பகீர் கிளப்பும் ஹார்வர்ட்.. அதிகபட்சமாக உலகின் 70% மக்களை கொரோனா பாதிக்கலாம்! அப்ப பொருளாதாரம்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகெங்கிலும் பரவி வரும் கொரோனாவின் தாக்கம், உலக நாடுகளையே அச்சுறுத்தி வருகிறது என்று கூறலாம். அந்தளவுக்கு மக்கள் மத்தியில் பயத்தை உருவாக்கியுள்ளது.

நாம் இப்படி நினைத்துக் கொண்டிருக்கையில், இன்னும் பலர் கொரோனா பற்றிய தாக்கத்தினை முழுமையாக அறிந்திருக்கவில்லை என்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.

இதை எப்படியேனும் தடுத்து விட முடியாத என போராடி வரும் சீனாவினையே என்ன சேதி என்று கேட்டுள்ள இந்த கொடிய வைரஸால், இது உலகளாவிய தொற்று நோயாக மாறக்கூடும் என்று பீதியை கிளப்புகின்றனர் ஆய்வாளர்கள்.

இத்தனை பேருக்கு பாதிப்பு இருக்குமா?
 

இத்தனை பேருக்கு பாதிப்பு இருக்குமா?

குறிப்பாக சொல்லவேண்டுமானால் ஹார்வர்ட் தொற்று நோயியல் நிபுண மார்க் லிப்சிட் உலக மக்கள் தொகையில் 40 -70% பேர் இந்த கொரோனாவால் பாதிக்கப்படலாம் என்று கணித்துள்ளாராம். மேலும் இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில், எத்தனை பேர் இதன் அறிகுறிகளை காண்பிப்பார்கள் என்றும் கணிக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

ஹாங்காங் பல்கலைக் கழகம் கருத்து

ஹாங்காங் பல்கலைக் கழகம் கருத்து

இதுவே ஹாங்காங் பல்கலைக் கழகத்தின் பொது சுகாதார மருத்துவத்தின் தலைவரான கேப்ரியல் லியுங், தி கார்டியனிடம், உலக மக்கள் தொகையில் 60% பேர் இந்த கொடிய வைரஸால் பாதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளாராம். இதில் 1 -2% வரை இறப்பு விகிதத்துடன் இருக்கும். இந்த ஆபத்தான சூழ்நிலை மாறும் வரை இதன் தாக்கம் இருக்கும் என்று கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

வர்த்தகமும் பாதிப்பு

வர்த்தகமும் பாதிப்பு

இப்படி ஒரு புறம் மக்களை வாட்டி வதைக்கும் வைரஸ் ஒருபுறம், இதன் பீதியினால் பாதிக்கப்படும் தொழில்கள் மறுபுறம். இதனால் ஒட்டுமொத்த உலகமும் பொருளாதார சிக்கலை மேற்கொள்ளக் கூடும் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து முன்னதாக வெளியிடப்பட்ட டன் மற்றும் பிராட்ஸ்ட்ரீட்டின் அறிக்கையின் படி, சீனாவில் அனைத்து செயலில் உள்ள வணிகங்களில் 90% உள்ளடக்கிய 22 மில்லியனுக்கும் அதிகமான வணிகங்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருப்பதாக கூறப்படுகிறது.

சப்ளையும் பாதிக்கும்
 

சப்ளையும் பாதிக்கும்

உலகெங்கிலும் உள்ள குறைந்தது 51,000 நிறுவனங்களில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நேரடி சப்ளையர்கள், பாதிக்கப்பட்ட இந்த டயர் 1 பகுதிகளில் உள்ளனர் என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் சுமார் 50 லட்சம் நிறுவனங்கள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட, டயர் 2 பகுதிகளில் சப்ளையர்களை கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. உலகளாவிய பொருளாதாரத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகக் கருதப்படும் இந்த நிறுவனங்கள், எதிர்காலத்தில் நீடித்த பணி நிறுத்தம் செய்தால், இதன் தாக்கம் உலகம் முழுக்க எதிரொலிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இருநாட்டு வர்த்தகமும் பாதிப்பு

இருநாட்டு வர்த்தகமும் பாதிப்பு

ஆக இந்த கொடிய தாக்கத்தால் சீனா மற்றும் இந்தியாவில் 87 பில்லியன் டாலர் மதிப்புள்ள இரு தரப்பு வர்த்தகத்தைத் இது தகர்த்தெறியும் திறனைக் கொண்டுள்ளது. சொல்லப்போனால் சீனா இந்தியாவுக்கு 70 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. இதே இந்தியாவும் சீனாவுக்கு சில பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. ஆக இந்த தாக்கத்தினால் இதன் இருபுற நடவடிக்கையும் பாதிக்கப்படுவது உண்மையே.

