கொரோனா பீதியில் முடங்கிய வைர வியாபாரம்.. கதறும் இந்திய வியாபாரிகள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகம் முழுவதும் தனது வலிமையை காட்டி வரும் கொரோனா, சீனா மட்டும் அல்ல, உலகம் முழுவதும் காவு வாங்க ஆரம்பித்துள்ளது.

 

இது உயிர்பலியை மட்டும் அல்ல, பொருளாதாரத்திலும் எதிரொலித்து வருகிறது.

இந்த தொற்று நோயால் இந்தியா உள்ளிட்ட பல முக்கிய சந்தைகளில் பலவீனமான தேவையும் இருந்து வருகிறது.

மொத்த வர்த்தகமும் வீழ்ச்சி

மொத்த வர்த்தகமும் வீழ்ச்சி

இந்த ஆபத்தான கொரோனாவின் வெடிப்பு காரணமாக சீனாவில் அனைத்து தொழில் துறைகளும் முடங்கி போயுள்ளன. இதனால் சீனாவின் பொருளாதாரமும் பெருத்த அளவில் அடி வாங்கியுள்ளது. இதனால் அனைத்து ஏற்றுமதி இறக்குமதி தொழில்களும் வீழ்ச்சி கண்டுள்ளன. இந்த நிலையில் இந்திய வைர ஏற்றுமதியும் வீழ்ச்சி கண்டுள்ளது.

சீனாவுடனான மொத்த வர்த்தகம்

சீனாவுடனான மொத்த வர்த்தகம்

இது குறித்து இக்ரா மதிப்பீட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின், உலகளாவிய வைர தேவையில் சீனா மற்றும் ஹாங்காங் பகுதியில் 14 - 15% இந்தியா பங்கு வகிக்கிறது என்று இக்ரா கூறியுள்ளது. ஆனால் இப்பகுதியில் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி வைர ஏற்றுமதியும், மெருகூட்டப்பட்ட வைர ஏற்றுமதி 35% ஆக இருப்பதாக இத்துறை சார்ந்த மதிப்பீடுகள் காட்டுகின்றன. ஆக மொத்தத்தில் இந்தியா வைர சந்தைக்கு சீனா முக்கிய வர்த்தராகும்.

சீனா முக்கிய சந்தை
 

சீனா முக்கிய சந்தை

இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்ட வைரங்களை நுகர்வு செய்வது மட்டுமல்லாமல், வைரங்கள் பதிக்கப்பட்ட நகைகளை உற்பத்தி செய்வதோடு, அமெரிக்கா, தென் கிழக்கு ஆசியா மற்றும் பிற ஆசிய சந்தைகளுக்கும் பெரிய அளவில் ஏற்றுமதி செய்கிறது என்பதால், சீனா ஒரு முக்கிய சந்தை என்று இக்ரா தெரிவித்துள்ளது.

உலகளாவிய வர்த்தக மையம்

உலகளாவிய வர்த்தக மையம்

சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் பெரும்பாலும் ஹாங்காங் வழியாக அனுப்பப்படுகிறது. இது பெல்ஜியம் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸூடன் இணைந்து ஒரு முக்கிய உலகளாவிய வைர வர்த்தக மையமாக உள்ளது என்று இந்த மதிப்பீட்டு நிறுவனம் கூறியுள்ளது. மேலும் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் நிலவி வரும் வர்த்தக பதற்றங்களால் ஒரு வெப்பத்தை உணர்கின்றன.

பொருளாதாரம் பாதிப்பு

பொருளாதாரம் பாதிப்பு

சீனாவில் கொரோனாவின் தாக்கத்தினால் பொருளாதாரத்தின் தாக்கம் மிக மோசமாகி விட்டது. இது சீனாவில் நகை விற்பனைக்கு மிக மிக பரபரப்பான காலத்தில் ஏற்பட்டுள்ளது. சீனாவின் பண்டிகை காலமான சந்திர புத்தாண்டு ஜனவரி 25 முதல் பிப்ரவரி 08 வரை நீடித்தது என்று இக்ரா தெரிவித்துள்ளது. சீனாவில் நிலவி வந்த பதற்றம் காரணமாக தேவையும் இந்த காலத்தில் குறைந்து விட்டது.

தொழிலில் அழுத்தம்

தொழிலில் அழுத்தம்

மேலும் தற்போது வரை இந்த வைரஸூக்கு ஒரு முடிவு கட்டப்பட்டதாக தெரியவில்லை. இதனால் சீனாவின் மொத்த வர்த்தகத்திலும் ஒரு அழுத்தம் ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதே நிலை தொடரும் பட்சத்தில் தொழில் துறை மேலும் அழுத்தத்தை காணும். குறிப்பாக வைர துறையில் மேலும் அழுத்தம் காணும். பணப்புழக்கம் பாதிக்கும். இது வைரத்துறையில் ஒரு தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.

தேவையை குறைக்கலாம்

தேவையை குறைக்கலாம்

ஆக இத்துறைக்கு கடன் வழங்குவது சிபிடி (cut and polished diamond) துறையினரின் கடன் சுயவிவரத்தை பாதிக்கும் என்றும் இக்ராவின் துணைத் தலைவர் ஜே சேத் கூறியுள்ளார். மேலும் சீனாவில் நிலவி வரும் இந்த தாக்கம் உலகளாவிய தேவைகளிலும் எதிரொலிக்கக் கூடும். இது தேவையை குறைக்கும் என்றும் சேத் கூறியுள்ளார்.

வைர ஏற்றுமதி பாதிக்கலாம்

வைர ஏற்றுமதி பாதிக்கலாம்

ஆக தற்போது கொரோனா காரணமாக உலகளாவிய சந்தையில் வைர ஏற்றுமதி பாதிக்க வாய்ப்புள்ளது என்று இக்ரா தெரிவித்துள்ளது. உலகளவில் நிலவி வரும் பொருளாதார தாக்கத்தால் பணம் வசூல் தாமதமாகலாம். இதனால் பணப்புழக்கங்களும் குறையலாம். ஆக வங்கியில் வாங்கிய கடனுக்கான பில்கள் தாதமாகலாம். இதனால் பணப்புழக்கத்தின் தாக்கம் மிகத் தெளிவாகத் தெரியும். இது மேலும் பிரச்சனையை கொண்டு வரலாம். இதனால் இந்தியாவின் வைர சந்தைக்கான பார்வையை நிலையானதிலிருந்து எதிர்மறையாக மாற்றியுள்ளது.

இக்ரா எச்சரிக்கை

இக்ரா எச்சரிக்கை

மேலும் சீனா மற்றும் ஹாங்காங்கில் இந்த நிலை தொடர்ந்தால், மேலும் வைர சந்தையானது பாதிக்கப்படக் கூடும். இதனால் சீனாவில் தொழில் சாலைகள் பூட்டப்பட்டுள்ளதால் சரக்குகள் தேங்கும் நிலை உள்ளது. இதனால் இத்துறையினர் பிரச்சனையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் இக்ரா எச்சரித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Coronavirus impact: ICRA downgrades outlook amid weak demand

ICRA revised its outlook for Indian cut and polished diamond industry from stable to negative in the light of coronavirus impact and weak demand in key markets.
Story first published: Friday, February 21, 2020, 11:16 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X