இந்தியர்கள் வயிற்றில் பால் வார்த்த மருந்தியல் துறை.. எப்படி தெரியுமா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சீனாவில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில் தொழிற்சாலைகள் முடங்கியுள்ளன. இதனால் ஒவ்வொரு துறையிலும் நிலவி வரும் மந்த நிலையினால், அதன் தாக்கம் பல நாடுகளில் எதிரொலிக்க தொடங்கியுள்ளன.

 

அதிலும் சீனாவின் மிகப்பெரிய வர்த்தகத் சந்தையான இந்தியாவும் பதிக்கப்பட்டுள்ளது என்பது நிதர்சனமான உண்மையே.

இந்த நிலையில் இந்தியாவில் உயிரைக்காக்கும் மருந்து துறையில் போதிய மருந்துகள் இல்லை என அரசல் புரசலாக பேசப்பட்டன. இதனால் மருந்து விலைகளும் அதிகரிப்பதாக கூறப்பட்டது.

போதிய மருந்துகள் உள்ளன

போதிய மருந்துகள் உள்ளன

ஆனால் அப்படி ஏதும் இல்லை என இந்திய மருந்தியல் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியான அறிக்கையில், சீனாவில் வெடித்து சிதறிய கொரோனாவின் தாக்கம், இந்தியாவிலும் மருத்துவ துறை எதிர்கொள்ளலாம். இதனால் மருந்துகள் பற்றாக்குறை குறித்த கவலைகள் அதிகரித்து வந்தது. ஆனால் தற்போதைய நிலையை சமாளிக்க போதுமான மருந்துகள் உள்ளன என மருந்தியல் துறை அரசாங்கத்திற்கு உறுதியளித்துள்ளது.

பற்றாக்குறை ஏற்படாது

பற்றாக்குறை ஏற்படாது

மேலும் இந்திய மருந்து உற்பத்தியாளர்கள் தங்கள் மருந்து பொருட்களுக்கான மூலப் பொருட்கள் அல்லது செயலில் உள்ள மருந்துகள் மூலமாக சீனாவையே நம்பியுள்ளனர். இந்த நிலையில் API தொடர்பான ஐந்தாவது பணிக்குழு கூட்டத்தில், இந்திய மருந்து துறை வரும் நாட்களில் மருந்துகள் பற்றாக்குறை ஏற்படாது என்பதை உறுதி செய்துள்ளதாக கெமிக்கல்ஸ் அன்ட் பெர்டிலைசர் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆன்டிபயோடிக் மூல பொருட்கள்
 

ஆன்டிபயோடிக் மூல பொருட்கள்

சில அறிக்கைகளின் படி, இந்திய மருந்து நிறுவனங்கள், சீனாவிலிருந்து தங்கள் மருந்து உற்பத்திக்கான மூலதன பொருட்களில் கிட்டதட்ட 70% வாங்குகின்றன. இது பெரும்பாலும் ஆன்டிபயோடிக் எனப்படும் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் தயாரிக்கும் முக்கிய மூலதனங்களாகும். இவற்றில் மிக முக்கியமான பென்சிலின் ஜி மற்றும் டெட்ராக்கிளின், வைட்டமின் சி, வைட்டமின் டி உள்ளிட்ட வைட்டமின் மருந்துகளுக்கும் இந்த மூலப்பொருட்கள் மிக முக்கியமானவையாக கூறப்படுகிறது. உலகளாவிய பகுதிகளில் சீனா தனது ஆதிக்கத்தை இதன் மூலம் செலுத்தி வருகிறது என்றே கூறலாம்.

கூட்டத்தில் என்ன பேசப்பட்டது?

கூட்டத்தில் என்ன பேசப்பட்டது?

இப்படியொரு நிலையில் தான் இந்த API தொடர்பான ஐந்தாவது பணிக்குழு கூட்டம் திங்கட்கிழமையன்று நடந்துள்ளது. மேலும் இந்தக் கூட்டத்தில் API தொடர்பான பிரிவுகளுக்கு கொள்கை தளர்த்தல் மற்றும் மருந்துகள் உற்பத்தி, அது கிடைப்பதற்கான சுற்றுச்சூழல், மருந்துகள் எளிதில் கிடைப்பதற்கான செயல்முறையை எளிதாக்குவது ஆகியவை பற்றி பேசப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

என்னென்ன சவால்கள்

என்னென்ன சவால்கள்

மேலும் இக்கூட்டத்தில் சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதில் மருந்து துறை எதிர்கொள்ளும் சவால்களும் விவாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது தவிர சுற்றுசூழல் அனுமதிகளை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இது மருந்து உற்பத்தியினை அதிகரிக்க வழிவகுக்கும் எனவும் நம்பப்படுகிறது.

தடை செய்யப்படலாம்

தடை செய்யப்படலாம்

சீனாவின் ஹூபே மாகாணத்தில் கொரோனா வைரஸ் வெடித்ததை அடுத்து, அத்தியாவசிய மருந்துகள் பற்றாக்குறை இல்லை என்பதை உறுதிப்படுத்த 12 முக்கியமான அத்தியாவசிய முக்கியமான மருந்துகளை, நுண்ணுயிர் எதிர்ப்பிகள், வைட்டமின்கள் மற்றும் ஹார்மோன்கள் உள்ளிட்டவற்றை விரைவில் அரசு தடை செய்யக்கூடும் என்று ஆங்கில நாளிதழில் செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரச்சனையை எதிர்கொள்ளலாம்

பிரச்சனையை எதிர்கொள்ளலாம்

தற்போது சீனாவில் நிலவி வரும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில் ,சீனா புத்தாண்டு விடுமுறைகள் வழக்கமாக ஜனவரி 25 முதல் பிப்ரவரி 3 வரை நீளும். ஆனால் தற்போது வரை சீனா தொழில் சாலைகள் முடங்கியுள்ளன. சொல்லபோனால் இன்னும் நீளும் அபாயமே நிலவி வருகிறது. இதனால் இந்திய மருத்துவ துறை சில பிரச்சனைகளை எதிர்கொள்ள கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்திய மருந்தியல் துறை சொல்வது போதிய மருந்துகள் இருந்தால் சரியே. இதனால் பிரச்சனைகள் ஏதும் வராது என நம்புவோமே..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Coronavirus impact: Indian pharma industry assures that there is in enough drugs

Experts say due to coronavirus may shortages of generic drugs in India. But pharma industry has assured government that there are enough drugs and medicines.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X