்டு வாகன உற்பத்தி 8.3% குறையலாம் என பிட்ச் மதிப்பீட்டு நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.

இந்தியாவின் மருத்துவ துறையையும் பாதிக்கும்

இந்தியாவின் மருத்துவ துறையையும் பாதிக்கும்

இதனால் டாடா மோட்டார்ஸ், மகேந்திரா அன்ட் மகேந்திரா, ஹீரோ மோட்டோ கார்ப், டிவிஎஸ் மோட்டார்ஸ் மற்றும் பஜாஜ் ஆட்டோ ஆகிய நிறுவனங்கள் சிறிது தாக்கத்தை உணரலாம். இதே மருத்துவ மூலதன பொருட்களும் வீழ்ச்சி காணும் என்பதால், பார்மா துறையும் வீழ்ச்சி காணும் என்றும் கூறப்படுகிறது. இவ்வாறு சீனாவினை நம்பியுள்ளது பல ஆண்டுகளாக பல மடங்கு அதிகரித்துள்ளது. தற்போது செயலில் உள்ள மருந்துகளில் 67% சீனாவில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது.

மருந்துகள் விலை அதிகரிக்கலாம்

மருந்துகள் விலை அதிகரிக்கலாம்

சீனாவில் தற்போதுள்ள நிலையில் மீண்டால் கூட, மருத்துவ துறையில் எந்த பாதிப்பும் இருக்காது. ஆனால் இன்னும் சில காலத்திற்கு கொரோனா தாக்கம் இருந்தால், அது மருந்துகளின் விலையில் எதிரொலிக்கும். மேலும் உள்நாட்டு மருந்து உற்பத்தியாளர்களும் மூலதனங்களை அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்ய வேண்டியிருக்கும் என்றும் கேர் மதிப்பீடு கூறியுள்ளது. இதனால் மருந்து பொருள் விலை அதிகரிக்கலாம்.

மருந்து இறக்குமதி

மருந்து இறக்குமதி

கடந்த 2016 -17ல் சீனாவில் இருந்து 1,827 பில்லியன் டாலர் மதிப்பிலான மருந்துகளை இந்தியா இறக்குமதி செய்துள்ள நிலையில், அதில் சீனாவில் இருந்து மட்டும் 67% இறக்குமதி செய்துள்ளது. இதே 2017-18ல் 2,055 பில்லியன் டாலர் மதிப்பிலான மருந்தில் 69% சீனாவில் இருந்தும், இதே 2018 -19ல் 2,401 பில்லியன் டாலர் மதிப்பிலான மருந்து இறக்குமதியில் 68% சீனாவில் இருந்தும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

எலக்ட்ரானிக் பொருட்கள் இறக்குமதி

எலக்ட்ரானிக் பொருட்கள் இறக்குமதி

இதே போல சீனாவில் இருந்து அதிகளவிலான எலக்ட்ரானிக் பொருட்களும் இறக்குமதி செய்யப்படுகின்றன. கேர் ரேட்டிங்ஸ் அறிக்கையின் படி, 2016 - 17ல் 45,550 பில்லியன் டாலர் மதிப்பிலான எலக்ட்ரானிக் பொருட்கள் இறக்குமதியில், 53.9% சீனாவில் இருந்து தான் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதே 2017 - 18ல் 55,574 பில்லியன் டாலர் மதிப்பிலான எலக்ட்ரானிக் பொருட்களில் 56.6% சீனாவில் இருந்தும், இதே 2018 - 19ல் 60,219 பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்களில் 68% சீனாவில் இருந்தும் இறக்குமதி செய்யப்படுகிறது.

மூலப் பொருட்கள் இறக்குமதி

மூலப் பொருட்கள் இறக்குமதி

பார்மா செக்டாரை போல எலக்ட்ரானிக் பொருட்களை அதிகளவில் இறக்குமதி செய்வதில்லை. இதனால் இவைகள் வேறு நாடுகளை தேட வேண்டிய அவசியத்தில் உள்ளன. டிவியில் பயன்படுத்தப்படும் வாகன உதிரி பாகங்களில் 75%மும், 85% ஸ்மார்ட்போன்களில் 85%, ஏசிகளுக்கு உதிரி பாகங்கள் முழுவதும் சீனாவில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது.

நுகர்வு வீழ்ச்சி

நுகர்வு வீழ்ச்சி

சீனாவில் நிலவி வரும் மோசமான நிலையினால் அங்கு கச்சா எண்ணெய் மற்றும் உலோகப் பொருட்கள் நுகர்வும் வெகுவாக குறைந்துள்ளன. இதனால் இதன் விலைகள் மிக வீழ்ச்சி கண்டுள்ளன. இது சர்வதேச சந்தைகளில் அழுத்தத்தினை காண வழிவகுக்கும். இதனால் ஹிண்டால்கோ, நால்கோ, டாடா ஸ்டீல், ஜே.எஸ் டபள்யூ ஸ்டீல் உற்பத்தியாளர்களும் வீழ்ச்சியைக் காணக்கூடும்.

சுற்றுலா துறை

சுற்றுலா துறை

சுற்றுலா துறையை பொறுத்த வரையில், கடந்த 2019ம் ஆண்டில் 10.9 மில்லியன் பேர் இந்தியா வந்துள்ளதாகவும், இதில் சீனாவில் இருந்து 3% வந்தாதாகவும் கூறப்படுகிறது. இந்த பங்கு மிகக் குறைவும் என்றாலும், 2011 வாக்கில் 11.4% ஆக இது இருந்தது குறிப்பிடத்தக்கது. சீனாவில் தற்போது நிலவி வரும் பதற்றமான் சூழ்நிலைக்கு மத்தியில் விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

பயன் யாருக்கு

பயன் யாருக்கு

கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால், ஏசியன் பெயிண்ட்ஸ், பெர்ஜர் பெயின்ட்ஸ், கன்சாய் நேரோலாக், சுப்ரீம் இண்டஸ்ட்ரீஸ், கெமிக்கல்ஸ் உற்பத்தியாளர்கள் இதனால் பயனடையலாம். மேலும் சீனாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்கும் பட்சத்தில், இந்திய கெமிக்கல்ஸ் உற்பத்தியாளர்கள் விலை உயர்த்தக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது சாயப்பட்டறைகளிலும் விலைகளிலும் எதிரொலிக்கலாம். இது சீனா நிறுவனங்களின் வாய்ப்பை பயன்படுத்த ஒரு வாய்ப்பாக அமையும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சில நிறுவனங்கள் லாபம் கண்டாலும், பெரும்பாலான நிறுவனங்கள் பின்னடைவை சந்திக்க வழி வகுக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Coronavirus impact: how it impact of your money?

Falling crude oil prices may support Indian painting manufacturers and plastics, but Metals players like Hindalco, Nalco, Tata Steel, JSW Steel may clock lower realisation per tonne. And some other sector impact of coronavirus in coming days. Its mainly affect auto sector, electronic sector etc.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X