சீனாவுக்கு ஏற்றுமதி

சீனாவுக்கு ஏற்றுமதி

இந்தியாவில் இருந்து ஆர்கானிக் கெமிக்கல்ஸ், காட்டன், தாதுக்கள், பிளாஸ்டிக் பொருட்கள், உப்புகள் உள்ளிட்ட பல பொருட்களை ஏற்றுமதி செய்யப்படுகிறது. மின்சார இயந்திரங்கள், ஆப்டிகல்ஸ், மருத்துவ கருவிகள், வாகன உதிரி பாகங்கள், இரும்பு மற்றும் எஃகு வரை அனைத்தும் இறக்குமதி செய்யப்படுகிறது. சீனா இந்தியாவின் இரண்டாவது பெரிய பங்காளியாகும். 2018 - 19ம் ஆண்டில் இந்தியாவில் மொத்த இறக்குமதியில் 13.7% சீனா பங்கு வகித்துள்ளது. அதே நேரத்தில் இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 5.1% சீனாவிற்கு ஏற்றுமதி செய்ததாக வர்த்தக அமைச்சகத்தின் தரவு கூறுகிறது.

என்னென்ன இறக்குமதி?

என்னென்ன இறக்குமதி?

இந்திய மருந்தியல் தொழில்துறை மருந்துகளை தயாரிக்க சீன இறக்குமதியைச் சார்ந்துள்ளது. செயலில் உள்ள பெரும்பாலான மருந்துகள் சீனாவில் இருந்து வருகின்றது. 30 பில்லியன் டாலர் மதிப்பிலான ஸ்மார்ட்போன் சந்தை, தற்போது உலகின் இரண்டாவது பெரிய சந்தையாக உள்ளது. ஆக இது பெரிய அளவில் இறக்குமதியைச் சார்ந்திருப்பதால் பெரிய இடையூறுகளைக் காணும் என்றும் கூறப்படுகிறது.

சூரிய ஒளியை உறிஞ்சும் மின்கலன்கள் இறக்குமதி

சூரிய ஒளியை உறிஞ்சும் மின்கலன்கள் இறக்குமதி

ஆண்டு முழுவதும் இந்தியாவில் ஏராளமான சூரிய ஒளி ஆற்றல் உள்ளது. ஆனால் அவற்றை சீனாவின் உதவி இல்லாமல் அவற்றை நாம் மின்சாரமாக நம்மால் மாற்ற இயலாது. சீன இறக்குமதியை சார்ந்து தான் இந்தியாவில் பயன்படுத்தப்படும் சூரிய ஒளியை உறிஞ்சும் 80% மின்கலன்கள், சீனாவில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகின்றன.

ஈ-காமர்ஸ் சந்தையை பாதிக்கும்

ஈ-காமர்ஸ் சந்தையை பாதிக்கும்

கடந்த 8 -10 ஆண்டுகளில் அவற்றில் இறக்குமதி செய்யப்பட்ட இறக்குமதியினால் இந்திய சந்தையில் போட்டியின்மையை இது உருவாக்கியது. இது தவிர சீனாவில் இருந்து பொம்மைகள், பர்னிச்சர்கள், கணினிகள், கார்கள், மற்றும் ஒயிட் குட்ஸ் உள்ளிட்ட பல துறைகள் சீனாவினை நம்பியுள்ளன. மேலும் ஸ்மார்ட்போன் வணிகம், டிவிகள் மற்றும் எலக்ட்ரானிக் ஈ-காமர்ஸ் விற்பனையை இது பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஸ்மார்ட்போன் சந்தை

ஸ்மார்ட்போன் சந்தை

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் கிட்டதட்ட 80% உதிரி பாகங்களை சீனாவில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. குறிப்பாக டிஸ்பிளே, மெமரி கார்டு உள்ளிட்ட பாகங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இது தவிர கம்ப்யூட்டர் சம்பந்தமான உதிரி பாகங்கள், நோட்புக்ஸ் உள்ளிட்ட பலவற்றிலும் சீனாவின் பங்கு பெரியதாக உள்ளது.

 ஒயிட் கூட்ஸ் இறக்குமதி

ஒயிட் கூட்ஸ் இறக்குமதி

பிரிட்ஜில் பயன்படுத்தப்படும் கம்பிரஸசர்கள், வாஷிங்மெஷின் இயந்திரம், ஏசியில் பயன்படுத்தப்படும் உதிரிபாகங்கள் உள்ளிட்டவை அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதே போல் கார் உதிரி பாகங்கள், எலக்ட்ரிக் வாகன உதிரி பாகங்கள், வாகன மோட்டார்கள் உதிரி பாகங்கள், மற்ற எலக்ட்ரானிக் பொருட்கள், மருந்துகள், பேட்டரிகள், காலணிகள், அப்பாரல் மற்றும் விளையாட்டு சாதனங்கள், விளையாட்டு உடைகள் என பலவற்றையும் நாம் சீனாவில் இருந்து தான் அதிகளவில் இறக்குமதி செய்கிறோம்.

மடிகணினியின் தாயகம்

மடிகணினியின் தாயகம்

சீனாவின் தொழில் சாலைகள் மூடல் இன்னும் சில காலத்திற்கு தொடர்ந்தால் இது பெரும் நெருக்கடிக்கு வழிவகுக்கும். அதிலும் கொரோனா நிலைக் கொண்டிருக்கும் வுகான் மாகாணமே மிகப்பெரிய கணினி தொழில் சாலைகளில் மிகப்பெரிய தாயகமாகும். இதே ஹூபே மாகாணம் வாகன கூறு தயாரிப்புகளின் மிகப்பெரிய தாயாகமாகும்.

சீனா உலகின் தொழில் சாலை

சீனா உலகின் தொழில் சாலை

சீனா உலகின் தொழில் சாலையாகும். உலகின் 90% கணினிகளை உற்பத்தி செய்கிறது. ஆண்டுக்கு சுமார் 300 மில்லியன் கணினிகளை இது உற்பத்தி செய்கின்றது. இதே உலகின் மொத்த பயன்பாட்டில் 70% ஸ்மார்ட்போன் உற்பத்தியை, ஆண்டுக்கு சுமார் 2 பில்லியன் போன்களை உற்பத்தி செய்கிறது. மேலும் 80% ஏசியை, வருடத்திற்கு சுமார் 110 மில்லியன் ஏசிகளை உலகெங்கிலும் விற்பனை செய்கின்றது. குறிப்பாக தொலைத் தொடர்பு சம்பந்தமான பக்கத்தில் 25% பொருட்கள், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

மற்ற நாடுகள் பாதிப்பு

மற்ற நாடுகள் பாதிப்பு

இறக்குமதி பொருட்களுக்கு அதிகம் சீனாவை சார்ந்திருக்கும் நாடுகள், அதிலும் சிறு உதிரிபாகங்கள் மற்றும் சிறு கூறுகள் இறக்குமதி செய்யப்படும் நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. சீனாவை அதிகம் நம்பியிருக்கும் நாடுகள் அதிகளவில் இந்த கொரோனாவால் பாதிக்கப்படும் என்று சந்தை நிபுணர்கள் அஞ்சுகிறார்கள். ஆக சீனாவை சார்ந்திருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அந்த வகையில் இது இந்தியாவிலும் தாக்கத்தினை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இந்தியாவுக்கு நல்ல வாய்ப்பு

இந்தியாவுக்கு நல்ல வாய்ப்பு

கடந்த புதன்கிழமையன்று கொரோனாவின் தாக்கம், இந்தியாவுக்கு ஒரு நல்ல வாய்ப்பு, இது ஏற்றுமதியை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பு என்று இந்தியாவின் முதன்மை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். குறிப்பாக மேக் இன் இந்தியா திட்டத்தினை விரிவுபடுத்தவும், உதிரி பாகங்கள் உற்பத்திக்கும், இந்தியர்களின் அறிவை மேம்படுத்திக் கொள்ளவும், சர்வதேச சந்தை பொருட்களை உற்பத்தி செய்யவும் இது ஒரு வாய்ப்பாக அமையும். மேலும் இது ஏற்றுமதியை ஊக்குவிக்கவும் வாய்ப்பாக அமையும் என்றும் கூறியிருந்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Coronavirus impact: it’s a good time for India, use this chance

Indian pharma industry is dependent on Chinese imports to make medicines, and Smartphone, vehicle production, solar production and some other sectors based on china. but coronavirus outbreak in china provides an opportunity for india to expand exports, said analysts.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Goodreturns sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Goodreturns website. However, you can change your cookie settings at any time. Learn more